சாம்பல் நாரை

சாம்பல் நாரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Ardea
இனம்:
A. cinerea
இருசொற் பெயரீடு
Ardea cinerea
லினேயசு, 1758
வெளிர் பச்சை: கோடைக்காலம்
கரும்பச்சை: ஆண்டு முழுவதும்
நீலம்: குளிர்காலம்

சாம்பல் நாரை (Grey Heron, Ardea cinerea) நீருக்கு அருகாமையில் வாழும் பறவையினம். இது ஒரு பெரிய பறவையினம். மிகவும் உயரமாகவும் ஒல்லியாகவும் நீண்ட வளைந்த கழுத்துடனும் நீண்ட கால்களுடனும் இருக்கும்.

நதியன், நாராயணப் பட்சி, நரையான், கொய்யடி நாரை, கருநாரை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[2] பெருங்கொக்கு, சாம்பல்கொக்கு[3]

உருவமைப்பு

இவை 100 செண்டிமீட்டர் உயரம் வரை வளர்ந்து 84-102 செ.மீ. நீளமும், 155-195 செமீ அகல இறக்கைகளையும் கொண்டிருக்கும்.[4] உடலெடை சராசரியாக 1.02-2.08 கிலோகிராம்கள் இருக்கும்.[5]

இதன் உடலில் பெரும்பாலும் பழுப்பு (சாம்பல்) நிறமே காணப் பெற்றாலும், சற்றே கருத்த வெள்ளை நிறம் உடலின் அடிப்பகுதியில் தென்படும். வளர்ந்த பறவைகள் வெள்ளைத் தலையையும் மெல்லிய கொண்டையையும் கொண்டிருக்கின்றன. சிறு பறவைகளோ தலையிலும் பழுப்பைக் கொண்டிருக்கும். கழுத்தின் பக்கவாட்டில் கருப்பு புள்ளிகள் தொண்டை முதல் தோள்பட்டை வரை செல்லும். இவைகட்கு மிகவும் வலிமை வாய்ந்த மஞ்சள் நிற அலகிருக்க அதில் சிறிது இளஞ்சிவப்பு கலந்து காணப்படும். இவை செந்நாரைகளைவிட சற்றே பெரிய உருவம் கொண்டவை.

பரவல்

The Grey Heron

இவை ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த நாரை குடும்பத்தின் உறுப்பினர் இதமான வெப்பம் கொண்ட தெற்கு மற்றும் மேற்கிலும் தங்கும், பனிக்காலங்களை முழுமையாக தவிர்க்கின்றன. ஆர்க்டிக் வட்டம் மற்றும் நார்வேவின் கரைகளிலும் வேனிற் காலத்தில் தங்குகின்றன.

குணாதிசயங்கள்

இவை இறக்கைகளை வேகமாக அடித்துக் கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான "S" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்தப் பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக மிகவும் அமைதியான இவ்வினம் காக்கை கரைவதைப் போல் "ஃப்ராஆஆங்க்" என்ற ஒலியினை எழுப்பும்.

நகர வாழ்க்கை

நெதர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இவை பல மாமாங்கங்களாக நகரப்பறவைகளாகவே மாறிவிட்டன எனலாம். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இவற்றை எப்போதும் காண இயலும். இவை நவீன நகர வாழ்விற்கேற்றார்போல் தம் தன்மைகளை மாற்றியமைத்துள்ளன. இவை எப்போதும் போல் வேட்டையாடினாலும், மீன் விற்கும் அங்காடிகள் மற்றும் சிற்றுண்டி விற்கும் அங்காடிகள் அருகே காண முடிகிறது. இவை விலங்கியல் பூங்காக்களிலும் பெங்குயின்கள், கூழைக்கடா, கடல்நாய் போன்ற மீனுண்ணும் இனங்களுக்கு உணவளிக்கும் வேளைகளில் வருவதையும் கண்டுள்ளனர். பல பறவைகள் மீனவர்களிடமிருந்து உண்ணும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. அயர்லாந்து நாட்டிலும் இவ்வகை குணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[6]

Grey Heron- with common moorhen Kill - Bharatpur

கிளை இனங்கள்

நான்கு துணை இனங்கள் சாம்பல் நாரைக்கு உண்டு:

  1. Ardea cinerea cinerea - ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா.
  2. Ardea cinerea jouyi கிழக்கு ஆசியா.
  3. Ardea cinerea firasa மடகாஸ்கர்.
  4. Ardea cinerea monicae மூரித்தானியா

உணவு

பல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்புகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளைப் பிடித்து உட்கொள்ளும்.[7] இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேவும் விழுங்கும். தேவைப்பட்டால் இவை மெதுவே இரையைப் பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன.

இனவிருத்தி

இவை கூட்டம் கூட்டமாக மரக்கிளைகளில் கூடுகட்டுவதை வேடந்தாங்கல் போன்ற பறவை சரணாலயங்களில் காண இயல்கிறது. இவை பெரும்பாலும் நதி, குளம், மற்றும் கடற்கரைகளிலும் கூட்டினை அமைக்கின்றன. எனினும் இவை கோரைப் புற்கள் மீதும் கூட்டினை அமைக்கும் தன்மையுண்டு.

படிமங்கள்

உசாத்துணை

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ardea cinerea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 5 July 2012. {cite web}: Invalid |ref=harv (help)
  2. ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. p. 104.
  3. பறவை உலகம்,சலீம் அலி,லயீக் பதேகஹ் அலி, நேசனல் புக் டிரஸ்ட்,2004
  4. "Grey heron (Ardea cinerea)". ARKive. Archived from the original on 27 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012. {cite web}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  5. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4258-5.
  6. The heron's city life is documented in the Dutch documentary Schoffies (Hoodlums), shot in Amsterdam.
  7. Pistorius, P.A. (2008) "Grey Heron (Ardea cinerea) predation on the Aldabra White-throated Rail (Dryolimnas cuvieri aldabranus)" Wilson Journal of Ornithology 120 (3):631-632

வெளி இணைப்புகள்