காமிசெட்டி சாவித்திரி
காமிசெட்டி சாவித்திரி (Kamisetty Savithri)(பிறப்பு 26 பிப்ரவரி 1923, இறந்த தேதி தெரியவில்லை) இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் யானம் சட்டமன்றத் தொகுதியினைச் சேர்ந்தவர்.[1] 1959 மற்றும் 1964க்கு இடையில் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் யானத்தின் முன்னாள் மாநகரத் தந்தையாகவும் இருந்துள்ளார்.[2] காமிசெட்டி பரசுராம் நாயுடுவின் மனைவியும் ஆவார். இவர் யானத்தில் இறக்கும் வரை முக்கியமான தலைவராக இருந்தார். ஏனாமில் உள்ள சாவித்திரி நகர் இவரின் இறப்பிற்குப் பின்னால் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[3]
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Directory of Indian Women Today, 1976". Ajīta Kaura, Arpana Caur. India International Publications. 1976. p. 251.
- ↑ "La Gazette de l'État". Pondicherry Government. 1964. p. 668.
- ↑ "యానాం: పుదుచ్చేరి శాసనసభ తోలి మహిళా ఎమ్మెల్యే దివంగత కామిశెట్టి సావిత్రి వర్థంతి కార్యక్రమం నిర్వహణ..." Yanam News Update.