கேன்டர்பரி நகரின் அன்சலேம்
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் | |
---|---|
கேன்டர்பரி நகரின் பேராயர் | |
மறைமாநிலம் | கேடன்பரி |
மறைமாவட்டம் | கேடன்பரி |
ஆட்சி பீடம் | கேடன்பரி |
நியமனம் | 1093 |
ஆட்சி முடிவு | 21 ஏப்ரல் 1109 |
முன்னிருந்தவர் | லான்ஃப்ரேன்க் |
பின்வந்தவர் | ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ் |
பிற பதவிகள் | பெக் ஆதீனத் தலைவர் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 4 டிசம்பர் 1093 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ஆஸ்தா நகரின் அன்சலேம் |
பிறப்பு | அண். 1033 ஆஸ்தா, பர்கண்டி பேரரசு |
இறப்பு | 21 ஏப்ரல் 1109 கேன்டர்பரி, இங்கிலாந்து | (அகவை 75)
கல்லறை | கேன்டர்பரி மறைமாவட்டப்பேராலயம் |
பெற்றோர் | கந்தால்ஃப் எமென்பெர்கா |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | 21 ஏப்ரல் |
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் (Anselm of Canterbury) அல்லது பெக்கின் புனித அன்சலேம் (Anselm of Bec, /ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேன்டர்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும்.
மேற்கோள்கள்