சாட் மசாலா

சாட் மசாலா

சாட் மசாலா என்பது ஒரு தூள் மசாலா கலவை அல்லது மசாலாவாகும். தெற்காசியாவினைப் பூர்விகமாகக் கொண்ட இது சாட்டின் சுவைக்காகச் சேர்க்கப் பயன்படுகிறது. இது பொதுவாக ஆம்சூர் (உலர்ந்த மாம்பழ தூள்), சீரகம், கொத்தமல்லி, உலர்ந்த இஞ்சி, உப்பு (பெரும்பாலும் கருப்பு உப்பு ), கருப்பு மிளகு, சாதத்தை மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றைக் கொண்ட கலவை ஆகும்.[1] கரம் மசாலாவும் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளப்படுகிறது.[2]

பயன்கள்

இந்தியாவில் சாட் மட்டுமின்றி, பப்பாளி, சப்போட்டா, ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டும் பழ சாலட்களில் சாட் மசாலா பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாட் மசாலா ஆனது உருளைக்கிழங்கு, பழங்கள், முட்டை டோஸ்ட்கள் மற்றும் வழக்கமான சாலட்டுகள் ஆகியவற்றின் மீதும் சுவைக்காகத் தெளிக்கப்படுகிறது.

ஃப்ரூட் சாட் மசாலா எனப்படும் மாற்று மசாலா கலவையை மசாலா பிராண்டுகள் சந்தைப்படுத்துகின்றன. இதில் குறைவான சீரகம், கொத்தமல்லி மற்றும் இஞ்சி உள்ளது, ஆனால் மிளகாய் மிளகு, கருப்பு உப்பு, ஆம்சூர் மற்றும் பெருங்காயப் பொடி ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. சாலையோர உணவுக்கடை வியாபாரிகள் வழக்கமாக அவர்களே தயார் செய்த சொந்த சாட் மசாலாவைக் கலக்கிறார்கள். இது பொடியாக நறுக்கப்பட்ட பழங்கள் அல்லது புதிய காய்கறிகள் (இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள பச்சையான வெள்ளை முள்ளங்கி போன்றவை) மீது தெளிக்கப்படுகிறது. சில நேரங்களில் மிளகாய்த் தூளுடன் கருப்பு உப்பு தனியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Saran, Suvir (2012). Masala Farm. Chronicle Books. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781452110325. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
  2. Peter, K. V., ed. (2012). Handbook of herbs and spices. Vol. 2. Woodhead. p. 124.
  3. The encyclopedia of herbs, spices & flavorings. Elisabeth Lambert Ortiz. New York: Dorling Kindersley. 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56458-065-2. இணையக் கணினி நூலக மைய எண் 25316107.{cite book}: CS1 maint: others (link)