கோக் துருக்கியர்கள்

கோக் துருக்கியர்கள்
𐱅𐰇𐰼𐰰:𐰉𐰆𐰑𐰣
துருக் போதுன்
தற்கால மங்கோலியாவில் உள்ள கோக் துருக்கிய பாறை ஓவியங்கள் (6ஆம் முதல் 8ஆம் நூற்றாண்டு).[1]
மொத்த மக்கள்தொகை
சில துருக்கிய மக்கள் தொகைகளுக்கு முன்னோர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
நடு மற்றும் கிழக்காசியா
மொழி(கள்)
பழைய துருக்கியம்[2]
சமயங்கள்
தெங்கிரி மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
துருகேசு, தோகுஸ் ஒகுஸ், எனிசை கிர்கிசு, சுயேயந்துவோ, சதுவோ[3]

கோக் துருக்கியர்கள் என்பவர்கள் நடுக்கால உள் ஆசியாவில் இருந்த துருக்கிய மக்களின் ஒரு நாடோடிக் கூட்டமைப்பு ஆகும். இவர்கள் பூமின் ககான் மற்றும் அவரது மகன்களின் தலைமைத்துவத்தின் கீழ் உரூரன் கானரசுக்கு பிறகு, இப்பகுதியில் முக்கிய சக்தியாக உருவாயினர். முதல் துருக்கிய ககானரசை நிறுவினர். துருக்கிய மக்களின் எதிர்கால புவி வாழிடம், கலாச்சாரம் மற்றும் முதன்மையான நம்பிக்கைகளை உருப்பெறச் செய்த பல நாடோடி அரசமரபுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது.  

சோரூன் பூம்பாகர் கல்லறைச் சுவரோவியம், கி. பி. 7ஆம் நூற்றாண்டு, மங்கோலியா.[4][5][6]
கோக் துருக்கியக் குதிரை வீரனின் சுவரோவியம், சோரூன் பூம்பகர் கல்லறை, கி. பி. 7ஆம் நூற்றாண்டு.

உசாத்துணை