கோட்டாறு மறைமாவட்டம்

கோட்டாறு மறைமாவட்டம்
Dioecesis Kottarensis
கோட்டாறு மறைமாவட்டம்
புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம்
புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம், இம்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில்
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு1,665 km2 (643 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
1,720,250
477,174 (27.7%)
பங்குதளங்கள்162
விவரம்
திருச்சபைகத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
உருவாக்கம்1930
கதீட்ரல்புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயம்
பாதுகாவலர்புனித பிரான்சிஸ் சவேரியார்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர்மேதகு நசரேன் சூசை

கோட்டாறு மறைமாவட்டம் (இலத்தீன்: Kottaren(sis)) என்பது கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் உட்பட்ட கத்தோலிக்க ஆட்சி பகுதியாகும். இது கோட்டாறு, குளச்சல், ஆலஞ்சி, முட்டம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. நசரேன் சூசை ஆவார் +919442365305ம். இது உருவாகும் போது சுமார் 96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.

வரலாறு

கொல்லம் மறைமாவட்டத்தின் தமிழ் வழங்கும் தென்பகுதி தனியாக பிரிக்கப்பட்டு வராப்புழை மறைமாநிலத்தின் கீழ் இணை மறைமாவட்டமாக கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.தோவாளை, அகத்தீசுவரம்,(அழகப்பபுரம் தவிர), கல்குளம், விளவங்கோடு,(தூத்தூர் முதலிய 3 கடற்கரை கிராமங்கள் தவிர) ஆகிய நான்கு தாலுக்காக்களையும் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோட்டாறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதியாக இருந்தது. இப்பகுதி 1956 நவம்பர் முதல் நாள் தமிழகத்தோடு இணைந்ததை தொடர்ந்து கோட்டறு மாவட்டம் 1963 ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து மதுரை மறைமாநிலத்தின் ஓர் இணை மறைமாவட்டமாக மாறிற்று.

குழித்துறை மறைமாவட்டம்

2014ஆம் ஆண்டு, திசம்பர் 22ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து ஒரு புதிய மறைமாவட்டம் உருவாகியது. குழித்துறை மறைமாவட்டம் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மறைமாவட்டத்தை திருத்தந்தை பிரான்சிசு உருவாக்கினார். கோட்டாறு மறைமாவட்டத்தின் திரித்துவபுரம் மற்றும் முளகுமூடு என்ற இரு பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநில சலேசிய சபையைச் சார்ந்தவர்.

கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர்: நசரேன் சூசை

2017, மே மாதம் 20ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு, கோட்டாறு மறைமாவட்டத்தின் கன்னியாகுமரி நகரில் அலங்கார அன்னை ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அருள்திரு நசரேன் சூசை என்பவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார்.

ஆயர் நசரேன் சூசைக்குத் திருநிலைப்பாடு விழா 2017, சூன் 29ஆம் நாள், தூய திருத்தூதர் பேதுரு, பவுல் பெருவிழாவன்று கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நிகழ்ந்தது.

ஆயர் நசரேன் சூசை வாழ்க்கைக் குறிப்புகள்

  • பிறப்பு: இராஜக்கமங்கலம் துறை, கோட்டாறு மறைமாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், ஏப்ரல் 13, 1963
  • கல்வி:

தூய ஞானப்பிரகாசியார் இளங்குருமடம், நாகர்கோவில் மெய்யியல், இறையியல் படிப்பு: தூய இதயக் குருத்துவக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை இறையியல் முதுகலைப் பட்டம்: கத்தோலிக்க பல்கலைக் கழகம், லுவேன், பெல்ஜியம் இறையியல் முனைவர் பட்டம்: திருத்தந்தை கிரகோரியார் பல்கலைக் கழகம், உரோமை அரசியல் துறை முதுகலைப் பட்டம்: மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

  • கோட்டாறு மறைமாவட்ட குருவாகத் திருநிலைப்பாடு: 1989, ஏப்பிரல் 2
  • பணிகள்:

1989-1990: உதவிப் பங்குத்தந்தை, குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயம்

1990-1992: தமிழ்நாடு சேவியர் மிஷன் ஹோம் துணை இயக்குநர். மறைமாவட்ட இறையழைத்தல் குழுச் செயலர்

