கோணமூக்கு உள்ளான்
கோணமூக்கு உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | ஏவ்சு
|
வரிசை: | |
குடும்பம்: | Recurvirostridae
|
பேரினம்: | Recurvirostra
|
இனம்: | R. avosetta
|
இருசொற் பெயரீடு | |
Recurvirostra avosetta இலினேயசு, 1758 | |
Range of R. avosetta
Breeding Resident Non-breeding |
கோணமூக்கு உள்ளான் (pied avocet - Recurvirostra avosetta) என்பது ஒரு பெரிய கருப்பு வெள்ளை கரையோரப் பறவை ஆகும். இவை மிதவெப்பமண்டல ஐரோப்பிய, மேற்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகள், உருசிய தூரக்கிழக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஒரு வலசை போகும் பறவை இனம் ஆகும். மேலும் இவை குளிர்காலம் முழுவதையும் ஆப்பிரிக்க மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் கழிக்கின்றன.[2]
வகைப்பாட்டியல்
கோணமூக்கு உள்ளான் கரோலஸ் லின்னேயஸ் எழுதிய முக்கியமான நூலான இசுசிசுடமா நாடுரே (Systema Naturae)வில் விவரிக்கப்பட்ட பல பறவை இனங்களில் ஒன்றாகும் .இப்பறவை அவோசெட்டா என்ற வெனிசியச் சொல்லிலிருந்து அதன் ஆங்கில மற்றும் அறிவியல் பெயர்களைப் பெறுகின்றது.
விளக்கம்
இப்பறவை கௌதாரியைவிட அளவில் பெரியது. கருப்பும் வெண்மையுமான தோற்றம் கொண்ட இப்பறவையின் அலகு மேல்நோக்கி வளைந்து கருப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் நீண்டு இருப்பதைக் கொண்டு மற்ற உள்ளான்களில் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறியலாம். விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்கள் நீலங் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். இது தோராயமாக 16.5–17.75 அங்குலம் (41.9–45.1 செமீ) நீளம் கொண்டது, இதன் அலகு தோராயமாக 2.95–3.35 அங்குலம் (7.5–8.5 செமீ) நீளம் இருக்கும். கால்கள் தோராயமாக 3–4 அங்குலம் (7.6–10.2 செமீ) நீளம் இருக்கும். இதன் இறக்கைகள் தோராயமாக 30-31.5 அங்குலம் (76-80 செ.மீ) அகலம் இருக்கும்.[3] ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கும்.
இவை பறக்கும்போது ச்கிலோயிட் என்ற ஒலிக்குறிப்பில் தொடர்ந்து பலமுறை கத்தும்.[3]
நடத்தை
கோண மூக்கு உள்ளான்கள் இணையாகவோ சிறு கூட்டமாகவோ காணப்படும். சேற்றில் ஓடியாடியும் ஆழமற்ற தீரில் இறங்கியும் இரைதேடும். மேல் நோக்கி வளைந்த அலகைக் கொண்டு தரையைக் கிளறி புழுப்பூச்சிகளை வெளிப்படுத்திப் பிடிக்கும். வாத்துபோல நீரில் மிதந்து நீந்தி இரைதேடுவதும் உண்டு. இவை பூச்சிகள், சிறிய நீர் ஓட்டுமீன்கள் (Crustaceans) , சிறிய மீன்கள், நீர்வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றை உணவாக்கிக் கொள்ளும்.[4][5]
கூடு
இவ்வகை உள்ளான்ங்கள் தங்களின் கூடுகளை மண், சேறு மற்றும் சிறிய தாவரங்களை வைத்து தரையில் அமைக்கும். ஒரே குடியேற்றத்தினுள் அமைக்கப்படும் கூடுகள் பெரும்பாலும் ஒரு மீட்டர். தொலைவில் இருக்கும். இவை மூன்று முதல் ஐந்து முட்டைகளை குடுகளில் இடும். இனப்பெருக்க காலத்தின் போது ஆண் பறவையும் பெண் பறவையும் சேர்ந்தே இருக்கும்.[5]
Gallery
-
முதிர்ந்த பறவை உணவு உண்ணுகிறது
-
பறக்கும் முதிர்ந்த பறவை
-
Avocet egg
-
ID composite
-
பறவை உணவு தேடும் காணளி
-
இந்தியாவின் சிறிய கட்ச் பகுதியில் உள்ள பறவை
-
கோணமூக்கு உள்ளான் வலைப் பாதம் கொண்டுள்ளதால், நன்றாக நீந்த முடியும்.
மேற்கோள்கள்
- ↑ BirdLife International (2012). "Recurvirostra avosetta". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22693712A38534148. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22693712A38534148.en. http://www.iucnredlist.org/details/22693712/0. பார்த்த நாள்: 27 August 2016.
- ↑ Linnaeus, Carl (1758). Caroli Linnæi Systema naturæ. Regnum animale. Editio decima, 1758, cura Societatis zoologicæ germanicæ iterum edita https://archive.org/stream/carolilinnaeisy00gesegoog#page/n159/mode/1up
- ↑ 3.0 3.1 The Birds of the Western Palearctic (Abridged ed.). Oxford University Press. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
- ↑ http://animalsadda.com/avocet/
- ↑ 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-08. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.