கோட்டுக்கல் குகைக்கோயில்

கோட்டுக்கல் குகைக் கோயில்

கோட்டுக்கல் குகைக் கோயில் (Kottukal cave temple) மலையாளத்தில் கல்ட்ரிகோவில் என்றும் அழைக்கப்படுவது குடவரைக் கட்டிடக்கலைக்கு உள்ள ஒரு பழமையான மாதிரி ஆகும், இது பொ.ச. 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அமைக்கபட்டது. இந்த குடவரையானது தென்னிந்தியாவின், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின், அன்சலுக்கு அருகிலுள்ள கோட்டுக்கால் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோட்டுக்கால் (அதாவது கோத்தியா கல்லு- செதுக்கப்பட்ட பாறை) என்பது பாறையில் வெட்டப்பட்ட சன்னதியைக் குறிக்கும். இங்கு சமமற்ற அளவிலான இரண்டு குகைகள் உள்ளன, இவை இரண்டும் கிழக்கு நோக்கியவையாக உள்ளன இரண்டுக்கும் இடையே முதன்மை தெய்வமான பிள்ளையார் சிற்பம் உள்ளது. [1] சிறிய குகையில் அனுமனின் சிலை உள்ளது, பெரி குகையில் ஒரு நந்தி (காளை) சிலை உள்ளது. [2] சிவலிங்க வடிவத்தில் ஒரு தெய்வமும் உள்ளது.

உள்ளூர் நாட்டார் நம்பிக்கைகளின்படி, நந்தி உள்ளிட்ட சிவ அவதாரங்களால் இந்தப் பகுதிக்கு பெரிய பாறை கொண்டு வரப்பட்டது. அதற்கு அருகில் உள்ள மற்றொரு சிறிய பாறையானது 'சும்மாடு பறை' என்று அழைக்கப்படுகிறது. அதாவது பெரிய பாறையை தலையில் வைக்ககும்போது அது தலையில் உறுத்தாமல் இருப்பதற்காக வைக்கப்படும் சும்மாடு என நம்பப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் இதன் காலத்தை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என கணித்துள்ளனர். இதன் அருகில் உள்ள சடையமங்கலத்தை ஆண்ட நெடில பராந்தக நெடுச்சடையன் என்பவன் இந்த பாறையில் குகையை குடைந்து கோயிலாக்கினான் என்று கருதுகின்றனர். இது இப்போது பரந்த அளவிலான நெல் வயல்களின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள் வழிபாட்டு சடங்குகள் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தினால் செய்யப்படுகின்றது. இப்பகுதியில் நிலவும் அமைதியான சூழல் பயணிகளை ஈர்க்கிறது. இந்த இடத்தை கொல்லத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவு பயணித்து அடையலாம். [3]

குறிப்புகள்

  1. "Kottukal Kal Thrikovil Cave Temple". ananthapuri.com. Archived from the original on 20 November 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2012.
  2. Cultural heritage of Kerala. D.C. Books, Kerala.
  3. "Kottukal Rock Cut Cave Temple". hampi.in. Archived from the original on 27 December 2010. பார்க்கப்பட்ட நாள் 25 December 2010.