சிடிஎம்ஏ

வார்ப்புரு:Multiplex techniques

கோட் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ் (சிடிஎம்ஏ ) என்பது பல்வேறு ரேடியோ தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சேனல் ஆக்சஸ் முறையாகும். சிடிஎம்ஏ முறையை தனது சேனல் ஆக்சஸ் முறையாக பயன்படுத்தும் சிடிஎம்ஏஒன் மற்றும் சிடிஎம்ஏ2000 (இவை பெரும்பாலும் சுருக்கமாக "சிடிஎம்ஏ" என்று குறிப்பிடப்படுகிறது) என்றழைக்கப்படும் மொபைல் போன் தரமுறைகளுடன் இதை குழப்பி கொள்ளக்கூடாது.

ஒரேயொரு தொலைதொடர்பு சேனல் வழியாக, ஒரேசமயத்தில் தகவல்களை அனுப்ப, பல டிரான்ஸ் மீட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நுட்பமானது, டேட்டா தொலை தொடர்பின் அடிப்படை உத்திகளில் ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு பேண்ட்வித்தை பல ப்ரீகுவன்சிகளில் பல பயனர்கள் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த நுட்பம் தான் மல்டிபிளக்சிங் என்றழைக்கப்படுகிறது. ஒரே பிசிக்கல் சேனல் வழியாக பல பயனர்களை மல்டிபிளக்ஸ் செய்து அனுப்ப ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தையும், ஒரு பிரத்யேக குறியீட்டு முறையையும் (ஒவ்வொரு டிரான்ஸ்மீட்டருக்கும் ஒரு கோட் வரையறுக்கப்படும்) சிடிஎம்ஏ பயன்படுத்துகிறது. வேறுபாடுகளைக் கூறுவதானால், டைம் டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ் (டீடிஎம்ஏ ) அக்சஸ் நேரத்தைப் பகுக்கிறது, ப்ரீகுவன்சி டிவிஷன் மல்டிபிள் ஆக்சஸ் (எப்டிஎம்ஏ ) ப்ரீகுவன்சியாக பகுக்கப்படுகிறது. கடத்தப்பட வேண்டிய தரவுகளை விட மாடுலேஷனுடன் கோட்டிங் செய்யப்பட்ட சிக்னல் பரந்த டேட்டா பேண்ட்விட்தை கொண்டிருக்கும் என்பதால், சிடிஎம்ஏ என்பது "ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம்" சிக்னலிங்கின் ஒரு வடிவமாக உள்ளது.

மல்டிபிள் ஆக்சஸில் இருக்கும் பிரச்சனையை ஓர் உவமையோடு சொல்வதானால், ஓர் அறையில் (அதாவது, ஒரு சேனலில்) பலர் ஒருவருக்கொருவர் பேச விரும்புவது போலாகும். குழப்பத்தைத் தவிர்க்க, அவர்கள் தங்களுக்கென பேசுவதற்கு ஒரு கால அளவைத் தேர்ந்தெடுக்கலாம் (அதுதான், டைம் டிவிஷன்), வெவ்வேறு சத்தத்தில் பேசலாம் (அதுதான், ப்ரீகுவன்சி டிவிஷன்), அல்லது வெவ்வேறு மொழியில் பேசலாம் (அதுதான், கோட் டிவிஷன்). அந்த கடைசி உதாரணம் தான் சிடிஎம்ஏ -விற்கு உவமை. அதில் ஒரே மொழி பேசும் மக்கள் மட்டும் தங்களுக்குள் புரிந்து கொள்ள முடியும், ஆனால் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அதேபோல, ரேடியோ சிடிஎம்ஏ -வில், ஒவ்வொரு பயனர்கள் குழுவிற்கும் ஒரு பகிர்ந்தளிக்கப்பட்ட குறியீடு அளிக்கப்படும். பல குறியீடுகள் ஒரே சேனலை ஏற்கும், ஆனால் அந்த ஒரு குறிப்பிட்ட குறியீட்டைக் கொண்ட பயனர்கள் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ள முடியும்.

