காலநிலையியல்
வளிமண்டலவியல் |
---|
வளிமண்டல இயற்பியல் |
வானிலையியல் |
தட்பவெப்பம் (பகுப்பு) · (வலைவாசல்) |
காலநிலையியல் |
காலநிலை (பகுப்பு) |
காலநிலையியல் (Climatology) என்பது பூமியின் காலநிலை பற்றிய ஓர் அறிவியல் ஆய்வு ஆகும். காலநிலை அறிவியல் என்ற பெயராலும் இத்துறை அறியப்படுகிறது. பொதுவாக குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் நிலவிய வானிலையின் சராசரி வானிலை என இது வரையறுக்கப்படுகிறது.[1] நீட்டிக்கப்பட்டது முதல் காலவரையற்ற காலத்திற்குரிய வளிமண்டல நிலையை காலநிலை சார்ந்திருக்கும். வானிலை என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கான வளிமண்டலத்தின் நிலையாகும். காலநிலை மாறுபாடு, காலநிலை மாற்றங்களின் வழிமுறைகள் மற்றும் நவீன காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு ஆகியவை காலநிலை ஆராய்ச்சியின் முக்கிய தலைப்புகளாகும்.[2][3] இந்த ஆய்வுத் தலைப்பு வளிமண்டல அறிவியலின் ஒரு பகுதியாகவும், புவி அறிவியலில் ஒன்றான இயற்பியல் புவியியலின் உட்பிரிவாகவும் கருதப்படுகிறது. காலநிலையியல் கடலறிவியல் மற்றும் உயிர் புவி வேதியியல் ஆகிய துறைகளின் சில அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.
அவதானிப்புகளின் பகுப்பாய்வும் காலநிலையை தீர்மானிக்கும் இயற்பியல் செயல்முறைகளின் மாதிரியாக்கமும் காலநிலை நிபுணர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய ஆய்வு முறைகளாகும். குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு காலநிலையின் நீண்ட கால நிகழ்வுகள் பற்றிய அறிவின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் காற்று மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடுகளில் இருந்து வெளிப்படும் உலகளாவிய காலநிலை நிகழ்வான எல் நினோ-தெற்கு அலைவு காலநிலை மாறுபாட்டு நிகழ்வை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மேடன்-யூலியன் அலைவு, வட அட்லாண்டிக் அலைவு, ஆர்க்டிக்கு அலைவு, பசிபிக் தசாப்த அலைவு, தசாப்தங்களிடை பசிபிக் அலைவு முதலான காலநிலை மாறுபாடுகளையும் இவ்வுதாரணப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். காலநிலை அமைப்பின் இயக்கவியல் ஆய்வு முதல் எதிர்கால காலநிலை கணிப்புகள் வரை பல்வேறு நோக்கங்களுக்காக காலநிலை மாதிரிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
- ↑ Climate Prediction Center. Climate Glossary. பரணிடப்பட்டது 2006-10-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 "What is Climatology?". drought.unl.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
- ↑ "Archived copy". Archived from the original on 6 October 2006. பார்க்கப்பட்ட நாள் 23 November 2006.
{cite web}
: CS1 maint: archived copy as title (link) CS1 maint: bot: original URL status unknown (link) Retrieved on 23 November 2006.