கூசித்தான் மாகாணம்
குஜெஸ்தான் மாகாணம்
Khūzestān Province استان خوزستان வார்ப்புரு:Fa icon | |
---|---|
குஜெஸ்தான் மாகாண மாவட்டங்கள் | |
ஈரானில் குஜெஸ்தான் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 31°19′38″N 48°41′38″E / 31.3273°N 48.6940°E | |
நாடு | ஈரான் |
வட்டாரம் | வட்டாரம் 4 |
தலைநகரம் | அகுவாசு |
மாவட்டங்கள் | 27 |
அரசு | |
• ஆளுநர் | கோலமிராஸா ஷரியாட்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 64,055 km2 (24,732 sq mi) |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 47,11,000 |
• அடர்த்தி | 74/km2 (190/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRST) |
மொழிகள் | பாரசீகம், குசஸ்தானி அரபு, பக்த்தியாரி மொழி, குசஸ்தான் பாரசீக பேச்சுவழக்கு, கஷ்ஷாய், அருமேனியன் |
குஜெஸ்தான் மாகாணம் (Khuzestan Province (பாரசீக மொழி: استان خوزستان Ostān-e Khūzestān, அரபு மொழி: محافظة خوزستان Muḥāfaẓa Khūzistān) என்பது ஈரானின் முப்பத்தோறுமாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஈராக் மற்றும் பாரசீக வளைகுடாவை எல்லைகளாக கொண்டுள்ளது. மாகாணத்தின் தலைநகராக பிரிஜென்ட் அகுவாசு நகரம் உள்ளது. இதன் பரப்பளவு 63,238 கிமீ2 ஆகும். இந்த மாகாணமானது 2014 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[2]
பழமையான வரலாறு கொண்ட ஈரானிய மாகாணமான இது பெரும்பாலும் "தேசத்தின் பிறப்பிடம்" என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இங்குதான் ஈலாமின் வரலாறு தொடங்குகிறது. வரலாற்று ரீதியாக, பண்டைய அண்மைய கிழக்கின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான குஜெஸ்தான் பகுதியில் இருந்த ஈலாமின் தலைநகராக பண்டைய சூசா இருந்ததாக வரலாற்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
புவியியலும், காலநிலையும்
குஜெஸ்தான் மாகாணமானது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை அஹ்வாஸ் ரிட்ஜ் பாறைக் குன்றுகளில் வடக்கே உள்ள மலைப்பகுதிகள் மற்றும் அதன் தெற்கே உள்ள சமவெளிகளும் சதுப்பு நிலங்களும் ஆகும். இப்பகுதியில் பாயும் கரோன், கர்கெஹ், ஜராஹி, மரோன் போன்ற ஆறுகளால் பாசனவசதி பெறுகிறது. வடக்குப் பகுதியில் பாரசீகரல்லாத பாக்தாரி என்னும் சிறுபான்மையினரைக் கொண்டதாகவும், தெற்குப் பகுதியானது குஜிலிஸ் என்றழைக்கப்படும் பல சிறுபான்மை குழுக்களைக் கொண்டதாக நெடுங்காலமாக இருந்தது. 1940 களின் பின்னர், பாரசீக வளைகுடா கடற்கரைப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் வர்த்தக மையங்களுக்கு ஈரான் முழுவதிலும் இருந்து வேலை தேடுவோர் வெள்ளமென வந்து சேர்ந்ததால், இந்த பிராந்தியமானது பாரசீக மொழி பேசும் பகுதியாக ஆனது. தற்பொழுது, குஜெஸ்தானமாகாணத்தில் இதை தாயகமாக கொண்ட பல்வேறு இனக் குழுக்கள் வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் அல்லாது தற்போது அரபியர்கள், பாரசீகர்கள், பாக்தாரி, குஷ்காய்ஸ், லோர்ஸ் ஆகியோரும் உள்ளனர்.
குஜெஸ்தான் மாகாணமானது வேளாண் துறையில் சிறந்து விளங்குகிறது. இது நாட்டின் பிற மாகாணங்களைவிட வேளாண்மையில் கிட்டத்தட்ட நிகரற்றதாக உள்ளது. மாகாணம் முழுவதும் பாயும் பெரிய மற்றும் ஆண்டு முழுக்க பாயக்கூடிய காருன் ஆறு வேளாண்மைக்கு துணை செய்கின்றன. காருன் ஆறானது, ஈரானின் பெரும்பகுதியில் சுமார் 850 கிலோமீட்டர் நீளத்திற்கு பாயும் ஆறாகும். இது இந்த மாகாணத்தின் வழியாக ஈராக்கில் பாயும் சாட் அராப் ஆற்றுடன் கலந்து பாரசீக வளைகுடாவில் கலக்கிறது.
குஜெஸ்தான் மாகாணத்தின் பருவநிலை பொதுவாக மிகவும் வெப்பமானதாகவும், அவ்வப்போது ஈரப்பதமானதாகவும் இருக்கும். குறிப்பாக தெற்கில், குளிர்காலமானது குளிர்ந்தும், உலர்ந்ததாகவும் இருக்கும். கோடை கால வெப்பநிலை 45 °C (113 °F) டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். மேலும் குளிர்கால வெப்ப நிலையானது உறைநிலைக்கு கீழே செல்கிறது. அக்சாவுக்கு தெற்கே தெற்கே எப்போதாவது பனிப்பொழிவு தென்படும்.
முக்கிய நகரங்கள்
மாகாணத்தில் உள்ள நகரங்களானது தலைநகரான Ahvaz மற்றும் பிறநகரங்களான அஹாதாஸ், கோர்ராம்ஷாஹர், டீஸ்புல், ஆண்டிமேஷ்க், ஷஷ், ஷுஷ்தார், பெஹ்பஹான், பண்டார்-ஈம் கோம்னி, ஓமிதியா, இஸேஹ், பாக்-எ-மாலேக், பந்தர்-இ மஹ்ஷர், சுசன்கர்ட், ராம்ஹோர்மோஸ், ஷேடகன், மஸ்ஜீத் சோலேமன், ஹவ்ஸேஹ் போன்றவை ஆகும்.
மாவட்டங்கள்
குஜெஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்களாக அய்சிஷ் கவுண்டி, டீஸ்ஃபுல் கவுண்டி, லலி கவுண்டி, ஆன்டிகா கவுண்டி, கோட்வண்ட் கவுண்டி, ஷுஷு கவுண்டி, ஷுஷ்தார் கவுண்டி, மஸ்ஜீத் சாய்லேமன் கவுண்டி, இசீ கவுண்டி, டாஷ்-ஏ ஆஸத்கான் கவுண்டி, ஹவ்ஸிஹௌன் கவுண்டி, பாக் -இ மாலிக் கவுண்டி, ராம்ஷோர்ஸ் கவுண்டி, கர்ன் கவுண்டி, ராம்ஷிர் கவுண்டி, ஒமீடிவ் கவுண்டி, அஜஜரி கவுண்டி, பெஹ்பஹான் கவுண்டி, ஹெண்டிஜான் கவுண்டி, மஹ்ஷ்ஹார் கவுண்டி, ஷடெகான் கவுண்டி, கொர்ராம்ஷாஹர் கவுண்டி, அபாடான் கவுண்டி போன்றவை உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Amar, official statistics site of Iran.
- ↑ "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.