சகானாசு பக்லவி

சகானாசு பக்லவி
1967 இல் இளவரசி சகானாசு பக்லவி
பிறப்பு27 அக்டோபர் 1940 (1940-10-27) (அகவை 84)
தெகுரான், ஈரானின் ஏகாதிபத்திய அரசு
துணைவர்
  • அர்த்சிர் சாகேதி
    (தி. 1957; ம.மு. 1964)
  • கோசுரோ சகான்பானி
    (தி. 1971; இற. 2014)
குழந்தைகளின்
பெயர்கள்
  • சாரா மக்னாசு சாகேதி
  • கோசுரோ சகான்பானி
  • பவ்சியா சகான்பானி
மரபுபகலவி வம்சம்
தந்தைமுகம்மத் ரிசா ஷா பஹ்லவி
தாய்எகிப்தின் பவ்சியா

சகானாசு பக்லவி ( Shahnaz Pahlavi ) , பிறப்பு 27 அக்டோபர் 1940 ) ஈரானின் சா முகம்மத் ரிசா சா பக்லவி மற்றும் அவரது முதல் மனைவியும், எகிப்து இளவரசி பவ்சியா ஆகியோரின் முதல் குழந்தையாவார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சகானாசு பக்லவி, 27 அக்டோபர் 1940 அன்று தெகுரானில் [2] முகமது ரேசா பக்லவி மற்றும் அவரது முதல் மனைவி இளவரசி பவ்சியா ஆகியோரின் ஒரே குழந்தையாகப் பிறந்தார்.[3] [4] இவரது தந்தையான ஈரானின் சாவின் மூன்றாவது மனைவியான பரா பக்லவி மூலம் பிறந்த பட்டத்து இளவரசர் ரெசா பக்லவி, இளவரசி பராக்னாசு பக்லவி, இளவரசர் இரண்டாம் அலி ரெசா பக்லவி மற்றும் இளவரசி லீலா பக்லவி ஆகியோர் இருந்தனர். [5] எகிப்தின் முதலாம் புவாது மற்றும் எகிப்த்தின் ராணி நசிலி இவரது தாய்வழி தாத்தா பாட்டியாவார்கள். ரேசா ஷா பகலவி மற்றும் ஈரானின் ராணி தாட்சு ஓல்-மொலூக் இவரது தந்தைவழி தாத்தா பாட்டியாவர்கள். மேலும் இவர் எகிப்தின் மன்னர் முதலாம் பாரூக்கின் மருமகளும் ஆவார். [6]

சகானாசு பக்லவி பெல்ஜியத்திலுள்ள லைசி லியோனி டி வாகா என்ற உறைவிடப் பள்ளியில் படித்தார். பின்னர் சுவிட்சர்லாந்தில் உயர்கல்வியைப் படித்தார்.[7]

சொந்த வாழ்க்கை

ஈராக் மன்னர் பைசலுடன் சகானாசின் திருமணத்திற்கு இவரது தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால் இவருக்கு இத்திருமணத்தில் விருப்பமின்மையால் நிறைவேறவில்லை.[8] இவரது முதல் திருமணம், பதினாறு வயதில், 11 அக்டோபர் 1957 அன்று தெகுரானில் உள்ள கோலசுத்தான் அரண்மனையில் ஈரானிய அரசியல்வாதி அர்தேசிர் சாகேதி என்பவருடன் நடந்தது.[1][7] அவர் ஒரு முறை ஈரானிய வெளியுறவு அமைச்சராகவும், இரண்டு முறை அமெரிக்காவிற்கான ஈரானியத் தூதராகவும் இருந்தார் (1957-64 மற்றும் 1972-79).[7][9] சாகேதியும் இவரும் 1955 இல் ஜெர்மனியில் முதன்முதலில் சந்தித்தனர்.[7] தம்பதியருக்கு மக்னாசு சாகேதி (பிறப்பு 2 டிசம்பர் 1958) என்ற ஒரு மகள் பிறந்தார்.[10] இவர்கள் 1964 இல் விவாகரத்து செய்தனர்.

