சார்பு மண்டலம், சார்பு பகுதி அல்லது சார்பு என்பன தனியான நாடாக ஆளுமை அல்லது முழுமையான அரசியல் விடுதலை பெறாத நிலப்பகுதி யாகும்.
சார்புநிலை பல்வேறு நிலைகளில் மற்றும் வகைகளில் நாடுகளிடையே இருப்பதால் அன்னைநாடு அல்லது முதன்மைநாடு இவற்றின் பகுதியாக கருதப்படாதவை சார்பு பகுதிகளாக கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் அவை பிரிவுபடுத்தப்படுகின்றன. உள்தேசிய பகுதி என்பது அந்நாட்டின் தகுதிபெற்ற உட்பிரிவாகும். ஆனால் சார்புப் பகுதி அந்நாட்டின் கடல்கடந்த தன்னாட்சி பெற்ற நிலப்பகுதியாக இருக்கலாம்.காட்டாக, பல சார்பு மண்டலங்களில் ஆள்கின்ற நாட்டின் சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் வேறான சட்டங்கள் கொண்டிருக்கலாம்.
சில நிலப்பகுதிகள் சார்பற்றவை எனக் குறிப்பிடப்படுகின்றன; அவை சர்ச்சைக்குட்பட்ட பகுதிகளாகவோ, இராணுவ ஆக்கிரமிப்பு இடங்களாகவோ, மறைந்து வாழும் அரசாகவோ, விடுதலை வேண்டி போராடும் நிலப்பகுதியாகவோ இருக்கலாம்.
சார்பு மண்டல பகுதிகளின்பட்டியல்
மேற்கோள்கள்
George Drower, Britain's Dependent Territories, Dartmouth, 1992
George Drower, Overseas Territories Handbook, TSO, 1998