கோரக்கர்
கோரக்கர் (Korakkar) என்பார் தமிழக சித்தர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தியர் மற்றும் போகர் ஆகியோரின் மாணவராக இருந்தார். போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இவரது பிறப்பிடம் எனினும் வடநாட்டில் திருத்தலமான புருடன்குடி எனப்படும் இன்று பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்து உள்ளது.
கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.[1]
இவரது படைப்புகளாகக் கோரக்கர் மலாய் வாகதம் (கோரக்கரின் மலை மருந்துகள்),[1] மலை வாகடம், கோரக்கர் வைப்பு, காலமேகம், மராலி வரதம், நிலாயோடுகம், சந்திரரேகை நூல் மற்றும் பல உள்ளன.
கோரக்கர் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்து சந்திரரேகை நூலில் எழுதியுள்ளார். இவர் கணித்த அத்தகைய ஒரு நிகழ்வு என்னவென்றால், மக்கள் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் உலகில் பிறப்பார்.
இவர் நீண்ட காலம் தங்கியிருந்த கோரக்கரின் குகை தமிழ்நாட்டின் சதுரகிரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 White, David Gordon (2007) [1996]. The Alchemical Body: Siddha Traditions in Medieval India. University of Chicago Press. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-22614-934-9.