கோகிலுயே, போயர்-அகமது மாகாணம்
கோகிலுயே, போயர்-அகமது மாகாணம்
استان کهگیلویه و بویراحمد | |
---|---|
ஈரானில் கோகிலுயே, போயர்-அகமது மாகாண அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30°40′N 51°36′E / 30.67°N 51.60°E | |
Country | ஈரான் |
Region | Region 2 |
Capital (political)|Capital | Yasuj |
Counties of Iran|Counties | 5 |
பரப்பளவு | |
• மொத்தம் | 15,504 km2 (5,986 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,58,629 |
• அடர்த்தி | 42/km2 (110/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRST) |
Main language(s) | Official: Persian Majority:Luri |
HDI (2017) | 0.796[2] high · 16th |
கோகிலுயே, போயர்-அகமது மாகாணம் (Kohgiluyeh and Boyer-Ahmad Province ) (பாரசீக மொழி: استان کهگیلویه و بویراحمد, Ostān-e Kohgīlūye va Būyer-Ahmad ) (Luri: استان کهگیلویه و بِیرَمَد, Ostān-e Kohgīrūye-o Beyramad ) என்பது ஈரான் நாட்டில் நிருவாக முறைமைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட முப்பத்து ஒரு நில நிருவாக மாகாணாங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் ஈரான் நாட்டின் தென்மேற்கில், அமைந்து உள்ளது.[3] அதன் தலைநகரம் யாசுச்வு ஆகும். இந்த மாகாணம் 15,563 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, 2006 ஆம் ஆண்டில், 634,000 மக்கள் தொகையைக் கொண்டிருந்தனர். தேசிய மக்கள் தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பின்படி, 2011 ல் இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 658,629 நபர்கள் ஆகும். மக்கள் முக்கியமாக உலூரி மொழி பேசுகிறார்கள். கோகிலுயே, போயர்-அகமது மாகாணத்தின் மாவட்டங்கள் பகமாய் கவுண்டி, இலாண்டே கவுண்டி, போயர்-அகமது கவுண்டி, சரம் கவுண்டி, தானா கவுண்டி, பாசிட்டு கவுண்டி மற்றும் கட்சரன் கவுண்டி .
நிலவியல்
ஜாக்ரோஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த மாகாணம், பெரும்பாலும் நிலப்பரப்பில் உள்ளது. 5,109 மீட்டர் உயரத்துடன் தேனா என்ற சிகமாமே இதன் மிக உயரமான இடம் ஆகும். தேனாவின் மலைத்தொடர், 20 க்கும் மேற்பட்ட உயரமான சிகரங்களையும், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரமும் கொண்டவை ஆகும். பெரிய இமயமலைத்தொடரின் சிறுவடிவ மாதிரிப் போல இந்த மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. கோகிலுயே, போயர்-அகமது மாகாணத்தில் அமைந்துள்ள இந்த மலைத்தொடர் ஓக் மரங்கள் நிறைந்த காடுகளைக் கொண்டு நெருக்கமாகச் சூழப்பட்டுள்ளது. இயற்கை நீரூற்றுகள், பறவைகளின் பாட்டு ஒலிகள், புதிய காற்று ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. குறிப்பாக, இயற்கையின் அனைத்து காதலர்களையும், வெகுவாகக் கவர்ந்து இழுக்கின்றன. ஈரான் நாட்டில் அமைந்துள்ள மற்றொரு மலை கச்சரனின், காமின் அல்லது காமி குறிப்பிடத் தகுந்த இடமாகும்.
ஆட்சி
இந்த மாகாணத்தின் தலைநகரம், யாசுச்வு (Yāsūj) (பாரசீக மொழி: ⓘ (Lurish: یاسووج Jasuc or یاسیچ Jasyç)[4] என்ற நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இத்தலைநகரில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 20,297 ஆகும். அக்குடும்பங்களில் 96,786, நபர்களில் வாழ்கின்றனர் என கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.[5] ஈரானின் இந்த மாகாண நிலவரம்புகள் மேலும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப் படுகின்றன. ஒவ்வொரு நிலப்பகுதியும் 'கௌன்டி' என அழைக்கப் படுகிறது. அவை பின்வரும் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பாமை கௌன்டி(Bahmai County), பாசிட் கௌன்டி(Basht County), போயர்-அகமது கௌன்டி(Boyer-Ahmad County), சாரம் கௌன்டி (Charam County), தானா கௌன்டி (Dana County), காச்சரன் கௌன்டி(Gachsaran County), கோகிலுயே கௌன்டி(Kohgiluyeh County), லேன்டே கௌன்டி (Landeh County) என்பனவாகும். யாசுச்வு (Yāsūj) என்ற இதன் தலைநகரானது, தொழிற்கூடங்கள் மிகுந்த தொழிற் நகரமாக உள்ளது. இந்நகருக்கு அருகே சாக்குரோசு மலைகள் (Zagros Mountains) உள்ளன. இந்நகரமானது, ஈரானின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.[6] இந்நகர மக்கள் லூரி மொழியைப் பேசுகின்றனர். இந்நகரில் சர்க்கரை ஆலையும்,[7] நிலக்கரியை எரித்து உற்பத்திச் செய்யப்படும் மின்சார உற்பத்தி நிலையமும் இருக்கின்றன. வெண்கலக் காலம் என்ற மானுட வாழ்வியல் தொடக்கம் முதலே, இந்நகரத்தில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்குரிய வரலாற்றுச் சுவடுகளை, இம்மாகாணத்தின் அருங்காட்சியகங்களில் காணலாம்.
மேற்கோள்கள்
- ↑ Selected Findings of the 2011 National Population and Housing Census பரணிடப்பட்டது 2014-11-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "همشهری آنلاین-استانهای کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140623191332/http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces.
- ↑ கோகிலுயே, போயர்-அகமது மாகாணம் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
- ↑ "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. Archived from the original (Excel) on 2011-11-11.
{cite web}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Taylor & Francis Group (2003). "Iran".. London: Europa.
- ↑ Loeffler, Reinhold L. (1976). "Recent Economic Changes in Boir Ahmad: Regional Growth without Development". Iranian Studies 9(4): 266-287, 269.
வெளியிணைப்புகள்
- யசுஜ் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2022-04-02 at the வந்தவழி இயந்திரம்
- கச்சரனின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2022-03-20 at the வந்தவழி இயந்திரம்
- யசுஜ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2005-10-30 at the வந்தவழி இயந்திரம்
- கோகிலுயே, போயர்-அகமது மாகாணம் ஆளுநரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2008-09-13 at the வந்தவழி இயந்திரம்
- 1970 களில் சுஷா குப்பி பாடிய ஒரு போயர்-அஹ்மத்-ஐ நாட்டுப்புற பாடல்: போயர்-அஹ்மத்-ஐ பழங்குடியினரிடமிருந்து பெண்