கோலா

கோலா
Country of originஐக்கிய அமெரிக்கா
Colorகபிலம்
Flavorகோலா நட்

கோலா, இனிப்புச் சுவை மிக்க கார்பனேற்றப்பட்ட கஃபீன் அதிகமுள்ள ஒரு குடிபானம். இது பலராலும் விரும்பிக் குடிக்கப்படும் பானம் எனினும் இதை அதிகம் குடித்தால் உடலை பருமனாக்க உதவும்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இளநீர், மோர், பழச்சாறு, தேனீர் போன்ற பானங்களை விடுத்து மக்கள் கோலாவை இப்போது அதிகம் நுகர தொடங்கி உள்ளார்கள்.

கோலாவின் தொழிற்சாலை

உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி குடிக்கப்படும் பானம் கோலா ஆகும். நூறு வருடங்களுக்கு மேலாக இந்தப் பானம் முதலிடத்தில் உள்ளது.

கோலாவைவழங்கும் தொழிற்சாலைகள்:

  • கோக்க கோலா
  • பெப்சி
  • ஆர்.ஸி.கோலா

கோக்க கோலாவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட கோலா தொழிற்சாலையாகும். இவர்கள் இன்று வரை கோலா தயாரிக்கும் முறையை மர்மமாகவே வைத்துள்ளனர். இவர்களின் கிளை தொழிற்சாலைகளுக்கு கூட தயாரிக்கும் முறை தெரியாது. பானம் தயாரிக்கத் தேவையான சிரப் அனைத்து நாடுகளில் உள்ள தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்படும். பின் அவர்கள் அதிலிருந்து கோலாவை தயாரிப்பார்கள்.

கோக்க கோலா தொழிற்சாலையே முதன் முதலில் கோலாவை அறிமுகப்படுத்தியதால், இது கோலா பானம் என்று வழங்கலாயிற்று.

தெளிவான கோலா

தெளிவான கோலா 1990 முற்பகுதியில் பிரபலமானதாக்கப்பட்டது.இவ்வகை கோலா ஒரு நிறமற்ற திரவம் ஆகும் . கிரிஸ்டல் பெப்சி, 7 அப்,ம்ற்றும் ஐஸ் கோலா எனற பெயர்களில் இவை மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.

கோலா-வின் கலவை

330 மிலி. அளவுள்ள கோலாவில், 8 முதல் 10 தேக்கரண்டி சர்க்கரையும்,30 முதல் 55 மிகி. அளவுக்கு காஃபீனும், 150 கலோரியும் உள்ளன. இவை தவிர செயற்கை நிறக் கலவைகளும், சல்ஃபைட்டுகளும் உள்ளன.

கோலா குடிப்பதால் உடலில் ஏற்படும் விளைவுகள்

குடித்த பத்து நிமிடங்களில் உள்ளே சென்ற சர்க்கரை ரத்தத்தில் கலப்பதால் இருபது நிமிடங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பெருமளவு கூடுகிறது. நாற்பது நிமிடங்களில் கோலாவில் உள்ள காஃபீன், கண்களின் பாவையைப் பெரிதாக்க, ரத்தத்தின் அழுத்தம் கூடுகிறது. உடனடியாக குடல், ரத்தத்துக்கு அதிக சர்க்கரையை வழங்குகிறது. அதிக சர்க்கரையும் காஃபீனும் ரத்தத்தில் கலப்பதால் உற்சாகம் பிறக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சர்க்கரை அளவும் காஃபீன் அளவும் பெருமளவில் சரிந்து பழைய நிலைக்கும் கீழே செல்வதால் ஒருவித களைப்பும் சலிப்பும் ஏற்படுகின்றன.

நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிக் குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடவும் குறையவுமாகப் பந்தாடப்படுவதில் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெருகுகின்றன.

அதோடு, கோலாவில் இருக்கும் ஃபாஸ்ஃபாரிக் அமிலம், எலும்பிலுள்ள கால்சியத்தினை வெளியேற்றி அதனைப் பலவீனப்படுத்துகிறது; பல்லின் எனாமல் பெரிதும் பாதிக்கப்பட துணை செய்கிறது.

அதிகபட்ச காஃபீன், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் அளவு குறைவதால் மரபணுக்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி குடல் பாதிப்புகளும் பார்க்கின்ஸன் போன்ற நரம்புமண்டல பாதிப்பு நோய்களும் வர வாய்ப்பு இருக்கிறது.


இரண்டு கோலா பாணங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் பல்லில் ஏற்படும் பாதிப்பை உடனடியாக உணரலாம்.

ஆசியாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்

இவை அனைத்தும் அந்த அந்த ஊர்களில் பிரபலமான கோலா வகையாகும்.

ஐரோப்பாவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்

வட அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்

ஆபிரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்

தென் அமெரிக்காவில் கிடைக்கபெறும் கோலா பானங்கள்

  • பெரிய கோலா.
  • கொக்கக் கோலா.
  • பெப்சி.
  • பெரூ கோலா.
  • ஆர் சீ கோலா.
  • ஸ்சின் கோலா, பிரேசில்.
  • சிப் கோலா.

வெளியிணைப்புகள்