1992-1998: இனையம் புனித எலேனம்மாள் ஆலயப் பங்குத் தந்தை. மறைமாவட்டக் கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுச் செயலர். குருக்கள் நலக் குழு உறுப்பினர்

1998-2000: பெல்ஜியம் நாட்டில் லுவேன் பல்கலைக் கழகத்தில் இறையியல் மேற்படிப்பு

2000-2003: உரோமையில் திருத்தந்தை கிரகோரியார் பல்கலைக் கழகத்தில் இறையியல் முனைவர் பட்டப் படிப்பு

2003-2011: சென்னை, பூவிருந்தவல்லியில் திரு இதயக் குருத்துவக் கல்லூரியில் இறையியல் பேராசிரியர் பணி. இறையியல் துறைத் தலைவர்

2013 மார்ச் மாதத்திலிருந்து கன்னியாகுமரி நகரில் புனித அலங்கார அன்னை ஆலயப் பங்குத் தந்தை. கன்னியாகுமரி மறைவட்டத் தலைவர் பணி. பல இறையியல் கல்வி நிறுவனங்களில் அழைப்புப் பேராசிரியராகப் பணி (திரு இதயக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை; சென்னைப் பல்கலைக் கழகம்; இந்தியத் துறவியர் இறையியல் கல்வியகம், பெங்களூரு; சம்பல்பூர், ஒடிசா; சலேசிய இறையியல் கல்வியகம், சென்னை; தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி; அருள் கடல், சென்னை)

மறைமாவட்ட ஆயர்கள்

  1. மேதகு லாரன்ஸ் பெரைரா(1930-1938)
  2. மேதகு தாமஸ் ரோக் ஆஞ்ஞிசுவாமி(1939-1971)
  3. மேதகு மரியானுஸ் ஆரோக்கிய சாமி(1971-1987)
  4. மேதகு லியோன் தர்மராஜ்(05.02.1989-16.01.2007)
  5. மேதகு பீட்டர் ரெமிஜியஸ்(24.06.2007- 20.05.2017)
  6. மேதகு நசரேன் சூசை (20.05.2017 - )

மறைமாவட்ட முக்கிய நிகழ்வுகள்

  • மறைமாவட்ட வெள்ளிவிழா-செப். 28, 1955
  • மறைமாவட்ட பொன்விழா- மே 24,25, 1980
  • மறைமாவட்ட பவள விழா- மே 5, 2005
  • புதிய குழித்துறை மறைமாவட்டம் உருவாதல் - திசம்பர் 22, 2014

மக்கள் தொகை, பணியாளர்கள் புள்ளி விபரங்கள்

  • கன்னியாகுமரி மாவட்ட மொத்த மக்கள் தொகை - 17,41,000
  • கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் - 2,52,979
  • மறைமாவட்ட அருள்பணியாளர்கள் - 208

மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவற சபைகள்

  • அருள்பணியாளர்கள் சபைகள் - 9
  • அருள் சகோதரர்கள் சபைகள் -3
  • அருள் சகோதரிகள் சபைக்ள - 38

மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவியர்

  • அருள் பணியாளர்கள் - 35
  • அருள் சகோதரிகள் - 445
  • அருள் சகோதரர்கள் - 15

மறைமாவட்ட அமைப்புகளும் நிறுவனங்களும்

  • பங்குகள் - 92
  • கிளைப்பங்குகள் - 38
  • குருமாணவர்கள் - 42
  • கோட்டாறு மறைவட்டம் - 22 பங்குகள் 05 கிளைப்பங்குகள்
  • கன்னியாகுமரி மறைவட்டம் - 12 பங்குகள் 06 கிளைப்பங்குகள்
  • தேவசகாயம் மவுண்ட் மறைவட்டம் - 19 பங்குகள் 18 கிளைப்பங்குகள்
  • குளச்சல் மறைவட்டம் - 12 பங்குகள் 04 கிளை பங்குகள்
  • முட்டம் மறைவட்டம் - 16 பங்குகள் 04 கிளைப்பங்குகள்
  • ஆலஞ்சி மறைவட்டம் - 11 பங்குகள் 01 கிளைப்பங்குகள்
  • ஆயரின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் - 10
  • அருள்பணியாளர்கள் மன்றம் உறுப்பினர்கள் - 26