பயன்கள்

ஒரு சிடிஎம்ஏ மொபைல் போன்
  • கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங்கின் ஆரம்ப பயன்பாடுகளில்—இது சிடிஎம்ஏஒன் தொழில்நுட்பத்தில் இருந்து வேறுபட்டது, பழையது—ஜிபிஎஸ் பயன்பாடும் ஒன்றாக இருந்து வருகிறது.
  • குவால்காம் தரமுறை ஐஎஸ்-95, சிடிஎம்ஏஒன் என்று சந்தைப்படுத்தப்படுகிறது.
  • குவால்காம் தரமுறை ஐஎஸ்-2000 என்பது சிடிஎம்ஏ2000 என்று அறியப்படுகிறது. குளோபல்ஸ்டார் சேட்டிலைட் போன் நெட்வொர்க் உட்பட பல மொபைல் போன் நிறுவனங்களால் இந்த தரமுறை பயன்படுத்தப்படுகிறது.
  • சரக்கு போக்குவரத்திற்கான OmniTRACS செயற்கைகோள் முறையிலும் சிடிஎம்ஏ பயன்படுத்தப்படுகிறது.

சிடிஎம்ஏ மாடுலேஷனின் வெவ்வேறு படிகள்

சிடிஎம்ஏ என்பது ஒரு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் மல்டிபிள் ஆக்சஸ்[1] நுட்பமாகும். ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் நுட்பம் என்பது ஒரே டிரான்ஸ்மிட்டிங் பவரைக் கொண்டு தரவுகளின் பேண்ட்விட்தை ஒரே சீராக பரப்பி விடுகிறது. ஸ்ப்ரெட்டிங் குறியீடு என்பது ஒரு சூடோ-ரேண்டம் குறியீடாகும், பிற செங்குத்தான பல்ஸ் குறியீடுகளைப் போல இல்லாமல் இது ஒரு செங்குத்தான பன்முக பயன்பாட்டைக் கொண்டிருக்கும். சிடிஎம்ஏ -ல் உள்ளேயே உருவாக்கப்படும் குறியீடு, ஒலிபரப்ப வேண்டிய தரவுகளின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செயல்படுத்தப்படும். ஒலிபரப்ப வேண்டிய தரவு எளிமையாக, அந்த வேகமான குறியீடுகளோடு XOR (exclusive OR) செய்யப்படும். ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு உருவாகிறது என்பதை பின்வரும் படத்தில் பார்க்கலாம். எனும் பல்ஸ் கால அளவைக் கொண்ட டேட்டா சிக்னல், எனும் பல்ஸ் கால அளவைக் கொண்ட குறியீட்டு சிக்னலுடன் சேர்க்கப்படுகிறது. (குறிப்பு: பேண்ட்வித் என்பது என்பதற்கு நேர்விகிதத்தில் இருக்கும். இதில் என்பது பிட்டின் கால அளவாகும்). ஆகவே, டேட்டா சிக்னலின் பேண்ட்விட்த் ஆகும், ஸ்ப்ரெட் ஸ்பெக்ரம் சிக்னலின் பேண்ட்விட்த் ஆகும். -ஐ விட மிகவும் குறைவு என்பதால், ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னலின் பேண்ட்விட்த்தானது, நிஜமான சிக்னலின் பேண்ட்விட்த்தை விட மிக அதிகளவில் இருக்கும். விகிதம் ஸ்ப்ரெட்டிங் காரணி அல்லது புரோசசிங் கெயின் என்றழைக்கப்படுகிறது, இது ஒரு பேஸ் ஸ்டேஷனால்[2] ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படும் மொத்த பயனர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தீர்மானிக்கிறது.

