கொத்தபேட்டை , ஐதராபாத்து

கொத்தபேட்டை
அண்மைப்பகுதி
கொத்தபேட்டை is located in தெலங்காணா
கொத்தபேட்டை
கொத்தபேட்டை
தெலங்காணாவில் கொத்தபேட்டை கிராமத்தின் அமைவிடம்
கொத்தபேட்டை is located in இந்தியா
கொத்தபேட்டை
கொத்தபேட்டை
கொத்தபேட்டை (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°22′34″N 78°32′46″E / 17.376197°N 78.546053°E / 17.376197; 78.546053
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
பகுதிகிழக்கு
வட்டம்எல்.பி நகர்/காடியன்னாரம்
வார்டு8
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்33,684
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500 035
வாகனப் பதிவுTS
மக்களவைத் தொகுதிமல்காஜ்கிரி
சட்டப் பேரவைப் தொகுதிமகேசுவரம்
நகரத் திட்டமிடல் நிறுவனம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி

கொத்தபேட்டை (Kothapet) என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரத்திலுள்ள ஒரு பெரிய வணிக மற்றும் குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இது தேசிய நெடுஞ்சாலை 9 இன் ஒரு பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. இது ரங்காரெட்டி மாவட்டத்தின் மகேசுவரம் தொகுதிக்குட்பட்டது.

வரலாறு

ஆரம்பத்தில் கிராம ஊராட்சியாக இருந்த கொத்தபேட்டை கிராமம், பின்னர் ஐதராபாத்து பெருநகர வளர்ச்சி ஆணையப் பகுதிக்குள் உள்வாங்கப்பட்டது. பின்னர், நகராட்சியுடன் இணைக்கப்பட்டது.[2] இந்த கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து தெலங்காணா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் மனு ரத்து செய்யப்பட்டது. [3]


பொருளாதாரம்

தெலங்காணா மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய பழச் சந்தைகளில் ஒன்றாக கொத்தப்பேட்டை உள்ளது.[4] இங்கு அசையாச் சொத்து வணிகம் வளர்ந்து வருகிறது.[5] உள்ளூர் வணிகங்கள் காரணமாக ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கொத்தபேட்டை பழச்சந்தையை கொகெடாவுக்கு மாற்ற முன்மொழியப்பட்டது.[6]

போக்குவரத்து

ஐதராபாத்து மெட்ரோ , தெலங்காணா மாநிலப் போக்குவரத்து பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சைதன்யபுரி மெட்ரோ நிலையம் ஆகியவற்றால் இந்த பகுதி நன்கு இணைக்கப்பட்டுள்ளாது[7]

மேற்கோள்கள்