சமரேஷ் பாசு
சமரேஷ் பாசு (Samaresh Basu), (பிறப்பு: 1924 டிசம்பர் 11 - இறப்பு 1988 மார்ச்12 என்பவர் ) வங்காள மொழியில் எழுதிய ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். 1980 ஆம் ஆண்டு வங்காள மொழியில் சாகித்ய அகாதமி விருது இந்தியாவின் தேசிய கடிதங்களின் அகாதமியான சாகித்ய அகாதமி அமைப்பால் அவரது சம்பா என்ற புதினத்திற்கு வழங்கப்பட்டது. [1] 1983 ஆம் ஆண்டில் நாம்கீன் திரைப்படத்தின் சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றார்.
வாழ்க்கை மற்றும் தொழில்
இளமைப்பருவம்
சமரேஷ் பாசு, ஒரு குழந்தையாக இருந்தபோது அவரது தாயார் விவரித்த பிராட்டா-கதைகள் (சில மதச் சடங்குகளைச் செய்யும்போது பெண்கள் சொன்ன அருமையான நாட்டுப்புறக் கதைகள்) அதன் மீது வைத்திருந்த ஆழமான பதிவை அவர் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தார். அவரது இளமைப்பருவம், மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான நைகஹாத்தியில் கழிந்தது. அவரது வாழ்க்கை மாறுபட்ட அனுபவங்களால் நிறைந்தது. ஒரு கட்டத்தில், அவர் முட்டைகள் நிரம்பிய கூடையை தலையில் சுமந்தவாறு, தெருக்களில் வியாபாரம் செய்தார். பின்னர், அவர் மிகக் குறைந்த தினசரி ஊதியத்திற்காக வேலை செய்தார். 1943 முதல் 1949 வரை இச்சாபூரில் ஒரு பீரங்கித் தொழிற்சாலையில் பணியாற்றினார்.
சிறை வாழ்க்கை
அவர் ஒரு காலத்தில் தொழிற்சங்கம் மற்றும் பொதுவுடமைக் கட்சியுடன் தீவிர உறுப்பினராக இருந்தார். மேலும் 1949-50 காலக்க்ட்டத்தில் கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டபோது சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது, உத்தரங்கா என்ற தனது முதல் புதினத்தை புத்தக வடிவில் வெளியிட்டார். சிறையில் இருந்து விடுதலையான உடனேயே, தொழில் ரீதியாக எழுதத் தொடங்கினார். தொழிற்சாலையில், அவர் ஏற்கனவே செய்த வேலையை தந்தபோதும் கூட, அங்கு சேர மறுத்துவிட்டார்.
புனை பெயர் எழுத்தாளராக
அவருக்கு 21 வயதாக இருந்தபோது, அவர் தனது முதல் புதினமான, நயன்பூரர் மாத்தி என்பதை எழுதினார். பின்னர் இது பரிச்சேய் என்ற இதழில் தொடராக வெளிவந்தது. எனினும், அப்புதினம், ஒரு புத்தகமாக வெளியிடப்படவில்லை. அதாப் அவரது முதல் சிறுகதை ஆகும். இது, 1946 இல் பரிச்சேய் என்ற இதழில் வெளியிடப்பட்டது.
200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 100 புதினங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தார். இவை அனைத்தும், "கல்கத்" மற்றும் "பிரமார்" என்ற புனைப்பெயர்களின் கீழ் எழுதப்பட்டவை ஆகும். சமரேஷ் பாசு பெங்காலி புனைகதைகளில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் அவரது எழுத்துக்களை அரசியல் செயல்பாடுகள் முதல் தொழிலாள வர்க்க வாழ்க்கை, மற்றும் பாலியல் வரையிலான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. அவரது இரண்டு புதினங்கள் ஆபாசமான குற்றச்சாட்டின் காரணமாக, தடை செய்யப்பட்டன. இவற்றில் ஒன்றான பிரசாபதி மீதான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இது 1985 ஆம் ஆண்டில் இரண்டு கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்தது.
மற்ற அறிவுஜீவிகள் மத்தியில், ஒரு முறை தனது ராட் போர்-இ ப்ரிஷ்டிக்கு இதேபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய புத்ததேவா போஸ், சமரேஷுக்கு ஆதரவாக முன்வந்தார். சுமந்தா பானர்ஜியின் சமீபத்திய மொழிபெயர்ப்பான அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் முதல் தொகுதியிலிருந்து பின்வருமாறு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. "சமரேஷ் பாசு வங்காளத்தின் புறநகர் வாழ்க்கையின் மிகவும் பிரதிநிதித்துவமான கதை சொல்லியாக இருக்கிறார். வங்காளத்தின் கிராமப்புற சமுதாயத்தின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் உண்மையாக எழுதிய பிற பிரபல வங்காள எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுகிறார். அல்லது நகர்ப்புற நடுத்தர வர்க்கம், கல்கத்தாவின் கிராமப்புற, நகர்ப்புற, தொழில்துறை புறநகர்ப் பகுதிகள் பற்றிய தனது சொந்த அனுபவத்தை பாசு எழுதுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையான அரசியல் பகுதியை வெளியிடுவதற்கான உடனடித் தேவைக்காக 1952 ஆம் ஆண்டில் "கல்குத்" என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், உண்மையான "கல்குத்" அமிர்தகும்பர் சந்தானின் வெளியீட்டில் பிறந்ததாகக் கூறலாம். இது மிகவும் பிரபலமான, கும்ப-மேளாவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சுயசரிதை கதை ஆகும். கல்குத்தின் பல அடுத்தடுத்த புத்தகங்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பொது மக்களின் வாழ்க்கையையும், அனைத்து தரப்பு மக்களையும் அவர்களின் மாறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மத நடைமுறைகளை ஒரு தனித்துவமான பாணியில் சித்தரித்தன. புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் நினைவுகளையும் அவர் எழுதினார். புராணக் கதைகளின் சுவாரசியமான நவீன விளக்கமாக இருந்த சம்பா புதினத்திற்காக, 1980 இல் சாகித்ய அகாதமி விருதை வென்றார்.
குடும்பம்
புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சமரேஷ் பாசு 1942 ஆம் ஆண்டில் கௌரி பாசுவை மணந்தார். அது ஒரு கலப்புத் திருமணம் ஆகும். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் முறையே, புல்புல், தெப்குமார், நபகுமார் மற்றும் மௌசுமி என்பவராவர்.
சமரேஷ் பாசு, மார்ச் 12, 1988 இல் இறந்தார். [2]
குறிப்புகள்
- ↑ "Sahitya Akademi Awards 1955–2007: Bengali". Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2019-12-20.
- ↑ Parabaas Inc. "Samaresh Basu – Biographical Sketch [Parabaas Translation]". Parabaas.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.