கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி

கிளாந்தான் மலாய் மொழி
Kelantan Malay
Baso Taning
Baso Kelate
ภาษายาวี
Bahasa Melayu Kelantan
நாடு(கள்)மலேசியா, தாய்லாந்து
பிராந்தியம்மலேசியா:
கிளாந்தான்
மெராப்போ, பகாங்
பெசுட் மற்றும் செத்தியூ, திராங்கானு
பாலிங், சிக் மற்றும் பாடாங் தெராப், கெடா
உலு பேராக் (பெங்காலான் உலு, கிரிக்), பேராக்

தாய்லாந்து:
பட்டாணி, சொங்லா (சாபா யோய் மாவட்டம், சானா, நா தாவி, தெப்பா), மின்புரி, லாட் கிராபாங், நோங் சோக்)
இனம்மலாய்க்காரர்கள்:
தாய்லாந்து: பட்டாணி
பாங்காக்
கிளாந்தான்
பாலிங்
கிரிக்
ரேமான் சிற்றரசு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்லாந்து 3 மில்லியன்  (2006)[1]
மலேசியா 2 மில்லியன்
இலத்தீன் எழுத்துகள், தாய் (மொழி), ஜாவி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mfa (பட்டாணி, தாய்லாந்து)
மொழிக் குறிப்புpatt1249[2]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி அல்லது கிளாந்தான் மலாய் மொழி (ஆங்கிலம்: Kelantan-Pattani Malay Language; மலாய்: Bahasa Melayu Kelantan/Patani; தாய்: ภาษายาวี; ஜாவி: بهاس ملايو ڤطاني; கிளாந்தான் மலாய்: Baso Kelate) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.[3]

கிளாந்தான் மொழி என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்த மொழி, மலேசிய மாநிலமான கிளாந்தான்; மற்றும் தாய்லாந்து நாட்டின் தெற்கு மாநிலங்களில் பேசப்படுகிறது.[4]

இந்த மொழி தாய்லாந்து நாட்டில் வாழும் மலாய்க்காரர்களின் முதன்மையான பேச்சு மொழியாகும். ஆனாலும் தெற்கு தாய்லாந்து கிராமப் புறங்களில் வாழும் மக்களும் தாய்லாந்து சாம் சாம் (Sam-Sam) இன மக்களும் தங்கள் மொழிகளில் ஒன்றாகப் (lingua franca) பயன்படுத்தப் படுகிறார்கள்.

பொது

கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப் பட்டதால் மற்ற மலாய் மொழி வகைகளில் இருந்து மிகவும் வேறுபட்டு உள்ளது. தவிர, இந்த மொழி, தீபகற்ப மலேசியாவின் மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் வட்டாரப் பேச்சு மொழிகளில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது.

கெடா மலாய் மொழி, பகாங் மலாய் மொழி, மற்றும் திராங்கானு மலாய் மொழி ஆகியவற்றில் இருந்து வேறுபட்டது என்று சொல்லலாம். ஆனாலும் அந்த வட்டார மொழிகள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியுடன் (Kelantanese-Pattani Malay language) மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவை.[5]

அழைப்புப் பெயர்கள்

கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, (தாய்லாந்து மொழியில்: ภาษายาวี) (பாசா யாவி) என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. மேலும் (தாய்: ภาษามลายูปัตตานี) (மலாயு பட்டாணி) என்றும் குறிப்பிடப்படுகிறது.

கிளாந்தான் மாநிலம் தீபகற்ப மலேசியாவில் இருந்து மலைக் காடுகள் நிறைந்த இடத்தில் தனித்து விடப்பட்ட மாநிலம். அதே போலத்தான் தாய்லாந்து நாட்டின் பட்டாணி மாநிலமும். அதனால் வழக்கமான மலாய் மொழியில் இருந்து அங்கு வாழ்ந்த மக்களின் மலாய் மொழியில் தனித்துப் போய் விட்டது.[6]

கிளாந்தான் மலாய் மொழி

இப்போதும்கூட தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருந்து அங்கு போகும் மலேசியர்களுக்கு கிளாந்தான் மக்கள் பேசும் மலாய் மொழி புரியாத மொழி போல இருக்கும். 100 சொற்களில் 50 சொற்களே சாதாரண மலேசியர்களுக்குப் புரியும் சொற்களாக இருக்கும்.

கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி, தாய்லாந்தில் உள்ள பட்டாணி பகுதியில் பகாசா பட்டாணி என்று அழைக்கப்படுகிறது.

பட்டாணி சுல்தானகம்

1400-ஆம் ஆண்டுகளில், தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி சுல்தானகம் (ஆங்கிலம்: Sultanate of Patani; ஜாவி: كسلطانن ڤطاني) எனும் ஒரு சுல்தானகம் இருந்தது. இந்தச் சுல்தானகம் இப்போதைய தாய்லாந்து மாநிலங்களான பட்டாணி (Pattani), யாலா (Yala), நாராதிவாட் (Narathiwat); மற்றும் வடக்கு மலேசியாவின் பத்து குராவ்; கிரிக், பெங்காலான் உலு, லெங்கோங். சிக், பாலிங், பாடாங் தெராப் ஆகிய நிலப் பகுதிகளை உள்ளடக்கியது.[7]

இந்தச் சுல்தானகத்தின் ஒரு பகுதி ரேமான் அரசு (Kingdom of Reman). இந்த இரு அரசுகளின் மொழியும் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியாகும். ரேமான் அரசு 1902-ஆம் ஆண்டில் சயாமியர்களால் அழிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்