கெர்லிங்கென்
கெர்லிங்கென் | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | பாடன்-வுர்ட்டம்பெர்க் |
நிரு. பிரிவு | இசுடுட்கார்ட் |
மாவட்டம் | Ludwigsburg |
Mayor | கியார்க் பிரென்னர் |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 17.54 ச.கி.மீ (6.8 ச.மை) |
ஏற்றம் | 336 m (1102 ft) |
மக்கட்தொகை | 18,873 (31 திசம்பர் 2006) |
- அடர்த்தி | 1,076 /km² (2,787 /sq mi) |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | LB |
அஞ்சல் குறியீடு | 70839 |
Area code | 07156 |
இணையத்தளம் | www.gerlingen.de |
கெர்லிங்கென் (Gerlingen) டாயிட்ச்சுலாந்தின் பாடன் வுயுர்ட்டம்பெர்க் மாநிலத்தில் உள்ள இசுடுட்கார்ட் நகரத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். வைலிம்டார்ப், லியோன்பெர்கு, டிட்ச்சிங்கென் ஆகிய ஊர்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.
புவியியல்
கெர்லிங்கென் லுட்விக்சுபெர்க் மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு நகராட்சி. கடல் மட்டத்தில் இருந்து 336 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மலைப்பாங்கான பகுதியாகும்.
நகர அருங்காட்சியகம்
கெர்லிங்கெனில் ஒரு நகர அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த காலங்களில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இங்கு வந்து வாழ்ந்த அங்கேரி மக்களின் வாழ்க்கை, பண்பாட்டைக் காட்டும் பொருட்களும் இங்குள்ளன. முன்பு பள்ளிக்கூடமாக இருந்த இக்கட்டிடம் பின்னர் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து
இங்கு பேருந்து, மற்றும் நகர்ப்புற இரயில் வசதிகள் உள்ளன.