காதல் பறவை
காதல்பறவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittaculidae
|
துணைக்குடும்பம்: | Agapornithinae
|
பேரினம்: | Agapornis செல்பி, 1836
|
இனங்கள் | |
ஒன்பது |
காதல் பறவை (lovebird) என்பது கிளி இனத்தைச் சார்ந்த பறவையாகும். இதில் ஒன்பது வகைகளுள்ளன. ஆப்ரிக்காவிலும் மடகாசுகரிலும் அதிகம் காணப்படுகின்றன. அவைகளின் அழகான நிறத்திற்காகவும் அவைகள் இணைந்தே இருக்கும் பான்மைக்காகவும் செல்லப் பறவைகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன. 10 முதல் 16 செ.மீட்டர் வரை வளரும். குட்டையான வாலைக்கொண்டது. சிவப்பு வண்ண அலகினையும் கண்களைசுற்றி எடுப்பான வெள்ளை வளையத்தினையும் கொண்டுள்ளன. ஆண்பறவையும் பெண்பறவையும் ஒரே மதிரி உள்ளன. வனங்களில் கொட்டைகளைத் தின்று வாழும் இப்பறவைகள் பயிர்களுக்கு சேதத்தினை உண்டாக்கும். பழக்குவதற்கு கடினம், ஆனாலும் மனித குரலினைப் போல் பேசப் பழக்கமுடியும். நீண்ட வாழ்நாளைக் கொண்ட, சண்டைக்குணமுடையன. மற்ற பறவைகளை அருகில் அண்ட விடாது.
சில இனங்கள் செலல்ப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் வாழ்நாள் கிட்டத்தட்ட 10 முதல் 15 வரை உள்ளது.[1]
உசாத்துணை
- ↑ Alderton, David (2003). The Ultimate Encyclopedia of Caged and Aviary Birds. London, England: Hermes House. pp. 216–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84309-164-X.
- Forshaw, Joseph M. (2006). Parrots of the World; an Identification Guide. Illustrated by Frank Knight. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-09251-6.
{cite book}
: Unknown parameter|nopp=
ignored (help)