கோருமாரா தேசியப் பூங்கா
கோருமாரா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
கோருமாரா தேசியப் பூங்காவின் நுழைவாயில் | |
அமைவிடம் | மேற்கு வங்காளம், இந்தியா |
ஆள்கூறுகள் | 26°42′N 88°48′E / 26.7°N 88.8°E |
நிறுவப்பட்டது | 1949 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு மற்றும் மேற்கு வங்காள அரசு |
கோருமாரா தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Gorumara National Park, வங்காள மொழி: গরুমারা জাতীয় উদ্যান) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இமயமலை அடிவாரத்தின் தெராய் பகுதியில் உள்ளது. இது புல்வெளிகளும் காடுகளும் நிறைந்த பகுதி ஆகும். இந்தப் பூங்காவில் இந்தியக் காண்டாமிருகம் அதிக அளவில் காணப்படுகிறது.
பராமரிப்பு
முதலில் இப்பகுதி 7 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் மட்டுமே இருந்தது. பின்னர் அருகிலுள்ள இடங்களையும் சேர்த்து 80 சதுர கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பூங்காவானது மேற்கு வங்காள அரசாலும், 2009 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சால் பராமரிக்கப்படுகிறது.[1]
உருவாக்கம்
1895 ஆண்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வந்தது. இது 1949 ஆம் ஆண்டு வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இங்கு காண்டாமிருகங்கள் அதிகரித்ததால் இப்பகுதி 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தியதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
அமைவிடம்
இந்தத் தேசியப் பூங்காவானது ஜல்பாய்குரி மாவட்டத்தில் மல்பஜார் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் வெப்பநிலை நவம்பர் முதல் பிப்ரவரி வரையான மாதங்களில் 10 முதல் 21 ° செல்சியசாகவும், மார்ச்சு மற்றும் ஏப்ரல் மாதங்களில் 24 முதல் 27 ° செல்சியசாகவும், மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் 27 to 37 ° செல்சியசாகவும் இருக்கும்.