சான்யோ சின்கான்சென்

சான்யோ சின்கான்சென்
ஒகாயாமா மற்றும் ஆயோய் இடையே ஓடும் என்700 வரிசை சின்கான்சென், ஏப்ரல் 2009
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்山陽新幹線
உரிமையாளர்மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம்
வட்டாரம்ஜப்பான்
முனையங்கள்
  • புது-ஒசாக்கா
  • ஹக்காட்டா
நிலையங்கள்19
சேவை
வகைசின்கான்சென்
செய்குநர்(கள்)மத்திய ஜப்பானிய இரும்புவழி நிறுவனம்
கியூஷூ இரும்புவழி நிறுவனம்
மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம்
பணிமனை(கள்)ஒசாக்கா, ஒகாயாமா, ஹிரோஷிமா, ஹக்காட்டா
சுழலிருப்பு500 வரிசை
700 வரிசை
என்700 வரிசை
வரலாறு
திறக்கப்பட்டது15 மார்ச் 1972
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்553.7 கி.மீ. (344.1 மை)
தட அளவி1,435 மி.மீ. (4 அடி 8 1⁄2 அங்)
இயக்க வேகம்மணிக்கு 300 கி.மீ.
வழி வரைபடம்

சான்யோ சின்கான்சென் (Sanyō Shinkansen (山陽新幹線?)) என்பது ஒசாக்காவில் உள்ள புது-ஒசாக்கா நிலையத்தையும், புக்குவோக்காவில் உள்ள ஹக்காட்டா நிலையத்தையும் இணைக்கும், ஜப்பானிய சின்கான்சென் அதிவேக இரும்புவழிப் பிணையத்தின் தடம் ஆகும். மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் (JR West) இயக்கும் இத்தடம், டோகாய்டோ சின்கான்சென்னின் மேற்குத் தொடர்ச்சி ஆகும். மேலும் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளுக்கிடையில் உள்ள முக்கிய நகரங்களான கோபே, ஹிமேஜி, ஒகாயாமா, ஹிரோஷிமா மற்றும் கிடாகியூஷூ ஆகியவைக்கு சேவைகளை அளிக்கிறது.

தொடருந்துகள்

  • 500 வரிசை: ஹிக்காரி /கொடாமா
  • 700 வரிசை: நோசோமி / ஹிக்காரி / ஹிக்காரி இரயில் ஸ்டார்  / கொடாமா 
  • என்700 வரிசை: நோசோமி / ஹிக்காரி
  • என்700-7000/8000 வரிசை: மிழுஓ / சக்கூரா

மேற்கோள்கள்