காபிலி கோட்டைமனை

காபிலி கோட்டைமனை
காபிலி, வேல்ஸ்
காபிலி கோட்டைமனையும் அகழியும்
வகை மத்தியகால பொதுமையக் கோட்டைமனை
இடத் தகவல்
உரிமையாளர் காடுவ்
நிலைமை பகுதி மீள்கட்டுமானத்துடன் எச்சம்
இட வரலாறு
கட்டிய காலம் 1268–1290
பயன்பாட்டுக்
காலம்
பொதுமக்கள் பார்வை
கட்டியவர் கில்பேட் டி கிளயர்
கட்டிடப்
பொருள்
நீண்ட மணற்பாறை
நிகழ்வுகள் வேல்ஸ் போர்கள்
இங்கிலாந்துப் படையெடுப்பு
இங்கிலாந்து உள்நாட்டுப் போர்

காபிலி கோட்டைமனை (Caerphilly Castle) என்பது தென் வேல்ஸின் காபிலி எனுமிடத்தில் அமைந்துள்ள மத்திய காலக் கோட்டைமனை ஆகும். இக்கோட்டைமனை ஆங்கிலேயரான கில்பேட் டி கிளயர் என்பவரால் கிளமோகன் எனுமிடத்தை வெற்றி கொள்வதற்காக 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. செயற்கை நதிகளினால் சூழப்பட்ட இதனை, வரலாற்றாளர் அலன் பிறவுன் "பிரித்தானியாவிலேயே மிகவும் நுட்பமான நீர்ப் பாதுகாப்பு" எனக் குறிப்பிடுகிறார். இது 30 ஏக்கர்கள் (120,000 m2) பரப்பளவைக் கொண்டு பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய கோட்டைமனையாக விளங்குகிறது.[1] இது பொதுமையக் கோட்டைமனை பாதுகாப்பைப் பிரித்தானியாவிற்கு அறிமுகப்படுத்தியதற்காகவும் அதனுடைய பெரிய வாயில் கட்டமைப்புக்காகவும் பிரபல்யம் பெற்றது.

உசாத்துணை

  1. Brown 2004, ப. 81

வெளியிணைப்பு