கிம் யோ-ஜோங்
கிம் யோ-ஜோங் | |
---|---|
கிம் யோ-ஜோங், பிப்ரவரி, 2018 | |
முதல் துணை இயக்குநர், வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 நவம்பர் 2014 | |
இயக்குநர் | கிம் கி-நாம் பாக்-குவாங்-ஹோ ரி இல்-ஹான் |
முன்னையவர் | ரி ஜே-இல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 செப்டம்பர் 1987[1][2] பியொங்யாங், வட கொரியா |
தேசியம் | வட கொரியர் |
துணைவர் | சூ சாங் (2015) |
பெற்றோர் | கிம் ஜொங்-இல் கோ யோ-குயிய் |
முன்னாள் மாணவர் | கிம் இல்-சங் இராணுவப் பல்கலைக் கழகம் |
கையெழுத்து | |
Korean name | |
அங்குல் எழுத்துக்கள் | 김여정 |
Hancha | 金與正 |
McCune–Reischauer | கிம்-யோ-யோஜோங் |
Revised Romanization | ஜிம் யோ-ஜியோங் |
கிம் யோ-ஜோங் (Kim Yo-jong) (அங்குல்: 김여정; hanja: 金裕貞, இவர் தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜொங்-உன் சகோதரியும், முன்னாள் வட கொரியா அதிபர் கிம் ஜொங்-இல்லின் இளைய மகளும் ஆவார். இவர் 2004 முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் (WPK) உறுப்பினராகவும், 2014 முஹ்டல் வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறையின் முதல் துணை இயக்குநராகவும் உள்ளார்.
முன்னர் வட கொரியா அதிபரான இவரது தந்தை கிம் ஜொங்-இல்லின் தனிச் செயலாராக செப்டம்பர் 2010 முதல் கிம் ஜொங்-இல் இறக்கும் வரை பணியாற்றினார்.[3]இவர் 1996 - 2000 காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்.
இவர் வட கொரியா இராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங்-ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை ஜனவரி 2015-இல் மணந்தவர்.[4]
மேற்கோள்கள்
- ↑ (in Korean)MK News. 27 December 2018. http://news.mk.co.kr/newsRead.php?year=2018&no=806316. பார்த்த நாள்: 4 January 2019.
- ↑ "Kim Yo Jong". North Korea Leadership Watch. 6 May 2016 இம் மூலத்தில் இருந்து 13 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190213133651/https://nkleadershipwatch.wordpress.com/kim-family/kim-yo-jong/.
- ↑ "KJI Youngest Daughter Working as Events Manager for KJU?". North Korea Leadership Watch (South Korea). 22 July 2013 இம் மூலத்தில் இருந்து 22 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131222045126/http://nkleadershipwatch.wordpress.com/2013/07/22/kji-youngest-daughter-working-as-events-manager-for-kju/.
- ↑ (2 January 2015) Kim Jong Un’s Little Sister Married Son of Top Regime Official, Report Says Wall Street Journal, Asia, Retrieved 16 January 2015
வெளி இணைப்புகள்
- கிம் ஜாங் உன்: வடகொரியாவுக்கு அடுத்து யார் தலைமை ஏற்பார்?
- Kim Jong-un: Who might lead N Korea without Kim?
- Kim Jong Un’s Sister Is in the Spotlight. But Could a Woman Ever Lead North Korea?
- Will a Woman Run North Korea? Kim’s Sister Outshines Male Rivals
- Meet Kim Yo Jong, Kim Jong Un’s Sister—And Possible Successor In North Korea
- Kim Yo Jong, Kim Jong Un’s Kid Sister, is ‘Feared,’ ‘Respected’ Inside North Korea