சிஞ்சிருக்கான்

தையற்கார எறும்பு
Oecophylla

புதைப்படிவ காலம்:47–0 Ma
PreЄ
Pg
N
இயோசீன் - Recent
Weaver ant (Oecophylla smaragdina) major worker (இந்தியா).
Weaver ant (Oecophylla longinoda) major worker (Tanzania)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Hymenoptera
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Formicinae
சிற்றினம்:
Oecophyllini

Emery, 1895
பேரினம்:
Oecophylla

Smith, 1860
மாதிரி இனம்
Formica virescens (junior synonym of Oecophylla smaragdina)
உயிரியற் பல்வகைமை[1]
2 extant species
13 extinct species
Map showing range of Oecophylla
Oecophylla range map.
Oecophylla longinoda in blue, Oecophylla smaragdina in red.[2]

சிஞ்சிருக்கான் அல்லது தையற்கார எறும்பு (Weaver ant) என்பவை ஒரு வகை எறும்புகளாகும். இந்த தையற்கார எறும்புகள் மரங்களில் வாழ்கின்றன. அவற்றின் வேலைக்கார எறும்புகள் தாங்கள் வசிக்கும் மரத்தின் இலைகளை வளைத்து அவற்றை பட்டுப்போன்ற இழை மூலம் இணைத்து கூட்டை வடிவமைப்பவை. இலற்றை ஒன்றிணைப்பதற்கு எறும்பின் தோற்றுவளரிகள் வெளியிடும் (Larvae) இழைகளைப் பயன்படுத்திக் கொள்பவை.[3]

இவற்றில் முதன்மையான வேலைக்கர எறும்புகள் சுமார் 8-10 மிமீ (0.31-0.39 அங்குலம்) நீளமும், சிறிய எறும்புகள் அவற்றின் அளவில் சுமார் பாதியளவு நீளமும் கொண்டவை. இந்த எறும்புகள் சிவப்பு நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறங்களாக இனங்களைப் பொறுத்து நிறத்தில் வேறுபடுகின்றன. இந்த வகையின் ராணி எறும்புகள் பச்சை நிறத்திலும் இறக்கைகளுடனும் இருக்கும்.[4]

சமூகப் பூச்சியான இவை கூட்டைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கும். எதிரிகள் வந்தால் விரைந்து கடித்துவிடும். கடிக்கும்போது கடிவாயில் பாமிக் அமிலத்தை செலுத்தும் என்பதால்,[5][6] கடிபட்ட இடத்தில் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படும். இது ஓர் இரைக்கொல்லியும்கூட. இவை மரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடுவதால் இவை நன்மை செய்யும் பூச்சிகளாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. Bolton, B. (2015). "Oecophylla". AntCat. பார்க்கப்பட்ட நாள் 30 January 2015.
  2. Dlussky, G.M.; Wappler, T.; Wedmann, S. (2008). "New middle Eocene formicid species from Germany and the evolution of weaver ants". Acta Palaeontologica Polonica 53 (4): 615–626. doi:10.4202/app.2008.0406. http://www.bioone.org/doi/pdf/10.4202/app.2008.0406. 
  3. Hölldober, B. & Wilson, E.O. 1990. The ants. Cambridge, Massachusetts: Harvard University Press.
  4. ஆதி வள்ளியப்பன் (10 பெப்ரவரி 2018). "தையற்கார எறும்பு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2018. {cite web}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. J. W. S. Bradshaw, R. Baker, P. E. Howse (1979) Chemical composition of the poison apparatus secretions of the African weaver ant, Oecophylla longinoda, and their role in behaviour. Physiological Entomology 4(1), 39–46 எஆசு:10.1111/j.1365-3032.1979.tb00175.x
  6. N. Peerzada, T. Pakkiyaretnam and S. Renaud. Volatile constituents of the green ant Oecophylla smaragdina. Agric. Biol. Chem., 54 (12), 3335-3336, 1990 [1]