குரோமியம்(II) செலீனைடு

குரோமியம்(II) செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(2+) செலீனைடு
இனங்காட்டிகள்
12053-13-3
EC number 234-999-1
InChI
  • InChI=1S/Cr.Se
    Key: UVZCKRKEVWSRGT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82886
  • [Cr]=[Se]
பண்புகள்
CrSe
வாய்ப்பாட்டு எடை 130.96 g/mol
தோற்றம் வெள்ளையும் வெளிர் மஞ்சள் நிறமும் கொண்ட படிகத் தூள்
அடர்த்தி 6.74 கி/செ.மீ3
உருகுநிலை ~1500 °செல்சியசு
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு NiAs வகை (அறுகோணம்)
புறவெளித் தொகுதி P63/mmc, No. 194
Lattice constant a = 371 பைக்கோமீட்டர், c = 603 பைக்கோமீட்டர்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
250 மி.கி/மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(II) செலீனைடு (Chromium(II) selenide) என்பது CrSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். P63/mmc என்ற இடக்குழுவுடன் அறுகோண படிக அமைப்பில் இது படிகமாக்கிறது.[2] Cr7Se8, Cr3Se4, Cr0.68Se, Cr2Se3, மற்றும் Cr5Se8 உட்பட பல தொடர்புடைய குரோமியம்-செலீனியம் கட்டங்களில் குரோமியம்(II) செலீனைடும் ஒன்றாகும். குரோமியம்(II) செலீனைடு ஓர் எதிர்பெரோ காந்தமாக விவரிக்கப்பட்டுள்ளது.[2] ஆனால் இதன் தலைகீழ் காந்த உணர்திறன் கியூரி-வெயிசு விதியின்படி எதிர்பெரோ காந்தத்திற்குரிய எதிர்பார்க்கப்படும் பண்புகளுடன் பொருந்தவில்லை.[3] ஒரு பரிந்துரை என்னவென்றால், நீல் வெப்பநிலை 320 கெல்வின் வெப்பநிலையாக உள்ளது, ஏனெனில் இச்சேர்மம் அதிகபட்ச குறிப்பிட்ட வெப்பக்கொண்மத்தைக் கொண்டிருக்கும்.[4] செயற்கை முறையில் ஒற்றை அணு அடுக்காக தயாரிக்கப்படும் போது, CrSe பெரோ காந்தமாக கியூரி வெப்பநிலை சுமார் 280 கெல்வின் வெப்பநிலை கொண்டதாக உருவாகிறது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0141". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 Wehmeier, F. H.; Keve, E. T.; Abrahams, S. C. (1970). "Preparation, structure, and properties of some chromium selenides. Crystal growth with selenium vapor as a novel transport agent". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 9 (9): 2125–2131. doi:10.1021/ic50091a032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  3. Lotgering, F.K.; Gorter, E.W. (1957). "Solid solutions between ferromagnetic and antiferromagnetic compounds with NiAs structure". Journal of Physics and Chemistry of Solids (Elsevier BV) 3 (3-4): 238–249. doi:10.1016/0022-3697(57)90028-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3697. 
  4. Tsubokawa, Ichiro (1960). "The Magnetic Properties of Single Crystals of Chromium Selenide". Journal of the Physical Society of Japan (Physical Society of Japan) 15 (12): 2243–2247. doi:10.1143/jpsj.15.2243. பன்னாட்டுத் தர தொடர் எண்:0031-9015. 
  5. Zhang, Yu; Chu, Junwei; Yin, Lei et al. (2019-03-28). "Ultrathin Magnetic 2D Single‐Crystal CrSe". Advanced Materials (Wiley) 31 (19): 1900056. doi:10.1002/adma.201900056. பன்னாட்டுத் தர தொடர் எண்:0935-9648.