கல்வி நிறுவனங்கள்

மறைமாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்கள்

  • மேல்நிலைப்பள்ளிகள் - 07
  • உயர்நிலைப்பள்ளிகள் - 10
  • நடுநிலைப்பள்ளிகள் - 09
  • தொடக்க பள்ளிகள் - 26
  • ஆங்கிலப்பள்ளிகள் - 03
  • தொழிற்பயிற்சி நிறுவனங்கள் - 03
  • சமுதாயக் கல்லூரி - 01
  • ஆசிரியர் பயிற்சி நிறுவனம் - 01
  • செவிலியர் பயிற்சி நிறுவனம் - 01

துறவியர் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்

  • கல்லூரி - 02
  • மேல்நிலைப்பள்ளிகள் - 07
  • உயர்நிலைப்பள்ளிகள் - 06
  • நடுநிலைப்பள்ளிகள் - 01
  • தொடக்கப்பள்ளிகள் - 09
  • ஆங்கில பள்ளிகள் - 11
  • பொறியியல் கல்லூரி - 01

கிராம சேவை நிறுவனங்கள்

  • கிராம விழிப்புணர்வுத் திட்டம் சங்கங்கள்
  • கிராம விழிப்புணர்வுத் திட்ட சுய உதவிக்குழுக்கள்-110
  • கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி திட்டம்
  • மாதர் தன்னம்பிக்கை இயக்கம் (கைகள்) சங்கங்கள்
  • தலித் முன்னேற்றத் திட்ட்ம்
  • உள்நாட்டு மீனவர் சங்கங்கள்
  • படகு கட்டும் மையம்
  • மக்கள் வங்கி
  • மருத்துவ மனைகள் (07)
  • மருத்துவ சேவை மையங்கள் (7)
  • முதியோர் இல்லங்கள் (04)
  • குழந்தைகள் கருணை இல்லங்கள் (10)
  • மதுநோயாளிகள் மறுவாழ்வு மையம் (02)

மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்

  • விவிலியம்
  • திருவழிபாடு
  • மறைக்கல்வி
  • நற்செய்தி அறிவிப்பு
  • அன்பியம்
  • அழைத்தல்
  • சமூக நீதி
  • கிறித்தவ ஒன்றிப்பு
  • பல்சமய உரையாடல்
  • குடும்பம்
  • கல்வி
  • சமூகத் தொடர்பு
  • நலவாழ்வு
  • சமூகச் சேவை
  • சிறார்
  • இளைஞர்
  • பெண்கள்
  • தொழிலாளர்
  • தலித்
  • பொதுநிலையினர்
  • துறவியர்
  • சிறைப்பணி

பக்தசபைகளும் இயக்கங்களும்

  • பாலர் சபை
  • சிறுவழி இயக்கம்
  • இளம் கிறித்தவ மாணவர் இயக்கம்
  • இளைஞர் இயக்கம்
  • பெண்கள் இயக்கம்
  • குடும்பநல இயக்கம்
  • இளம் கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம்
  • கத்தோலிக்க சங்கம்
  • கத்தோலிக்க சேவா சங்கம்
  • கார்மேல் மூன்றாம் சபை
  • கிறித்தவ வாழ்வு சமூகம்
  • பிரான்சிஸ்கள் மூன்றாம் சபை
  • மரியாயின் சேனை
  • வின்சென்ட் தே பவுல் சங்கம்
  • கோல்பின் இயக்கம்
  • நல்லுலக இயக்கம்
  • ஆசிரியர்கள் சங்கம்
  • திருஇருதய சபை
  • இளம் கிறித்தவ தொழிலாளர் இயக்கம்
  • கிறித்தவ தொழிலாளர் இயக்கம்

மறைமாவட்ட வெளியீடுகள்

  • தென்ஒலி (மாத இதழ்)
  • கோட்டாறு மறைமாவட்ட செய்தி மடல் (மாத இதழ்)
  • அடித்தளம் (அன்பிய மாத இதழ்)
  • இளந்தளிர் (சிறார் இதழ்)
  • விடிவெள்ளி (கி.வா.ச)
  • யுகசிற்பி (இளைஞர் இதழ்)
  • ஓலமிடும் ஓசை (தலித்)

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

ஆயர் நசரேன் சூசை நியமனம் - வத்திக்கான் அறிக்கை

மேலும் காண்க