சதீஸ் தவான் விண்வெளி மையம்
सतीश धवन अंतरिक्ष केंद्र | |
கழுகுப் பார்வையி சதீசு தவான் விண்வெளி நிலையம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | அக்டோபர் 1, 1971 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | ஸ்ரீஹரிக்கோட்டை , ஆந்திர பிரதேசம், இந்தியா |
பணியாட்கள் | Unknown (2008) |
ஆண்டு நிதி | See the budget of இஸ்ரோ |
மூல அமைப்பு | இஸ்ரோ |
வலைத்தளம் | [5] ISRO SHAR home page |
சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் (Satish Dhawan Space Centre, सतीश धवन अंतरिक्ष केंद्र, సతీష్ ధావన్ అంతరిక్ష కేంద్రం) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமாகும். அது ஆந்திர பிரதேசம் மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டை நகரத்தில் உள்ளது. இது முதலில் ஸ்ரீஹரிக்கோட்டை அதி உயர வீச்சு (Sriharikota High Altitude Range (SHAR)) என அழைக்கப்பட்டது, மற்றும் சில ராக்கெட் ஏவுதல் வீச்சு எனவும் அறியப்பட்டது. இவ்விடம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சதீஷ் தவான் 2002 ஆம் ஆண்டில் இறந்த பிறகு அதன் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றங்களுக்குப் பிறகும் ஷார் (SHAR) எனவும் அழைக்கப்படுகின்றது.
வரலாறு
இவ்விடம் 1971 ஆம் ஆண்டில் ஒரு RH-125 ஒலி ராக்கெட் ஏவப்பட்ட போது செயல்படத்துவங்கியது.[1] ஒரு கோளப்பாதை செயற்கைக்கோளை ஏவுவதன் முதல் முயற்சியாக 10 ஆகஸ்ட் 1979 அன்று, ஒரு செயற்கைக்கோள் வாகன விமானத்தில் ரோஹிணி 1A ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட்டின் இரண்டாவது கட்டத்தின் உந்துதல் வெக்டாரிங்கில் ஒரு செயலிழப்பின் காரணமாக, செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை வீழ்ச்சியடைந்தது.[2]
ஷார் வசதி இப்போது சமீபத்தில் கட்டப்பட்ட இரண்டாவது ஏவுமிடத்தையும் சேர்த்து, இரண்டு ஏவுமிடங்களை கொண்டுள்ளது. இரண்டாவது ஏவுமிடம் 2005 இன் தொடக்கத்திலிருந்து ஏவப்பட்ட வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இந்த ஏவுமிடம் இஸ்ரோவால் பயன்படுத்தப்படும் அனைத்து ஏவு வாகனங்களத்திற்கும் பயன்படுத்தப்படக்கூடிய, ஒரு உலகளாவிய ஏவுமிடமாக உள்ளது. இவ்விரண்டு ஏவுமிடங்களும், இதற்குமுன் முடியாத, ஒரு வருடத்தில் பல ஏவுதல்களுக்கு பயன்படுத்த முடியும். இந்தியாவின் சந்திர கலமான சந்திரயான் 1, 22 அக்டோபர் 2008 அன்று, இந்திய மணிப்படி காலை 6:22 மணிக்கு இவ்விடத்திலிருந்து ஏவப்பட்டது.
