கருப்பு வால் குழிமுயல்
கருப்பு வால் கழுதை குழிமுயல்[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. californicus
|
இருசொற் பெயரீடு | |
Lepus californicus கிரே, 1837 | |
துணையினங்கள் | |
| |
கருப்பு வால் கழுதை குழிமுயல் பரவல் |
கருப்பு வால் கழுதை குழிமுயல் (ஆங்கிலப்பெயர்: Black-tailed Jackrabbit, உயிரியல் பெயர்: Lepus californicus) அல்லது அமெரிக்க பாலைவன முயல் என்பது மேற்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் காணப்படும் ஒரு பொதுவான முயல் ஆகும். அங்கு இது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி (3,000 m) உயரம் வரை காணப்படுகின்றது. இது 2 அடி (61 cm) நீளம் வரையும் எடை 3 முதல் 6 lb (1.4 முதல் 2.7 kg) வரையும் வளரக்கூடியது. வட அமெரிக்காவின் முயல்களிலேயே இதுதான் மூன்றாவது பெரிய முயல் ஆகும். இது புதர்-புல்வெளி கலந்த நிலப்பகுதிகளில் வாழ்கிறது. பிறக்கும் குட்டிகள் உடல் முழுவதும் ரோமத்துடன் கண்கள் திறந்தவாறு பிறக்கின்றன. பிறந்த உடனேயே சில நிமிடங்களிலேயே இவற்றால் ஓட முடியும். இதன் காரணமாக பெண் முயல்கள் குட்டிகளை பாதுகாக்க தேவையில்லை. உணவு ஊட்டும் நேரம் தவிர மீதி நேரங்களில் அவற்றுடன் தங்கியிருக்க கூட தேவையில்லை. சராசரியாக இவை 4 குட்டிகளை ஈனுகின்றன. ஆனால் சில நேரங்களில் மிகக் குறைவாக இரண்டு குட்டிகளை கூட ஈனும். வெப்பமான காலநிலை கொண்ட பகுதிகளில் அதிகபட்சமாக 7 குட்டிகள் வரை கூட ஈனுகின்றன.
உசாாத்துணை
- ↑ Hoffman, R.S.; Smith, A.T. (2005). "Order Lagomorpha". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{cite book}
: Invalid|ref=harv
(help) - ↑ Mexican Association for Conservation and Study of Lagomorphs (AMCELA); Romero Malpica, F.J.; Rangel Cordero, H. (2008). "Lepus californicus". செம்பட்டியல் 2008: e.T41276A10412537. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41276A10412537.en. http://www.iucnredlist.org/details/41276/0. பார்த்த நாள்: 27 December 2017.