குர்துபா கலீபகம்

குர்துபா கலீபகம்
خلافة قرطبة
756–1031
குர்துபா கலீபகம், c. 1000.
குர்துபா கலீபகம், c. 1000.
தலைநகரம்குர்துபா, எசுப்பானியா
பேசப்படும் மொழிகள்அரபு, மொசார்பியம் , எபிரேயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• முதலாம் அப்துல் ரகுமான், குர்துபா அமீர்
756
• மூன்றாம் அப்துல் ரகுமான், குர்துபா கலீபா
929
• தைபா பேரரசு
1031
பரப்பு
1000 est.600,000 km2 (230,000 sq mi)
முந்தையது
பின்னையது
உமய்யா கலீபகம்
தைபா பேரரசு
தைபா

குர்துபா உமய்யா கலீபகம் (Caliphate of Córdoba, அரபு:خلافة قرطبة Khilāfat Qurṭuba), இரண்டாவது இசுலாமிய கலீபகமான உமய்யா கலீபகத்தின் தொடர்ச்சி ஆகும். உமய்யா கலீபகத்தின் கடைசி கலீபாவான இரண்டாம் மர்வான், அப்பாசியர்களால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதில் இருந்து தப்பித்து வந்த உமய்யா இளவரசரான முதலாம் அப்துல் ரகுமான் என்பவரால் ஐபீரிய மூவலந்தீவு (அல்-அந்தலுசு) பகுதியில் நிருவப்பட்டதே குர்துபா உமய்யா அமீரகம் ஆகும். இசுலாமிய கலீபா பதவியை அப்பாசியர்கள் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இவர்கள் குர்துபா அமீர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்களின் வழிவந்த எட்டாவது அமீரான மூன்றாம் அப்துல் ரகுமான் தன்னைத் தானே கலீபாவாக அறிவித்துக்கொண்டார்[1]. எனவே இவரின் பிறகான ஆட்சி குர்துபா உமய்யா கலீபகம் என்று அழைக்கப்பட்டது. கிபி 756 முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஐபீரிய பகுதியை ஆட்சி செய்து வந்த இந்த பேரரசு கிபி 1031ல் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களை அடுத்து முடிவுக்கு வந்தது.

குர்துபா உமய்யா கலீபகம் வனிகம் மற்றும் கலாச்சாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது[2]. மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இசுலாமியப் பண்பாட்டின் நுழைவாயிலாக விளங்கிய குர்துபா உமய்யா கலீபகம், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது. குர்துபா பெரிய பள்ளிவாசல் இதன் கட்டிடக்கலைக்கு ஒரு உதாரனம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Simon Barton, A History of Spain (New York: Palgrave MacMillan, 2004), 38.
  2. Barton, 42.