கேட்டபிளியைட்டு
கேட்டபிளியைட்டு Catapleiite | |
---|---|
![]() கனடாவில் கிடைத்த கேட்டபிளியைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Na2ZrSi3O9·2H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது, பழுப்பு, பழுப்பு-சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் பழுப்பு, சதை சிவப்பு, ஆரஞ்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5–6 |
மிளிர்வு | மங்கலான பளபளப்பு |
ஒப்படர்த்தி | 2.65–2.9 |
கேட்டபிளியைட்டு (Catapleiite) என்பது Na2ZrSi3O9·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கெய்டோனாயிட்டு கனிமத்தின் ஈருருவான இது அரிதாகவே கண்டறியப்படுகிறது. இதன் பெயர் கிரேக்க சொற்களான கட்டா மற்றும் பிலியோன் என்பவற்றிலிருந்து பெறப்பட்டது. மேலும் பலவற்றுடன் என்பது இச்சொற்களின் பொருளாகும். ஏனெனில் கேட்டபிளியைட்டு பெரும்பாலும் பல அரிய கனிமங்களுடன் சேர்ந்தே உள்ளது. தூய்மையான நிலையில் இது நிறமற்றதாக இருக்கும். ஆனால் கேட்டபிளியைட்டு பெரும்பாலும் பழுப்பு, பழுப்பு-சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் பழுப்பு, சதை சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. பெரும்பாலும் இக்கனிமம் நார்வே நாட்டின் இலாவன் தீவில் காணப்படுகிறது. மோவின் அளவுகோலில் இதன் கடினத்தன்மை சுமார் 5.5-6 ஆகும். கேட்டபிளியைட்டு கனிமம் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Catapleiite: Mineral information, data and localities". www.mindat.org. Retrieved 2019-04-03.
- ↑ Minerals, Dakota Matrix. "Catapleiite mineral information and data". www.dakotamatrix.com (in ஆங்கிலம்). Retrieved 2019-04-03.