சரோவரம் உயிரியல் பூங்கா

சரோவரத்தில் அடர்ந்த தாவரங்கள்
சரோவரம் உயிரியல் பூங்கா, கோழிக்கோடு

சரோவரம் உயிரியல் பூங்கா (Sarovaram Bio Park) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தில் உள்ள கோட்டூலிக்கு அருகில் உள்ள சூழல் மேம்பாட்டுப் பகுதியாகும். இந்த பூங்கா கேனோலி கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த கருப்பொருளுடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பறவைகளின் வாழ்விடங்களைக் கொண்ட ஈரநிலங்கள் மற்றும் சதுப்புநில காடுகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் தொகுப்பாக அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட இனங்கள்

இந்த பூங்கா சதுப்புநில இனங்கள் மற்றும் பிற தாவரங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இடமாகும். இந்த பூங்கா இந்தியாவின் 27 ஈரநிலங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏழு வகையான சதுப்புநில சிற்றினங்கள் மற்றும் 29 தொடர்புடைய இனங்கள் இங்குக் காணப்படுகின்றன. இந்த பூங்கா 34 வகையான பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இந்த அருகே செல்லும் கால்வாய் 11 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது கோரப்புழா மற்றும் கல்லாய் ஆறுகளை இணைக்கிறது. பூங்காவில் படகு சவாரி வசதிகள், இசை நீரூற்று மற்றும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இந்த பூங்கா கல்லூரி காதல் இணைகளின் பிரபலமான பொழுதுபோக்கு இடமாக உள்ளது.[1] திருமணத்திற்கு முந்தைய புகைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பிற புகைப்படங்களுக்கான புகைப்பட கலைஞர்களின் விருப்பமான இடமாகவும் இது உள்ளது. பாரம்பரிய கேரள பாணியில் இங்குள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சரோவரம் திட்டம் பல்வேறு நிலைகளில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் சில கட்டங்கள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பூங்காத் திறக்கப்பட்டுள்ளது. கடற்கரை மற்றும் மானஞ்சிறா சதுக்கத்துடன் மாலை நேரத்தைச் செலவிட நகரத்தின் மிகவும் பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

படத்தொகுப்பு

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Sarovaram Project inaugurated". தி இந்து. 5 February 2007 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070212123242/http://www.hindu.com/2007/02/05/stories/2007020504260300.htm. பார்த்த நாள்: 15 January 2010.