கப்பல் போக்குவரத்து

சரக்கு ஏற்றும் கொள்கலன் கப்பல்
கொள்கலன் கப்பல்

கப்பல் போக்குவரத்து ( ship transport ), பயணிகள் கப்பலின் மூலம் மக்களையும் மற்றும் சரக்கு கப்பலின் மூலம் சரக்குகளையும் உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதை குறிக்கும். வரலாற்று பார்வையில் பயணிகள் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்திருப்பினும், இன்னும் , குறைந்த தொலைவு பயணங்களுக்காகவும் கப்பல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கடல் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் சரக்குகளை கொண்டு செல்லவே உலகம் முழுவதும் பயன் படுகிறது. வான்வழி போக்குவரத்தை விட மிக மெதுவாக இருப்பினும், நவின கப்பல் போக்குவரத்து மிகப் பெரிய அளவிலான கெடாத பொருள்கள் வான்வழி போக்குவரத்தில் ஆகும் செலவை விட மிகக் குறைந்த செலவில் கொண்டு செல்லும் திறன் கொண்டது.

பொதுவாக நீர்வழிப் போக்குவரத்து பன்னாட்டு வர்த்தகத்திற்கே பயன்படினும், பரப்பில் பெரிய நாடுகளில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பயன்படுத்தப் படுகிறது. இராணுவத் தேவைகளுக்காகவும் கப்பல் போக்குவரத்து பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

கப்பல் போக்குவரத்தின் மூலம் பெரும்பாலும் இரும்பு தாது, நிலக்கரி, பாக்சைட்டு தாது ஆகிய மூலப்பொருட்களும், பல வேதியல் மூலப்பொருட்களும், உரங்களும், பெட்ரொலியம் சார்ந்த எரிபொருட்களும் கொண்டு செல்லப் படுகின்றன. இது தவிர, தொகுக்கக்கூடிய பொருள்கள் ஒரே தரமான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு கொள்கலக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப் படுகின்றன. கொள்கலனாக்கம் கப்பல் போக்குவரத்தில் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.

வெளியிணைப்புகள்