கோபால்பூர்
கோபால்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 19°16′N 84°55′E / 19.27°N 84.92°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மாவட்டம் |
ஒடிசா | கஞ்சம் |
அரசு | |
• நிர்வாகம் | பேரூராட்சி |
ஏற்றம் | 1 m (3 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,221 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 761002 |
தொலைபேசி குறியீடு எண் | 0680 |
வாகனப் பதிவு |
|
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு |
இணையதளம் | odisha |
கோபால்பூர் (Gopalpur) கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தெற்கில் உள்ள காஞ்சம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவை ஒட்டி துறைமுகத்துடன் கூடிய கடற்கரை பேரூராட்சி நகரம் ஆகும். கோபால்பூர், கஞ்சம் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான பெர்காம்பூர் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 11 வார்டுகளும், 1,480 வீடுகளும் கொண்ட கோபால்பூர் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 7,221 ஆகும். அதில் ஆண்கள் 3,622 மற்றும் பெண்கள் 3,599 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 794 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 61.77% ஆகும்.
இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 681 மற்றும் 22 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 90.04%, இசுலாமியர்கள் 2.45%, கிறித்துவர்கள் 7.33% மற்றவர்கள் 0.17% ஆக உள்ளனர்.[1][2]
வரலாறு
பண்டைய கலிங்கர் காலம்
கோபால்பூர் பண்டைய கலிங்க நாட்டின் துறைமுக நகரமாக விளங்கியது. கோபால்பூர் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெற்றது. பெரிய அளவில் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டது.[3]
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில்
கோபால்பூர் துறைமுகத்தில் மீன்பிடி துறைகள் நிறுவப்பட்டதுடன், கலங்கரை விளக்கமும் அமைக்கப்பட்டது. மேலும் பெரிய அளவில் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டதுடன், பர்மாவுடன் கடல் வாணிபம் செய்ய இத்துறைமுகம்பயன்படுத்தப்பட்டது.
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், கோபால்பூர் (1981–2010, extremes 1901–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.3 (93.7) |
36.7 (98.1) |
40.0 (104) |
39.1 (102.4) |
43.3 (109.9) |
44.0 (111.2) |
39.4 (102.9) |
37.7 (99.9) |
37.1 (98.8) |
37.0 (98.6) |
36.1 (97) |
33.2 (91.8) |
44.0 (111.2) |
உயர் சராசரி °C (°F) | 27.7 (81.9) |
29.6 (85.3) |
31.1 (88) |
31.6 (88.9) |
32.8 (91) |
32.6 (90.7) |
31.5 (88.7) |
31.6 (88.9) |
32.3 (90.1) |
32.0 (89.6) |
30.4 (86.7) |
28.4 (83.1) |
31.0 (87.8) |
தாழ் சராசரி °C (°F) | 17.3 (63.1) |
20.0 (68) |
23.2 (73.8) |
25.2 (77.4) |
26.9 (80.4) |
27.1 (80.8) |
26.4 (79.5) |
26.2 (79.2) |
26.0 (78.8) |
23.9 (75) |
20.3 (68.5) |
17.2 (63) |
23.3 (73.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.0 (50) |
11.7 (53.1) |
15.4 (59.7) |
16.5 (61.7) |
19.3 (66.7) |
20.5 (68.9) |
20.6 (69.1) |
18.6 (65.5) |
20.6 (69.1) |
16.7 (62.1) |
9.6 (49.3) |
10.0 (50) |
9.6 (49.3) |
மழைப்பொழிவுmm (inches) | 11.9 (0.469) |
16.1 (0.634) |
18.6 (0.732) |
26.3 (1.035) |
62.0 (2.441) |
140.2 (5.52) |
179.0 (7.047) |
213.1 (8.39) |
196.2 (7.724) |
199.6 (7.858) |
92.8 (3.654) |
10.6 (0.417) |
1,166.4 (45.921) |
% ஈரப்பதம் | 72 | 75 | 81 | 85 | 82 | 82 | 85 | 84 | 82 | 75 | 68 | 67 | 78 |
சராசரி மழை நாட்கள் | 0.8 | 1.2 | 1.2 | 1.6 | 3.6 | 7.3 | 9.3 | 10.9 | 8.4 | 6.9 | 2.8 | 0.5 | 54.5 |
ஆதாரம்: India Meteorological Department[4][5] |
படக்காட்சிகள்
-
கோபால்பூர் கலங்கரை விளக்கம்
-
2010-இல் கோபால்பூர் கடற்கரை
-
கோபால்பூர் நகரத்தின் காட்சி
-
கோபால்பூர் துறைமுகம்
மேற்கோள்கள்
- ↑ Gopalpur Population Census 2011
- ↑ Gopalpur Population, Religion, Caste, Working Data Ganjam, Odisha - Census 2011
- ↑ Patra, Benudhar (2013), PORTS AND PORT TOWNS OF EARLY ODISHA: TEXT, ARCHAEOLOGY AND IDENTIFICATION, Indian History Congress, p. 59
- ↑ "Station: Gopalpur Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 295–296. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M163. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
வெளி இணைப்புகள்
- https://virtualrealityshow.ueniweb.com/ Maa Khambeswari 9D Cinema
- https://eurokidschatrapur.in/our-classes/ பரணிடப்பட்டது 2019-08-25 at the வந்தவழி இயந்திரம் Eurokids Chatrapur
- http://www.thehindubusinessline.com/life/2002/11/18/stories/2002111800050300.htm
- Gopalpur Site Visit www.gopalpur.com
- Cyclone Phailin Relief www.rapidresponse.org.in
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Gopalpur-on-sea