இந்நகரத்தை எவரஸ்டு மலையின் மேற்கு நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. நேபாளம்-திபெத் இடையில், எவரஸ்டு மலையின் அடிவாரத்தில் அமைந்த சிகாட்சே நகரம் கடல் மட்டத்திலிருந்து 3743 மீட்டர் உயரத்தில் உள்ளது. சிகாட்சே நகரம் 182,000 km2 (70,271 sq mi) பரப்பளவு கொண்டது. இந்நகரத்திற்கு அருகே சோ ஓயு மலை உள்ளது. இந்நகரம் திபெத்தின் மூன்று முக்கிய பிரதேசங்களில் ஒன்றான் யு-சாங் பிரதேசத்தில் அமைந்துள்ளது. லாசாவிற்கு தென்மேற்கே 280 கிலோ மீட்டர் தொலைவில் சிகாட்சே நகரம் அமைந்துள்ளது.
2025 நிலநடுக்கம்
7 சனவரி 2025 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்நகர மக்களில் குறைந்தபட்சம் 95 கொல்லப்பட்டனர் மற்றும் 130 பேர் காயமடைந்ததாக முதல் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.[5]
நகர நிர்வாகம்
சிகாட்சே நகரம் 1 மாவட்டம் & 17 கவுண்டிகள் கொண்டுள்ளது.
2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சிகாட்சே நகரத்தின் மக்கள் தொகை 7,98,153 ஆகும்.[6]அதில் ஆண்கள் 416,384 (52.17%) மற்றும் பெண்கள் 381,769 (47.83%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 109.07 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். 0-14 வரையுள்ள குழந்தைகள் 209,900 (26.3%) உள்ளனர். நகர்புறங்களில் வாழும் மக்கள் 1,84,323, (23.09%) ஆக உள்ளனர்.
சிகாட்சே வானூர்தி நிலையம் சிகாட்சே நகரத்தின் சாம்சுப்சே மாவட்டத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜங்க்தாம் நகரத்தில், கடல் மட்டத்திலிருந்து 3782 மீட்டர் உயரத்தில் உள்ளது.[8]
சாலைப்போக்குவரத்து
சிகாட்சே நகரத்திற்கு உள்ளேயும்; வெளியேயும் சீன தேசிய நெடுஞ்சாலை எண் 318 மற்றும் 219 ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளது.[9][10][11]
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், சிகாட்சே, உயரம் 3,836 m (12,585 அடி), (1991–2020 normals)
திபெத்திய இராணுவத்தின் அணிவகுப்புக் காட்சி, ஆண்டு 1938
மேற்கோள்கள்
↑Powers, John (2016). The Buddha party : how the People's Republic of China works to define and control Tibetan Buddhism. New York, NY: Oxford University Press. pp. Appendix B, page 16. ISBN9780199358182. OCLC 967694121.
↑国家测绘局地名研究所 (1997). 中国地名录 [Gazetteer of China]. Beijing: SinoMaps Press. p. 311. ISBN7-5031-1718-4.