ஷார் இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்தின் முக்கிய தளமாக இருக்கும். ஒரு புதிய மூன்றாவது ஏவுதளம் 2015 ஆம் ஆண்டில், மனித விண்வெளி பயண இலக்கை சந்திக்க, குறிப்பாக கட்டப்பட்ட உள்ளது.[3]
இருப்பிடம்
சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஷார்) உள்ள ஷீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம் கிழக்கு கடற்கரையிலுள்ள ஒரு சுழல் வடிவ தீவாகும். ஆந்திர பிரதேசம் & தமிழ்நாடு மையப்புள்ளியிலுள்ள, சென்னை வடக்கே சுமார் 70 கி.மீ. (43 மைல்) தொலைவில் , ஒரு வளரும் செயற்கைக்கோள் நகரமான ஷீசிடி (Sricity) அருகில்,[4] இந்திய விண்வெளித்தளமான ஷீஹரிகோட்டா உள்ளது. இந்த தீவு, ஒரு செயற்கைக்கோள் செலுத்து நிலையம் அமைக்க 1969 இல் தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு பயணங்களுக்கான ஒரு நல்ல துவக்க திசைக்கோணம், கிழக்கு நோக்கிய ஏவுதல்களுக்கு பூமியின் சுழற்சியின் சாதகம், மத்திய கோட்டிற்கு நெருக்கம், மற்றும் பெரிய குடியேற்றமல்லாத பாதுகாப்பு மண்டலம் போன்ற அம்சங்கள் அனைத்தும் பிரபலமாக 'ஷார்' எனப்படும் ஷீஹரிகோட்டா வீச்சை, ஒரு சிறந்த விண்வெளித்தளமாக ஆக்குகின்றன. சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர பிரதேசத்தில், நெல்லூர் மாவட்டத்தில் ஒரு பெரிய நகரமான நாய்டுபெட்டிலிரிந்து, புலிகாட்டு ஏரி குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையில் கிழக்கு நோக்கி ஒரு 20 நிமிட பயணம் ஷீஹரிகோட்டாவிற்கு எடுத்துச் செல்லும். ஷார், இஸ்ரோ முன்னாள் தலைவரான பேராசிரியர் சதீஷ் தவானின் நினைவாக, 'சதீஷ் தவான் விண்வெளி மையம்' (Satish Dhawan Space Centre, SDSC) என 5 செப்டம்பர் 2002 அன்று பெயரிடப்பட்டது.
ஷார் மொத்தம் கடற்கரையில் 27 கி.மீ. (17 மைல்) நீளத்தையும் சுமார் 145 சதுர கிமீ (56 சதுர மைல்) பகுதியை உள்ளடக்குகின்றது. இந்திய அரசு இஸ்ரோ விற்கு கையகப்படுத்துவதற்கு முன்னர், அவ்விடம் யூக்கலிப்டஸ் மற்றும் சவுக்கு மரங்களின் ஒரு விறகு தோட்டமாக இருந்தது. இந்த தீவு இரண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றாலும் பாதிக்கப்பட்டாலும், பலத்த மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே பெய்கின்றன. இதனால் பல தெளிவான வானிலை கொண்ட நாட்கள் வெளிப்புற நிலைபடுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் ஏவுதல்களுக்கு கிடைக்கும்.[5]
ஏவுதல் வரலாறு
முதலில் ஷார் எனப்பட்ட பின்னர் சதீஷ் தவான் நினைவில் பெயரிடப்பட்ட இவ்விடம், இந்நாள் வரை இந்தியாவின் முதன்மையான கோளப்பாதை ஏவு தளமாக உள்ளது. 9 அக்டோபர் 1971 அன்று நடந்த, சிறிய ஒலி விண்கலமான 'ரோஹிணி-125' இன் முதல் விமானம்-சோதனை, ஷார் இல் இருந்து முதல் விண்வெளி பயணமாகும். அதற்கு பின்னர் தொழில்நுட்ப, கணிப்பியல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு மேம்பட்டுள்ளன. வடக்கு பலாசோர் விண்கல ஏவு நிலையமத்துடன் இணைந்து, இவ்வசதிகள் ஷார் இல் தலைமையிடத்தை கொண்டுள்ள இஸ்ரோ வீச்சு வளாகத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.[6]
செயற்கைக்கோள் ஏவு வாகனம் (Satellite Launch Vehicle, SLV)
மூன்று ரோகினி 125 ஒலி விண்கலங்கள், 9 மற்றும் 10அக்டோபர் 1971 ஏவப்பட்ட போது இவ்விடத்தின் செயல்பாடு தொடங்கியது. முன்னதாக, இந்தியா ஒலி விண்கலங்கள் ஏவ, இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள, தம்பா ஈக்குவாடோரியல் ராக்கெட் லான்ச்சிங் நிலையம் (Thumba Equatorial Rocket Launching Station, TERLS) பயன்படுத்தப்பட்டது. SLV-3 ராக்கெட்டின் முதல் முழு சோதனை ஏவுதல் ஆகஸ்ட் 1979 இல் நிகழ்ந்தது, ஆனால் அதன் இரண்டாம் நிலை கைடன்ஸ் சிஸ்டத்தில் ஒரு செயலிழப்பை தொடர்ந்து முழு வெற்றியை அடையவில்லை. ஷார் வசதிகள் SLV-3 இன் தயாரிப்பு மற்றும் ஏவப்படுதலின் போது திருப்திகரமாக பணியாற்றின. 18 ஜூலை 1980 அன்று SLV-3 ஆல் வெற்றிகரமாக இந்தியாவின் மூன்றாவது செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஷார் இல் இருந்து ஏவப்பட்ட நான்கு SLV களில், இரண்டு மட்டுமே வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தன.
மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவு வாகனம் (Augmented Satellite Launch Vehicle, ASLV)
ASLV ஏவு வாகனம், தொடக்கத்தில் வாகன ஒருங்கிணைப்பு கட்டிடத்தில் (VIB) மோட்டார் மற்றும் துணை-ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும், 40 மீ உயர கைபேசி சேவை அமைப்பு உள்ள இடத்தில் நிறைவு வேலைகளும் நடைபெற்று, செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஷார் இல் முதல் ASLV ஏவுதல் 1987 இல் நடந்து தோல்வியை தழுவியது. இறுதியில், 1987 இருந்து 1994 வரை நடைபெற்ற நான்கு ASLV ஏவுதல்களில் ஒன்று மட்டுமே வெற்றிகரமான நடைபெற்றது.
துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (Polar Satellite Launch Vehicle, PSLV)
PSLV ஏவுதல் வளாகம் 1990 இல் பணிக்கப்பட்டது. இது ஒரு 3,000 டன், SP-3 பேலோட் Clean room வழங்கும் 76.5 மீ உயர் கைபேசி சேவை கோபுரம் (MST) கொண்டிருக்கிறது. PSLV வாகனத்திற்கு தேவையான திட செலுத்துபொருள் மோட்டார்களை கையாளும் ஷார், மேலும் ஏவுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. PSLV வாகனத்தின் முதல் ஏவுதல் 20 செப்டம்பர் 1993 அன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு 15 ஏவுதல்களில் PSLV 14 வெற்றிகளை கண்டுள்ளது. PSLV முதல் மற்றும் இரண்டாவது ஏவுமிடம்,இரண்டில் இருந்தும் செலுத்தப்படுகின்றது.
வசதிகள்
இந்த மையம் இரண்டு செயல்படும் விண்கலம் ஏவுமிடங்களை கொண்டுள்ளது. ஷார் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தும் தளமாக உள்ளது. மேலும் கூடுதலாக ரோஹிணி ஒலி ஏவுகணைகளை முழு அளவில் சோதனை செய்யும் வசதிகளையும் வழங்குகிறது. வாகன ஒன்றுசேர்த்தல், அசைவற்ற சோதனை மற்றும் மதிப்பீட்டு வளாகம் மற்றும் திட செலுத்து ஊக்கப் பொருள் ஆலை (SPROB) ஆகியவை, திட மோட்டார்களை வார்ப்பதற்கு மற்றும் சோதனை செய்யும் பொருட்டு ஷார் இல் அமைந்துள்ளது. மேலும் இத்தளத்தில், ஒரு தொலைப்பதிவு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும், மேலாண்மை சேவை பிரிவும், ஷீஹரிகோட்டா பொது வசதிகளையும் கொண்டுள்ளது. பிஸ்ல்வி ஏவுதல் வளாகம் 1990 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இங்கு ஒரு 3,000 டன், SP-3 பேலோட் வழங்கும், 76.5 மீ உயர் மொபைல் சேவை கோபுரம் (MST) உள்ளது.[7]
