சடோஷி சுமாபுகி
சடோஷி சுமாபுகி | |
---|---|
2015 கான் திரைப்பட விழாவில் சுமாபுகி | |
தாய்மொழியில் பெயர் | 妻夫木聡 |
பிறப்பு | திசம்பர் 13, 1980 யானகாவா, புக்குவோக்கா, யப்பான் |
தேசியம் | ஜப்பானியர் |
பணி | நடிகர், பாடகர், பேஸ் கிடார் இசைக்கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–நிகழ்காலம் |
அறியப்படுவது | வாட்டர்பாய்ஸ் |
உயரம் | 1.72 m (5 அடி 7+1⁄2 அங்) |
வாழ்க்கைத் துணை | மயிகோ (தி. 2016) [1] |
பிள்ளைகள் | 2 |
சடோஷி சுமாபுகி (妻夫木聡, Satoshi Tsumabuki, சுமாபுகி சடோஷி, பிறப்பு: டிசம்பர் 13, 1980) என்பவர் ஒரு ஜப்பானிய நடிகர் ஆவார். இவர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டில் வெளியான 'வாட்டர்பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார். இந்த படத்திற்காக ஜப்பானிய அகாடமி விருதுகளில் 'சிறந்த நடிகர்' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார், அத்துடன் புதுமுக நடிகர் என்ற விருதை வென்றார்.
இவர் ஜப்பானிய இசைக்குழுவான பாஸ்கிங் லைட்டின் பேஸ் கிடார் இசைக்கலைஞரும் முன்னணி பாடகரும் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஐவரும் பிரபல நடிகையுமான மயிகோவும் நான்கு வருடங்களுக்கும் மேலாக காதல் உறவில் இருந்து, 4 ஆகஸ்ட் 2016 அன்று திருமணம் செய்து கொண்டதாக சுமாபுகி தனது ஏஜென்சி மூலம் அறிவித்தார்.[2]
சுமாபுகி மற்றும் அவரது மனைவிக்கும் திசம்பர் 11, 2019 இல் முதல் குழந்தை பிறந்தது,[3] பின்னர் அவர்களின் இரண்டாவது குழந்தை 13 செப்டம்பர் 2022 அன்று பிறந்தது.[4]
சான்றுகள்
- ↑ "Tsumabuki Satoshi and Maiko to get married".
- ↑ "妻夫木聡が結婚 マイコと交際4年「この子しか」 - 結婚・熱愛 : 日刊スポーツ". nikkansports.com (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ "妻夫木聡&マイコに第1子誕生「愛情いっぱい育てていきたい」". ORICON NEWS. 2019-12-12. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ "妻夫木聡・マイコ夫妻、第2子誕生を報告 「家族で日々大切に過ごして行きたい」(日テレNEWS)". Yahoo!ニュース (in ஜப்பானியம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.