கபாலி

கபாலி
முற்தயாரிப்பு சுவரொட்டி
இயக்கம்பா. இரஞ்சித்
தயாரிப்புஎஸ். தாணு
கதைபா. இரஞ்சித்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புரஜினிகாந்த்
ராதிகா ஆப்தே
ஜான் விஜய்
ரித்விகா
தினேஷ்
கலையரசன்
தன்சிகா
கிசோர் குமார்
ஒளிப்பதிவுஜி. முரளீ
படத்தொகுப்புகே. எல். பிரவீன்
கலையகம்வி கிரியேசன்சு
வெளியீடுசூலை 22, 2016 (2016-07-22)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு165 கோடி[1]
மொத்த வருவாய்307.45 கோடி

கபாலி (Kabali) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்தனர். 21 ஆகத்து 2015 இல் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் கலையகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.[2] மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெற்றது.[3][4][5] கபாலி இந்தியாவில் மட்டும் 3200 திரையரங்குகளில் 2016 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது. இவற்றில் தென்னிந்தியாவில் 2200 அரங்குகளில் திரையிடப்பட்டது.[6] உலக அளவில் அதிக வசூலான இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது.

நடிப்பு

கதைக்களம்

இப்படத்தின் கதைக்களம் மலேசியாவில் உள்ள ஒரு தாதாவின் கதையாக அமைந்துள்ளது. தன்சிகா தாய்லாந்தில் உள்ள ஒரு தாதாவாகவும் ரசினிகாந்தின் மகளாகவும் நடித்துள்ளார்.[7] ராதிகா ஆப்தே தோட்டத் தொழிலாளி குமுதவல்லியாக நடித்துள்ளார். இவர்தான் கபாலியின் மனைவி.

இசை

இசை: சந்தோஷ் நாரயணன். இசை வெளியீடு ஜூன் 12, 2016 என்று திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 11,2016) இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், அன்று மாலையே அதிகாரப்பூர்வமாக இசை வெளியீடப்பட்டது.

மாய நதி, வீர துறந்தரா பாடல்களை உமாதேவி எழுதியுள்ளார்.

1. உலகம் ஒருவனுக்கா-([ரோஷன் ஜாம்ராக், அனந்து, கானா பாலா, அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா, ரோஷன் ஜாம்ராக்])

2. வீரத் துரந்தரா-([ லாரன்ஸ் ஆர், ரோஷன் ஜாம்ராக், பிரதீப் குமார், கானா பாலா)]

3. வானம் பார்த்தேன்-([ பிரதீப் குமார்])

4.மாயா நதி-([ பிரதீப் குமார், ஸ்வேதா மோகன், அனந்து)]

5. நெருப்பு டா-( [அருண்ராஜா காமராஜ்])

மேற்கோள்கள்

  1. "All Time Highest Grossing Tamil films". International Business Times. 12 சூலை 2015. http://www.ibtimes.co.in/photos/all-time-highest-grossing-tamil-films-2881-slide-21709. பார்த்த நாள்: 17 சூலை 2015. 
  2. Jyothsna (21 August 2015). "SUPERSTAR'S KABALI COMMENCES ...". Behindwoods. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/superstar-rajinikanth-starrer-kabali-commences-today-with-a-photoshoot-in-chennai.html. பார்த்த நாள்: 22 August 2015. 
  3. "Pa Ranjith's Tamil film with Rajinikanth titled Kabali". IANS. ஹிந்துஸ்தான் டைம்ஸ். 17 August 2015 இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150822032736/http://www.hindustantimes.com/regional/pa-ranjith-s-tamil-film-with-rajinikanth-titled-kabali/article1-1381023.aspx. பார்த்த நாள்: 22 August 2015. 
  4. "Rajinikanth’s next film is ‘Kabali’". தி இந்து. IANS. 17 August 2015. http://www.thehindu.com/entertainment/rajinikanths-next-film-is-kabali/article7550528.ece. பார்த்த நாள்: 22 August 2015. 
  5. "Rajinikanth’s 159th film titled ‘Kabali’". இந்தியன் எக்சுபிரசு. 17 August 2015. http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanths-159th-film-titled-kabali/. பார்த்த நாள்: 22 August 2015. 
  6. "Kabali (Hindi) And Madaari First Day Business 2200 1000 3200".
  7. கபாலி - சுற்றமும் நட்பும் மற்றும் எதிரிகள்
Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :கபாலி