திட செலுத்து ஊக்கப் பொருள் ஆலை, செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வாகனங்களுக்கு, பெரிய அளவு ஓட்டு பொருள்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அசைவற்ற சோதனை & மதிப்பீட்டு வளாகம் (stex) சோதனைகள் செய்து, ஏவுதல் வாகனங்களின் பல்வேறு வகையானதிட மோட்டார்களை தேர்வு செய்கின்றது. ஷாரின் மூடப்பட்ட மையத்தில் கணினிகள் மற்றும் தகவல் செயலாக்கம், மின்சுற்று தொலைக்காட்சி, நிகழ் நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வானிலை கண்காணிக்கும் உபகரணங்கள் உள்ளன. அது ஷீஹரிகோட்டாவில் அமைந்துள்ள மூன்று ரேடார்கள் மற்றும் இஸ்ரோவின் தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) ஐந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செலுத்துபொருள் உற்பத்தி ஆலை அம்மோனியம் பெர்க்ளோரேட் (Ammonium perchlorate, oxidiser), நன்றாக தூளாக்கப்பட்ட அலுமினிய பொடி (எரிபொருள்) மற்றும் ஹைட்ராக்சில் முடிக்கப்பட பாலிபூட்டாடையீன் (hydroxyl terminated polybutadiene) (சேர்ப்பான்) ஆகியவற்றை பயன்படுத்தி, இஸ்ரோ ராக்கெட் மோட்டார்களுக்கு, கூட்டு திட செலுத்துபொருளை உருவாக்குகிறது. 2.8 மீ விட்டம் மற்றும் 22 மீ நீளம், 450 டன் உந்துதல் அளவு மற்றும் 160 டன் எடையுள்ள, ஐந்து பாகமாக பிரிக்கப்பட்ட மோட்டாரான, பிஸ்ல்வி இன் முதல் நிலை ஊக்க மோட்டார் உட்பட, இங்கு பல திட மோட்டார்கள் உருவாக்கப்படப்படுகிறது.
ராக்கெட்டின் மோட்டார்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள் பறக்க தகுதியானவையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கடுமையான தரை சோதனை மற்றும் மதிப்பிடுதல் செய்யப்படுகின்றன. ஷாரில் உள்ள வசதிகள், பொருத்தமான சுற்றுப்புற நிலைமைகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட உயரமான நிலைமைகளில், திட ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்ய பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை தவிர, அதிர்வு, அதிர்ச்சி, மாறா முடுக்கம் மற்றும் வெப்ப / ஈரப்பதம் பரிசோதனைகள் செய்ய வசதிகளும் அங்கு உள்ளன.
ஷாரில் சிறிய புவி சுற்றுவட்ட பாதை, துருவ சுற்றுப்பாதையில் மற்றும் நிலை-பூகோள நிலை மாறும் சுற்றுப்பாதை ஆகிய சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் கட்டமைப்புகள் உள்ளன. வாகன ஒருங்கிணைப்பு, எரிபொருள் மற்றம், சரிபார்த்து அனுப்புதல் மற்றும் ஏவுதல் நடவடிக்கைகளுக்கு, ஏவுதல் வளாகங்கள் ஆதரவு வழங்குகின்றன. இம்மையம் வளிமண்டல ஆய்வுகள் செய்ய ஒலி ஏவுகணைகளை செலுத்தும் வசதிகளையும் கொண்டுள்ளது. மொபைல் சேவை கோபுரம், ஏவுமிடம், வெவ்வேறு ஏவுதல் நிலைகள் & விண்கலத்திற்கு தயாரிப்பு வசதிகள், திரவ தள்ளுந்திகளின் சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் சேவை வசதிகள், ஆகியவை பிஸ்ல்வி/ ஜிஸ்ல்வி ஏவுதல் வளாகத்தின் முக்கிய பாகங்களாகும்.
