கராச்சி மத்தியச் சிறை

கராச்சி மத்தியச் சிறை
Central Prison Karachi
கராச்சி மத்தியச் சிறையின் வெளித்தோற்றம்
இடம்கராச்சி, பாக்கித்தான்
நிலைஇயங்குகிறது
பாதுகாப்பு வரையறைஅதிகபட்சம்
கைதிகள் எண்ணிக்கை6000[1]
முந்தைய பெயர்{former_name}
நிருவாகம்சிந்து மாகாண அரசு,

கராச்சி மத்தியச் சிறை (Central Prison Karachi) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் கராச்சி நகரில் அமைந்துள்ளது. இச்சிறையில் 6000 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பாக்கித்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபருமான பெர்வேசு முசாரஃப் கொலை வழக்கில்[2] குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலையாளிகள்[3] உட்பட பல்வேறு தீவிரவாதிகளும் இவ்வெண்ணிக்கையில் அடங்குவர்.

2007 ஆம் ஆண்டு இச்சிறைக்குள் நுண்கலைகள் பயிற்ருவிக்கும் பள்ளி ஒன்று நிறுவப்பட்டது. சிறைக் கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தில் சிக்கந்தர் அலி யோகி என்ற நுண்கலை ஆசிரியரை இச்சிறை பணியமர்த்தியுள்ளது[4]

மேற்கோள்கள்

  1. "Archived copy". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.{cite web}: CS1 maint: archived copy as title (link)
  2. "Musharraf 'plotters' to be tried in jail." பிபிசி. Friday 16 August 2002. Retrieved on 27 November 2011.
  3. Pakistan: In the Land of Conspiracy Theories By Sharmeen Obaid Chinoy - PBS
  4. Masood, Tooba (2011-11-13). "Criminal application: Jailbirds may be behind bars, but art sets them free - The Express Tribune". Tribune.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-04-19.

.

புற இணைப்புகள்