குப்பிச் சிகிச்சை

குப்பிச் சிகிச்சை (ஆங்கிலம்:Cupping therapy) முறையானது தற்போது பலரால் மேற்கொள்ளப்படுகிறது. இது இயன்முறை மருத்துவ பிரிவில் ஒரு அங்கமாக இருக்கிறது.[1]

வரலாறு

இச்சிகிச்சை தற்பொழுது நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இது புதியது அல்ல. இது பண்டைய தமிழர், எகிப்திய, சீன, மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரங்களில் இருந்துள்ளது. உலகிலேயே பழமையான மருத்துவ பாடப்புத்தகங்களில் ஒன்றான எபேர்ஸ் பாப்பிரஸ்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

இன்றளவும் தமிழ்நாட்டில் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் செம்பு அல்லது பித்தளை சொம்புகளை பயன்படுத்தி முதுகு சதைப்பிடிப்புக்கு ஏற்ற சிகிச்சையாக கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ளது.

சிகிச்சை முறை

குப்பிச் சிகிச்சை என்பது ஒரு மாற்று மருத்துவமுறை ஆகும். இதில் ஒரு சில நிமிடங்களுக்கு நோயாளியின் தோலின் மீது கண்ணாடி, உலோகம் அல்லது மரத்தாலான வெற்றிடமாக்கப்ட்ட ஒரு குப்பியைத் தலைகீழாக பொருத்துவர். இதனால் குப்பியின் தசை இழுப்பில் வலி குறைவு, வீக்கம் குறைவு, இரத்த ஓட்டம் சீராகுதல், சதை இறுக்கம் குறைவு உண்டாகும்.[3]

சிகிச்சை வகைகள்

உலர்ந்த முறை:

உலர் சிகிச்சை முறை

இம்முறையில் சிறிய அளவு வெற்றிடம் ஏற்படுத்தி குப்பிகளை தோளில் கவிழ்த்தி 15 நிமிடங்கள் வைக்கப்படுகிறது.[4] குப்பிகள் பொதுவாக கண்ணாடி அல்லது நெகிழியால் செய்யப்பட்டது. மேலும் குப்பிகள் 25 மில்லிமீட்டர் முதல் 76 மில்லிமீட்டர் வரை அளவுள்ளதாக இருக்கிறது. சிகிச்சை குப்பிகள் நீள்கோளம், கோளம், அரைக்கோளம் என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. சிகிச்சைக்குப்பின் குப்பின் அச்சு சிறிது நேரத்தில் மறைந்துவிடும் மேலும் இது வலி குறைவான முறையாகும்.

நெருப்பைப் பயன்படுத்தி:

நெருப்பைப் பயன்படுத்தி ஒருவர் சிகிச்சை பெறுகிறார்

இந்த முறையில் எரிச்சாராயத்தில் நனைக்கப்பட்ட எரிக்கோலை பயன்படுத்தி கண்ணாடி குப்பியில் வெற்றிடம் உண்டாக்கி முதுகு தோளில் கவிழ்த்து செய்யப்படுகிறது. இது பரவலான ஒரு சிகிச்சை முறை. இதில் குப்பின் அச்சு வளையம் முதுகில் தெளிவாக காணப்படுகிறது. மேலும் இம்முறையில் குப்பிகளை தோள் பரப்பில் இடம் மாற்றி அசைத்து சிகிச்சை வழங்கலாம்.[5][6] குப்பிகள் வைக்கும் இடத்தின் தோளுக்கடியில் உள்ள சிறிய இரத்த நாளங்கள் உடைவதால் இந்த இடம் சிவந்து காணப்படும்.

ஒரு சீன பெண்மணி பெரும் சிகிச்சை

சீனர்கள் இம்முறையை சீன பாரம்பரிய மருத்துவம் என்ற பெயரில் கையாளுகின்றனர். இந்த சிகிச்சை முறையால் நிணநீர், இரத்த ஓட்டம் சீராக்குகிறது. மேலும் சதை பிடிப்பு மற்றும் கை, கால் தசை சம்பந்தமான இருக்கங்களை சரியாக்குகிறது. இம்முறை தோள் புண் மற்றும் பிரசவத்திற்கு பின் உண்டான தசை தழும்புகளுக்கு உகந்ததல்ல.[7][8]

ஈரப்பதம்:

ஈரப்பத குப்பிச் சிகிச்சை பெறும் நபர்
ஈரப்பத குப்பிச்சிகிச்சை முறையில் இரத்தம் வெளியேற்றப்படல்

இந்த சிகிச்சை முறை வலிமிகுந்ததாகும். தோளில் சிறிய காயத்தை ஏற்படுத்தி அதில் குப்பிகளை வைத்து இரத்தம் உரியும் முறையாகும்.[9] இந்த சிகிச்சை முறை இஸ்லாமிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.[10]

சிகிச்சை குப்பிகளின் வகைகள்

மேற்கோள்கள்

  1. https://www.pthealth.ca/blog/what-is-cupping-therapy/#
  2. the Ebers Papyrus, describes how the ancient Egyptians used cupping therapy in 1,550 B.C.
  3. https://www.webmd.com/balance/guide/cupping-therapy
  4. Cui Jin and Zhang Guangqi, "A survey of thirty years’ clinical application of cupping", Journal of Traditional Chinese Medicine 1989; 9(3): 151–154
  5. Iblher, N.; Stark, B. (2007). "Cupping treatment and associated burn risk: a plastic surgeon's perspective". J Burn Care Res 28 (2): 355–8. doi:10.1097/BCR.0B013E318031A267. பப்மெட்:17351459. https://archive.org/details/sim_journal-of-burn-care-research_2007-04_28_2/page/355. 
  6. Sagi, A.; Ben-Meir, P.; Bibi, C. (Aug 1988). "Burn hazard from cupping--an ancient universal medication still in practice". Burns Incl Therm Inj 14 (4): 323–5. doi:10.1016/0305-4179(88)90075-7. பப்மெட்:3224303. 
  7. State Administration of Traditional Chinese Medicine and Pharmacy, Advanced Textbook on Traditional Chinese Medicine and Pharmacology, Volume IV, 1997 New World Press, Beijing
  8. Chinese Acupuncture and Moxibustion (Revised Edition), Xingnong, Foreign Languages Press, Beijing, China, 1987, p370.
  9. Albinali, Hajar (June 2004). "Traditional Medicine Among Gulf Arabs Part II - Blood Letting". Heart Views 5 (2): 74-85. http://www.heartviews.org/text.asp?2004/5/2/74/64567. 
  10. El-Wakil, Ahmed (9 December 2011). "Observations of the popularity and religious significance of blood-cupping (al-ḥijāma) as an Islamic medicine". Contemporary Islamic Studies (Hamad bin Khalifa University Press) 2. doi:10.5339/cis.2011.2. http://www.qscience.com/doi/abs/10.5339/cis.2011.2.