சாம்பல் தலை கிளி

சாம்பல் தலை கிளி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
சிட்டாசிபார்மிசு
குடும்பம்:
சிட்டாசிடே
பேரினம்:
சிட்டாகுலா
இனம்:
P. finschii
இருசொற் பெயரீடு
Psittacula finschii
(ஹியூம், 1874)

சாம்பல் தலை கிளி (Grey-headed parakeet)(சிட்டாகுலா பின்சிசீ) மென்நிற தலை கிளியுடன் நெருங்கிய தொடர்புடன் பெரும் சிற்றினத்தை உருவாக்குகிறது. இது தென்கிழக்காசியாவில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து வியட்நாம் வரை காணப்படுகிறது.

இந்த பறவையின் இருசொல் பெயரானது செருமனிய இயற்கை ஆர்வலர் மற்றும் ஆய்வாளரான ஓட்டோ பின்ஷை நினைவுபடுத்துகிறது.

விளக்கம்

இதன் முகம் சாம்பல்/பச்சை, மற்றும் அதன் தலையின் மற்ற பகுதிகள் மங்கலான பச்சை நிறத்தில் மங்கலான வெளிர் பச்சை நிறப் பட்டையுடன் கன்னங்களுக்குக் கீழே பின் கிரீடம் வரை இருக்கும். இறக்கையில் திட்டுகள் இல்லாதது. நீண்ட வாலினைக் கொண்டது.

பரவல்

சாம்பல் தலை கிளி தென்கிழக்கு ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்றது. இது வியட்நாமின் அனைத்துப் பகுதிகளிலும், லாவோஸ் நாடு முழுவதிலும், கிழக்கு கம்போடியா, வடக்கு தாய்லாந்து, மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் (தாநிந்தாரி பிரதேசம் தவிர), சீனாவின் யுன்னான் மாகாணம், தூரக் கிழக்கு வங்காளதேசத்தில் (மிகவும் அரிதானது), வடகிழக்கு இந்தியா முழுவதும் மற்றும் தென்கிழக்கு பூட்டானில் காணப்படுகிறது. உலகளாவிய இக்கிளியின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் இந்த பறவை சீனாவில் அசாதாரணமானது என்று கூறப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் வெவ்வேறு நிலைகள் உள்ளன.

இந்தியாவின் நாகாலாந்தின் கோனோமாவிலிருந்து.

வாழிடம்

கருவேலமரம், தேக்கு , பைன், தேவதாரு மரங்கள் அடங்கிய காடுகளில் 2,700 மீட்டர் உயரத்தில் சிட்டாகுலா பின்சுகி காணப்படுகிறது. இது இலையுதிர் காட்டு மலைப்பகுதிகளிலும், பரந்து விரிந்த மரங்களைக் கொண்ட விவசாய நிலங்களிலும் வாழ்கிறது. கம்போடியாவில், இது எப்போதும் பசுமையான மற்றும் பகுதி பசுமையான தாவரங்களைக் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது.

சூழலியல்

சாம்பல் தலைக் கிளி பல்வேறு வகையான இலை மொட்டுகள், விதைகள், பழங்கள், பெர்ரி மற்றும் பல்வேறு வகையான பூக்களை உணவைக் கொண்டுள்ளது. இது பெரும்பாலும் மந்தைகளாகவோ அல்லது குடும்பமாகவோ காணப்படுகிறது. பெரும் கூட்டங்களாகத் திரிகின்றன. இது பொதுவாக நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய பறவையாகும். கூட்டமாக இரைதேடும் வழக்கமுடையது. சனவரி முதல் மார்ச் வரையான இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு, பெண்கள் பெரும்பாலும் 4-5 முட்டைகளை இடும்.

அச்சுறுத்தல்கள்

சாம்பல்-தலை கிளி அடிக்கடி கவர்ச்சியான பறவை வர்த்தகத்தில் பிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. தெற்கு சீனா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில சிறிய கிராமங்களில் இவை பிரபலமாக உள்ளன. தொடர்ந்து இப்பறவைகள் பிடிபடுவதால் வனத்தில் இதன் எண்ணிக்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. காடழிப்பு மற்றும் பறவைகளின் இயற்கையான வன வாழ்விடத்தை மரங்கள் வெட்டுதல் முதலியன கிளிகளின் எண்ணிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. லாவோஸ் நாடு மற்றும் அதன் மக்கள் வசிக்காத வன மலைகள் இந்தச் சிற்றினங்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. BirdLife International (2013). "Psittacula finschii". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22685473/0. பார்த்த நாள்: 26 November 2013. 

வெளி இணைப்புகள்