சகானாசு பின்னர் பிப்ரவரி 1971 இல் பாரிஸில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பணியாற்றிய கோசுரோ சகான்பானி என்பவரை மணந்தார்.[11] இவர்களது திருமணம் ஏப்ரல் 2014 இல் சகான்பானி இறக்கும் வரை நீடித்தது. இவர்களுக்கு கீகோசுரோ (பிறப்பு 20 நவம்பர் 1971), என்ற ஒரு மகனும் பவ்சியா (பிறப்பு 1973) என்ற ஒரு மகளும் பிறந்தனர்.

இவரது தந்தையின் ஆட்சியின் போது, சகானாசு விவசாய நிறுவனங்கள் மற்றும் ஹோண்டா சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் தயாரிக்கும் ஆலைகளில் முதலீடு செய்தார்.[12]

பின் வரும் வருடங்கள்

ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் சகானாசு பக்லவி சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.[5] இவருக்கு சுவிஸ் குடியுரிமை உள்ளது.[2] டிசம்பர் 2013 இல் சானாஸ் பஹ்லவிக்கு எகிப்திய அரசாங்கம் எகிப்திய குடியுரிமை வழங்கியது.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Royal Beauty: Princess Shahnaz Pahlavi (1960's/70's)". Iranian. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012.
  2. 2.0 2.1 2.2 "تابعیت مصری برای شهناز پهلوی، نخستین فرزند شاه سابق ایران". https://www.bbc.com/persian/iran/2013/12/131210_u08_egypt_shahnaz. 
  3. "Nixon forth to see Shah". https://news.google.com/newspapers?id=rXJVAAAAIBAJ&sjid=uTwNAAAAIBAJ&pg=1337,4899486&dq=shahnaz+pahlavi&hl=en. 
  4. "A quick look at the Shah's life". https://news.google.com/newspapers?id=L5cyAAAAIBAJ&sjid=gucFAAAAIBAJ&pg=4011,5239480&dq=shahnaz+pahlavi&hl=en. 
  5. 5.0 5.1 "Shah's daughter 'could not stand' exile". http://news.bbc.co.uk/2/hi/middle_east/1384839.stm. 
  6. "Ashraf Pahlavi: Portrait of a Persian Princess". Archived from the original on 14 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2017.
  7. 7.0 7.1 7.2 7.3 "Only child of Shah of Iran will marry in simple rites". Ocala Star Banner. அசோசியேட்டட் பிரெசு (Tehran). 10 October 1957. https://news.google.com/newspapers?id=2QokAAAAIBAJ&sjid=2AQEAAAAIBAJ&pg=1824,1472649&dq=ardeshir+zahedi&hl=en. 
  8. Banafsheh Keynoush (2016). Saudi Arabia and Iran. Friends or Foes?. New York: Palgrave Macmillan. p. 68. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-137-58939-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-58939-2. S2CID 156413085.
  9. "Iran Shah's daughter to wed engineer in simple ceremony". Lewiston Evening Journal. அசோசியேட்டட் பிரெசு (Tehran). 10 October 1957. https://news.google.com/newspapers?id=ZcdGAAAAIBAJ&sjid=8vMMAAAAIBAJ&pg=1761,3998465&dq=marble+palace+tehran&hl=en. 
  10. "Milestones, Dec. 15, 1958". Time. 15 December 1958. Archived from the original on 31 January 2011. பார்க்கப்பட்ட நாள் 16 July 2013.
  11. "Centers of Power in Iran" (PDF). CIA. May 1972. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
  12. "105 Iranian films said controlled by royal family". The Leader Post. அசோசியேட்டட் பிரெசு (Tehran). 22 January 1979. https://news.google.com/newspapers?id=7X5VAAAAIBAJ&sjid=5z4NAAAAIBAJ&pg=1063,1948802&dq=abdul+reza+pahlavi&hl=en. 

வெளி இணைப்புகள்