சிங்கராஜக் காடு
சிங்கராஜா வனம் Sinharaja Forest Reserve | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | ix, x |
உசாத்துணை | 405 |
UNESCO region | ஆசியா பசிப்பிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1988 (10வது தொடர்) |
சிங்கராஜா வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அருகாமை நகரம் | இரத்தினபுரி |
ஆள்கூறுகள் | 6°25′00″N 80°30′00″E / 6.41667°N 80.50000°E சபரகமுவா, தென் மாகாணம், இலங்கை |
பரப்பளவு | 88.64 km² |
நிறுவப்பட்டது | ஏப்ரல் 1978 |
சிங்கராஜா வனம் (Sinharaja Forest Reserve) இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமைத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடையே மிகப் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.[1][2]
இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க அரசிதழின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528/14 அரசிதழின் படி, 7,648.2 எக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமைக் காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 எக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 எக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது.[1]
காலநிலை
இது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனப்பகுதியில் ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே தொடக்கம் யூலை வரை தென்மேற்குப் பருவக் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீட்டர் மழை இங்கே பொழிகின்றது.[3]