கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் | |
---|---|
கீழ் டிபாங் பள்ளத்தாக்குமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | ரோயிங் (Roing) |
மக்கட்தொகை | 54,080 (2011) |
படிப்பறிவு | 70.4% |
பாலின விகிதம் | 919 |
கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். ரோயிங் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பத்தாவது மாவட்டமாகும்.
அமைப்பு
கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் அருகில் உள்ள லோஹித் மாநிலத்தில் இருந்து பிரித்து 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக ரோயிங் நகரம் உள்ளது. இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்கள் டம்புக் மற்றும் ரோயிங் ஆகும்.
அமைப்பு
மொழி
சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் அடி மற்றும் இடு மொழிகளை இங்கு அதிகமாக பேசப்படுகிறது.
சுற்றுலாத் தளங்கள்
1980 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் மெஹவோ வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.