சத்திரசால்

சத்திரசால்
புந்தேல்கண்ட் மகாராஜா
பிறப்பு(1649-05-04)4 மே 1649
கச்சார் கச்சனை திகம்கர் மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு20 திசம்பர் 1731(1731-12-20) (அகவை 82)
துணைவர்தேவி குன்வாரி, ருக்கானி பாய் பேகம்
மரபுபுந்தேல இராசபுத்திர குலம்
தந்தைசம்பத் ராய்
தாய்லால் குன்வர்
மதம்இந்து சமயம் (நிஜானந்த சம்பிரதாயம்) [1]
மராத்திய பேஷ்வா பாஜிராவும், மன்னர் சத்திரசாலும்
மன்னர் சத்திரசாலின் மகளும், பேஷ்வா பாஜிராவின் மனைவியுமான மஸ்தானி

சத்திரசால் மகாராஜா (Maharaja Chhatrasal) (4 மே 1649 – 20 திசம்பர் 1731), மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியின் பன்னா இராச்சியத்தின், புந்தேல இராசபுத்திர குல மன்னர் ஆவார். [2]

சத்திரசால், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை எதிர்த்து நின்று, புந்தேல்கண்ட் பகுதியில், 1731ல் பன்னா இராச்சியத்தை நிறுவினார்[3][4]

அவுரங்கசீப்பின் படைகளிடமிருந்து பன்னா இராச்சியத்தை காக்க உதவிய மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் பாஜிராவிற்கு, மன்னர் சத்திரசால், தனது பாரசீக இரண்டாம் மனைவி ருக்கானி பேகத்திற்கு பிறந்த மஸ்தானியை திருமணம் செய்து வைத்தார்.

மரபுரிமைப் பேறுகள்

மன்னர் சத்திரசால் பெயரால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் நகரம் மற்றும் சத்தர்பூர் மாவட்டம் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

இதனையும் காண்க