கால்வனாமீட்டர்

கால்வனாமீட்டர்

கால்வனாமீட்டர் (Galvanometer) என்பது மின்னோட்டத்தை கண்டறிவதற்கும் மற்றும் அளவிடுவதற்கும் பயன்படும் ஒரு மின்னியல் இயந்திரக் கருவி ஆகும். ஒரு நிலையான காந்தப்புலத்தில் உள்ள ஒரு கம்பிச்சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கான துலங்கலாக ஒரு சுழல் விலகலை உருவாக்கக்கூடிய முனைப்பியாக கால்வனாமீட்டர் செயல்படுகிறது. தொடக்க காலத்தில் கால்வனாமீட்டர்கள் அளவீடுகள் செய்யப்பட்டதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், பின்னர் மேம்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மின்சுற்றில் ஓடிக்கொண்டிருக்கிற மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அம்மீட்டர்களாக மாற்றப்பட்டன.

1820 ஆம் ஆண்டில் ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் என்பவர் மின்னோட்டம் பாய்கின்ற ஒரு மின்சுற்றுக்கு அருகில் வைக்கப்பட்ட காந்த ஊசியானது விலகல் அடைவதைக் கண்டு அதனடிப்படையில் கால்வனாமீட்டரின் உருவாக்கத்திற்கான கருத்துருவை முன்வைத்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Schiffer, Michael Brian. (2008)"Electromagnetism Revealed," Power Struggles: Scientific Authority and the Creation of Practical Electricity Before Edison. Page 24.
  2. "Schweigger Multiplier – 1820". Maglab. National High Magnetic Field Laboratory. பார்க்கப்பட்ட நாள் 17 October 2017.
  3. Lindley, David, Degrees Kelvin: A Tale of Genius, Invention, and Tragedy, pp. 132–133, Joseph Henry Press, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0309167825