சல்பாய் உடன்படிக்கை

சல்பாய் உடன்படிக்கை (Treaty of Salbai) 1782 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதியன்று மராட்டியப் பேரரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்டது. முதல் ஆங்கிலோ-மராத்தா போரின் முடிவைத் தீர்ப்பதற்கான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வாரன் ஏசுட்டிங்சு மற்றும் மகாதாச்சி சிந்தியா இடையே இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. இந்த விதிமுறைகளின் கீழ், பிரித்தானிய நிறுவனம் சல்செட் மற்றும் புரோச் ஆகியவற்றின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது. மராட்டியர்கள் மைசூர் ஐதர் அலியைத் தோற்கடித்து கர்நாடகாவின் பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவார்கள் என்பதற்கான உத்தரவாதத்தைப் பெற்றது. மராத்தியர்கள் தங்கள் பிரதேசங்களில் குடியேற்றங்களை நிறுவுவதற்கு பிரெஞ்சுக்காரர்கள் தடைசெய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர். பதிலுக்கு, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதரவாளரான ரகுநாத் ராவுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புக்கொண்டனர். மேலும் இரண்டாம் மாதவராவ் மராட்டியப் பேரரசின் பேசுவாவாக இருக்க ஒப்புக்கொண்டனர். சூம்னா நதிக்கு மேற்கே மகாத்ச்சி சிண்டேவின் பிராந்திய உரிமைகோரல்களையும் ஆங்கிலேயர்கள் அங்கீகரித்தார்கள். புரந்தர் உடன்படிக்கைக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மராட்டியர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

1802 ஆம் ஆண்டில் இரண்டாம் ஆங்கிலோ-மராத்தியப் போர் வெடிக்கும் வரை மராட்டியப் பேரரசுக்கும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது.[1] டேவிட் ஆண்டர்சன் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக சல்பாய் உடன்படிக்கையை முடித்து வைத்தார்.[2]

மேற்கோள்கள்

  1. Olson and Shadle, p. 706.
  2. Proceedings of the session. Volume 12. Indian Historical Records Commission. 1930.p. 115

ஆதாரங்கள்