கார ஐதராக்சைடு

கார ஐதராக்சைடுகள் (Alkali hydroxides) என்பவை கார உலோக நேர்மின் அயனிகளும் ஐதராக்சைடு எதிர்மின் அயனிகளும் (OH−) சேர்ந்து உருவாகும் வகையான காரங்கள் ஆகும்.

என்பவை கார ஐதராக்சைடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

சோடியம் ஐதராக்சைடு [1][2] பொதுவாகக் கிடைக்கும் கார ஐதராக்சைடு ஆகும். சந்தையில் பல்வேறு வன்பொருள் கடைகளிலும், வடிகால் தூய்மையாக்கி [3] போன்ற பொருளாக இக்காரம் விற்பனைக்கு கிடைக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மேற்தளங்களை தூய்மையாக்க உதவும் கரைசல்களில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு மற்றொரு பொதுவான கார ஐதராக்சைடு ஆகும் [4]

கார ஐதராக்சைடுகள் அனைத்தும் காரமானவை என்பதால் அரிக்கும் தன்மை கொண்டைவையாகும். கார உலோகம் ஒன்றை நீர் உள்ள கிண்ணத்தில் இடுவதால் நிகழும் வினையை விளக்கும் வகுப்பறை செய்முறை சோதனையில் அறியமுடியும். தீவிரமாக நிகழும் இவ்வினையில் ஐதரசன் வாயுவும், ஒரு கார ஐதராக்சைடும் உருவாகின்றன. உதாரணமாக சோடியம் ஒரு கார உலோகமாக இச்சோதனையில் பயன்படுத்தப்பட்டால் கீழ்கண்ட வினை நிகழ்கிறது.

சோடியம் + தண்ணிர் → சோடியம் ஐதராக்சைடு + ஐதரசன் வாயு.

2 Na + 2 H2O → 2 NaOH + H2

மேற்கோள்கள்

  1. "Material Safety Datasheet" (PDF). certified-lye.com.
  2. "Material Safety Datasheet 2" (PDF). hillbrothers.com. Archived from the original (PDF) on 2012-08-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-21.
  3. "How drain cleaner is made - material, manufacture, history, used, steps, product, History, Raw Materials". www.madehow.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
  4. Römpp Chemie-Lexikon, 9th Ed. (in German)