கிரித் விக்ரம் கிசோர் தேவ வர்மன்

கிரித் விக்ரம் கிசோர் மாணிக்கிய தேவ வர்மன் பகதூர்
மகாராஜா
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்
பதவியில்
1967–1971
முன்னையவர்தசரத் தேவ்
பின்னவர்தசரத் தேவ்
தொகுதிகிழக்கு திரிபுரா
திரிபுராவின் மகாராஜா (பட்டம் மட்டும்)
பதவியில்
17 மே 1947 – 28 நவம்பர் 2006
முன்னையவர்வீர் விக்ரம் கிசோர் மாணிக்கியா
பின்னவர்கிரித் பிரத்யோத் விக்ரம் தேவ வர்மன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-12-13)13 திசம்பர் 1933
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 நவம்பர் 2006(2006-11-28) (அகவை 72)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிபு குமாரி தேவி
உறவுகள்பார்க்க மாணிக்ய வம்சம்
பிள்ளைகள்கிரித் பிரத்யோத் விக்ரம் மாணிக்கியா தேவ வர்மன்
பெற்றோர்s
வாழிடம்(s)உஜ்ஜயந்தா அரண்மனை, அகர்தலா
முன்னாள் கல்லூரிமயோ கல்லூரி, அலகாபாத் பல்கலைக்கழகம்

மகாராஜா கிரித் விக்ரம் கிசோர் மாணிக்கிய தேவ வர்மன் பகதூர் (Kirit Bikram Kishore Deb Barman) (13 டிசம்பர் 1933 - 28 நவம்பர் 2006) வடகிழக்கு இந்தியாவின் திரிபுரா இராச்சியத்தை ஆண்டமாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த 185வதும் கடைசி அரசனுமாவார். இவரது முறையான முடிசூட்டு விழா 1941 இல் நடைபெற்றது. ஆனால் இவர் ஒரு மன்னரின் அதிகாரங்களைப் பெற்றிருக்கவில்லை. [1] [2] [3] [4] [5] [6]

அரசியல் வாழ்க்கை

இவர் தனது தந்தை மகாராஜா வீர் விக்ரம் கிசோர் மாணிக்கியாவிற்குப் பிறகு பதவியேற்றார். 1949 இல் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை இவர் இரண்டு ஆண்டுகள் பெயரளவு மன்னராக இருந்தார். இந்த நேரத்தில் இவருக்கு சிறு வயதாக இருந்ததால், இவரது தாயார் காஞ்சன் பிரவா தேவி தலைமையிலான ஆட்சியாளர் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாநிலம் நிர்வகிக்கப்பட்டது.

இவர் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967, 1977 மற்றும் 1989 இல் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் 13 டிசம்பர் 1933 அன்று கொல்கத்தாவில் திரிபுரா இராச்சியத்தின் மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த வீர் விக்ரம் கிசோர் மாணிக்கியாவிற்கும், பன்னா மாநிலத்தின் மன்னரான மகாராஜா யத்வேந்திர சிங்கின் மகளான காஞ்சன் பிரவா தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

குடும்பம்

குவாலியர் மாநிலத்தின் மகாராஜா ஜிவாஜிராவ் சிந்தியா மற்றும் கொல்கத்தாவில் 1965 இல் இறந்த விஜய ராஜே சிந்தியா ஆகியோரின் மூத்த மகள் பத்மாவதி ராஜே 'அக்காசாஹேப்' சிந்தியாவை (1942-64) திருமணம் செய்து கொண்டார். பின்னர், ராஜா லவ் ஷாவின் மகள் பிபு குமாரி தேவியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி மற்றும் மகன் கிரித் பிரத்யோத் தேவ வர்மனும் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்தனர். இவரது மகள்களில் ஒருவரான பிரக்யா தேவ வர்மனும் 2019இல் நடந்த இந்திய பொதுத் தேர்தலில் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். [7] [8]

இதனையும் காண்க

சான்றுகள்