GSLV Mk III திட்டத்திற்கு துணைபுரிய, கூடுதல் வசதிகள் SDSC இல் அமைக்கப்பட உள்ளன. 200 டன்கள் திட செலுத்துபொருள் கொண்ட வலுவான வர்க்க உயர்த்திகளை தயாரிக்க, ஒரு புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. நிலை சோதனை வளாகம், S-200 உயர்த்து பொருளை கையாள தகுதிபெறுவதற்காக புதுப்பிக்கப்பட உள்ளது. ஒரு திட நிலை ஒருங்கிணைப்பு கட்டிடம், செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் நிரப்புதல் வசதி மற்றும் வன்பொருள் சேமிப்பு கட்டிடங்கள் ஆகியவை பிற புதிய வசதிகளாகும். ஏற்கனவே உள்ள திரவ செலுத்துபொருள் மற்றும் கடுங்குளிர் செலுத்துபொருள் சேமிப்பு மற்றும் நிரப்புதல் அமைப்புகள், செலுத்துபொருள் சேவை வழங்கல் வசதிகள் ஆகியவையும் புதுப்பிக்கப்பட உள்ளன. எல்லை கருவி அமைப்பும் மேலும் மேம்படுத்தப்பட உள்ளது.
ஏவுமிடங்கள்
பழைய ஏவுமிடம் (ஏவுமிடம்-I)
இது 1960 இன் பிற்பகுதியிண் போது ஷாரில் கட்டப்பட்ட முதல் ஏவுமிடமாகும். இது 1971 ல் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் பல ஏவுதல்கள் இங்கு நடைபெற்றுள்ளன. இது இன்றும் செயல்பாட்டி உள்ளது;பிஸ்ல்வி செயற்கை கோள்களை ஏவுவுதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் ஏவுமிடம்
ஷாரில் உள்ள இரண்டாம் ஏவுமிடம் ஒரு புத்தம் புதிய நவீநமயமான ஏவுதல் வளாகமாகும். இரண்டாம் ஏவுமிடம், அடுத்த தசாப்தத்தில் மற்றும் அதற்கு அப்பால் கட்டப்பட்ட உள்ள மேம்பட்ட ஏவுதல் வாகனங்கள் உட்பட இஸ்ரோவின் அனைத்து ஏவுதல் வாகனங்களையும் கையாளும் திறனுடைய, உலகளாவிய ஏவுமிடமாக கட்டப்பட்டுள்ளது. இது 2005 ல் செயல்பாட்டிற்கு வந்தது.
மூன்றாம் ஏவுமிடம்
மூன்றாவது ஏவுமிடம் ரூ 600 கோடி செலவில் மனிதனை விண்வெளியில் செலுத்தும் பணிக்காக கட்டப்பட்டு வரப்படுகிறது. இதை 2012 க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் முதல் சோதனை விமானம் 2013 ல் நடக்க உள்ளது.
குறிப்புகள்
- ↑ "RH-125". Encyclopedia Astronautica.
- ↑ "SLV". Encyclopedia Astronautica.
- ↑ Zee News (21 October 2008). "India to build a new launch-pad and an astronaut training centre". Zee News. http://www.zeenews.com/articles.asp?aid=477793&sid=ENV&ssid=27. பார்த்த நாள்: 2008-10-21.
- ↑ [1] பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம் Places to visit near sriharikota (shar) | About Sriharikota-Source-Website on Sriharikota Range (SHAR)
- ↑ [2] பரணிடப்பட்டது 2009-09-06 at the வந்தவழி இயந்திரம் Sriharikota Launching Range-Source Bharatrakshak.com
- ↑ [3] பரணிடப்பட்டது 2012-07-07 at Archive.today Unveiling of the Bust of Satish Dhawan at Satish Dhawan Space Centre, Sriharikota & Presentation of Astronautical Society of India Awards by Prime Minister-Press Release, Date Released: Wednesday, September 21, 2005, Source: Indian Space Research Organisation
- ↑ [4] Satish Dhawan Space Centre (SDSC), Sriharikota Range (SHAR) (India), Civil space organisations – Launch facilities, Source – Jane's Information Group