கார்பன் – நைட்ரசன் பிணைப்பு
கார்பன் – நைட்ரசன் பிணைப்பு (Carbon–Nitrogen bond) என்பது கார்பன் மற்றும் நைட்ரசன் அணுக்களுக்கு இடையே உண்டாகும் சகப்பிணைப்பு இணைப்பைக் குறிக்கும். கரிம வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் சேர்மங்களில் ஏராளமாகக் காணப்படும் பிணைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
நைட்ரசனிடம் ஐந்து இணைதிறன் எலக்ட்ரான்கள் உள்ளன. எளிய அமீன்களில் நைட்ரசன் மூன்று இணைதிறன் எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கிறது. எஞ்சியிருக்கும் இரண்டு எலக்ட்ரான்கள் தனித்த எலக்ட்ரான் இரட்டைகளாக உருவாகின்றன. அமோனியம் உப்புகளில், நைட்ரசன் இந்த இரட்டையின் மூலமாக ஐதரசன்\ஐதரசனுடன் கூடுதலாக ஒரு பிணைப்பை உருவாக்கி இணைதிறனை நான்காகவும் நேர்மின் சுமையை ஒன்றாகவும் அதிகரித்துக் கொள்கிறது. எனவே வடிவமைப்பைப் பொறுத்து பல நைட்ரசன் சேர்மங்களால் இயல்பான காரங்களாக இருக்கமுடியும். அமைடுகளில் உள்ள நைட்ரசன் அணு ஒரு காரமாக இருப்பதில்லை. ஏனெனில் உள்ளடங்காப் பிணைப்பு தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் இரட்டைப் பிணைப்பாக இருக்கின்றன. பிரோலில் தனித்த எலக்ட்ரான் இரட்டைகள் அரோமாட்டிக் ஆறு எலக்ட்ரான் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளன.[1]
கார்பன் – கார்பன் பிணைப்புகள் போலவே இப்பிணைப்புகளால் இமைன்களில் உள்ள நிலையான இரட்டைப் பிணைப்புகள் போலவும் நைட்ரைல்களில் உள்ள முப்பிணைப்புகள் போலவும் உருவாகமுடியும். எளிய அமீன்களில் பிணைப்பு நீளம் 147.9 பைக்கோ மீட்டர் முதல் 147.5 பைக்கோ மீட்டர்களாகவும், நைட்ரோ மீத்தேன் போன்ற C-N= சேர்மங்களில் 135.2 பைக்கோ மீட்டர் வரையிலும், பிரிடின் போன்ற பகுதி இரட்டைப்பிணைப்புச் சேர்மங்களில் 115.8 பைக்கோ மீட்டர் வரையிலும் முப்பிணைப்புச் சேர்மங்களில் நைட்ரைல்களில் உள்ளது போன்றும் மாறுபடுகின்றன.[2]
ஒரு CN பிணைப்பானது நைட்ரசனை நோக்கி வலிமையாக முனைவுறுகிறது. ( கார்பன் மற்றும் நைட்ரசனின் எலக்ட்ரான் கவர்திறன் முறையே 2.55 மற்றும் 3.04 ஆகும்.) பின்னதாக இருமுனைத் திருப்புத்திறனும் உயர்வாகவே இருக்கிறது. சயனமைடு 4.27 டி, ஈரசோ மீத்தேன் 1.5 டி, மெத்தில் அசைடு 2.17 டி, பிரிடின் 2.19 டி. என்பவை சில உதாரணங்களாகும். இந்தக் காரணத்தினாலேயே CN பிணைப்பு கொண்ட பல சேர்மங்கள் தண்ணீரில் கரையக்கூடியவையாக உள்ளன.
நைட்ரசனுள்ள வேதி வினைக்குழுக்கள்
வேதியியல் வகுப்பு | பிணைப்பு வரிசை | வாய்ப்பாடு | அமைப்பு வாய்ப்பாடு | உதாரணம் | சராசரி C–N பிணைப்பு நீளம் (Å)[3] |
---|---|---|---|---|---|
அமீன்கள் | 1 | R2C-NH2 | மெத்திலமீன் |
1.469 (நடுநிலை அமீன்) 1.499 (அமோனியம் உப்பு) | |
அசிரிடின்கள் | 1 | CH2NHCH2 | மிட்டோமைசீன் |
1.472 | |
அசைடுகள் | 1 | R2C-N3 | பீனைல் அசைடு |
||
அனிலின்கள் | 1 | Ph-NH2 | அனிசிடின் |
1.355 (sp2 N) 1.395 (sp3 N) 1.465 (அமோனியம் உப்பு) | |
பிரோல்கள் | 1 | பொர்பைரின் |
1.372 | ||
அமைடுகள் | 1.2 | R-CO-NR2 | அசிட்டமைடு |
1.325 (முதன்மை) 1.334 (இரண்டாம் நிலை) 1.346 (மூன்றாம் நிலை) | |
பிரிடின்கள் | 1.5 | pyr | நிக்கோடினமைடு |
1.337 | |
இமைன்கள் | 2 | R2C=NR | 1,5- டையசாபைசைக்ளோ(4.3.0)னோன்-5-யீன் |
1.279 (C=N பிணைப்பு) 1.465 (C–N பிணைப்பு) | |
நைட்ரைல்கள் | 3 | R-CN | பென்சோநைட்ரைல் |
1.136 | |
சமநைட்ரைல்கள் | 3 | R-NC | தாசுமிக் |
மேற்கோள்கள்
- ↑ Organic Chemistry John McMurry 2nd Ed.
- ↑ CRC Handbook of Chemistry and Physics 65Th Ed.
- ↑ F. H. Allen, O. Kennard, D. G. Watson, L. Brammer, A. G. Orpen. Tables of bond Lengths determined by X-Ray and Neutron Diffraction. Part 1. Bond Lengths in Organic Compounds. J. Chem. Soc. Perkin Trans. II 1987, S1-S19.