காலத்தியா தேசிய பூங்கா
காலத்தியா தேசிய பூங்கா (Galathea National Park) என்பது இந்தியாவின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட ஒன்றியப் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்காவாகும். கிழக்கு இந்திய பெருங்கடலில் (வங்காள விரிகுடா) பரவியிருக்கும் நிக்கோபார் தீவுகளில், கிரேட் நிக்கோபார் தீவில் இத்தேசியப்ப்பூங்கா அமைந்துள்ளது.
இந்தப் பூங்காவின் மொத்த பரப்பளவு 110 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பூங்கா 1992 ஆம் ஆண்டு இந்திய அரசிதழில் இந்திய தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. கிரேட் நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாக உள்ள காலத்தியா தேசிய பூங்காவுடன் பெரிய கேம்ப்பெல் விரிகுடா தேசியப் பூங்காவும் இடம்பெற்றுள்ளது. இவ்விரண்டு பூங்காக்களுக்கும் இடையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது.
இப்பூங்காவில் தனிச்சிறப்பு மிக்க அரிய தாவரம் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. புவியியல் காரணங்களால் இவற்றில் பல இத்தீவுகளுக்கு மட்டுமே உரியனவாக உள்ளன.
தாவரவளம்
பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஈரமான அகன்றயிலைத் தாவர வகை காடுகளைக் கொண்டுள்ளது.
விலங்குவளம்
தேங்காய் நண்டு அல்லது பெரும் கொள்ளைக்காரன் நண்டு, பெரும்பாத கோழியின வகையான மெகாபோடெ பறவைகள் மற்றும் நிக்கோபார் புறாக்கள் முதலியன இப்பூங்காவில் காணப்படும் குறிப்பிடத்தக்க விலங்கினங்கள் ஆகும்.
சென்றடையும் வழி
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஒரேயொரு விமான நிலையம், போர்ட் பிளேர் மட்டுமே உண்டு. சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில் இருந்து போர்ட் பிளேருக்கு தினசரி விமானங்கள் உள்ளன. விமானத்தில் பயண நேரம் 2 மணி நேரங்களாகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Galathea National Park". பார்க்கப்பட்ட நாள் 6 February 2013.