சிடிஎம்ஏ முறையில் ஒவ்வொரு பயனரும், அவர்களின் சிக்னலை மாடுலேட் செய்ய வெவ்வேறு குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். சிக்னலை மாடுலேட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் குறியீடுகளைத் தேர்ந்தெடுப்பது, சிடிஎம்ஏ முறைகளின் செயல்திறனில் ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு குறிப்பிட்ட பயனரின் சிக்னலுக்கும், மற்ற பயனர்களின் சிக்னல்களுக்கும் இடையில் கணிசமான இடைவெளி (good seperation) இருக்கும் போது சிறந்த செயல்திறன் அமைகிறது. குறிப்பிட்ட பயனரால் உருவாக்கப்பட்ட குறியீட்டுடன் பெறப்பட்ட சிக்னலை கோரிலேட்டிங் (correlating) செய்வதன் மூலம் சிக்னல்களுக்கு இடையே கணிசமான இடைவெளியை உருவாக்க முடியும். அந்த குறிப்பிட்ட பயனரின் குறியீட்டுடன் சிக்னல் பொருந்துமேயானால், அந்த கோரிலேஷன் செயல்பாடு அதிகமாக இருக்கும், சிஸ்டத்தினாலும் சிக்னலைப் பிரித்தெடுக்க முடியும். அந்த குறிப்பிட்ட பயனரின் குறியீடு, சிக்னலுடன் முற்றிலும் பொருந்தி இல்லை என்றால் கோரிலேஷன் பூஜ்ஜியத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் (இதனால் சிக்னல் நிராகரிக்கப்படும்); இது கிராஸ் கோரிலேஷன் என்று அழைக்கப்படுகிறது. குறியீடு, பூஜ்ஜியமாக இல்லாமல் ஏதோவொரு டைம் ஆப்செட்டில் சிக்னலுடன் கோரிலேட் ஆகும் போது, கோரிலேஷன் பூஜ்ஜியத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும். இது ஆட்டோ-கோரிலேஷன் என்று குறிக்கப்படுகிறது, இது பல்வழி குறுக்கீட்டை[3] (multi-path interference) நிராகரிக்கப் பயன்பனடுத்தப்படுகிறது.

பொதுவாக, சின்க்ரோனியஸ் (ஆர்த்தோகனல் குறியீடுகள்) மற்றும் அசின்க்ரோனியஸ் (சூடோ-ரேண்டம் குறியீடுகள்) என்கிற இரண்டு அடிப்படை பிரிவுகளை சிடிஎம்ஏ கொண்டிருக்கிறது.

கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங் (சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ)

சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ, டேட்டா ஸ்ட்ரிங்குகளைக் குறிக்கும் வெக்டார்களுக்கு இடையில் இருக்கும் ஆர்த்தோகனாலிட்டியின் கணித பண்புகளை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, பைனரி ஸ்ட்ரிங் "1011" என்பது வெக்டாரில் (1,0,1,1) என்று குறிக்கப்படும். வெக்டார்களின் அவற்றிற்குரிய காம்பணன்டுகளின் பெருக்குத்தொகையைக் கூட்டி கிடைக்கும் மதிப்பான டாட் புரோடக்டுகளை எடுத்து கொண்டு வெக்டார்கள் பெருக்கப்படுகின்றன. டாட் புரோடக்ட் பூஜ்ஜியமாக இருந்தால், இரண்டு வெக்டார்களும் ஒன்றுக்கு ஒன்று ஆர்தோகனலாக இருப்பதாக கூறப்படும் (குறிப்பு: u=(a,b) மற்றும் v=(c,d) என்றால், டாட் புரோடக்டு u.v = a*c + b*d). டபுள்யூ-சிடிஎம்ஏ எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கும் டாட் புரோடக்டுகளின் சில பண்புகள் உதவுகின்றன. வெக்டார்கள் a மற்றும் b இரண்டும் ஆர்த்தோகனலாக இருந்தால்,

சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ-ல் இருக்கும் ஒவ்வொரு பயனர்களும், அவர்களின் சிக்னல்களை மாடுலேட் செய்ய, பிறரின் குறியீடுகளுக்கு ஏற்ப தனக்கென ஒரு குறியீட்டு ஆர்த்தோகனலைப் பயன்படுகிறார்கள். நான்கு பரஸ்பர ஆர்த்தோகனல் டிஜிட்டல் சிக்னலின் ஓர் உதாரணம் இங்கே படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. ஆர்த்தோகனல் குறியீடுகள் ஒரு கிராஸ்-கோரிலேஷனை பூஜ்ஜியத்திற்கு சமமாக கொண்டிருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவை ஒன்றோடு ஒன்று குறுக்கீடு செய்வதில்லை. ஐஎஸ்-95ஐ பொருத்தவரை, வெவ்வேறு பயனர்களைப் பிரிக்கவும், சிக்னலை என்கோடு செய்யவும் 64 பிட் வால்ஷ் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு 64 வால்ஸ் குறியீடுகளும் ஒன்றுக்கொன்று ஆர்த்தோகனலாக இருப்பதால், சிக்னலானது 64 ஆர்த்தோகனல் சிக்னல்களாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயனரின் சிக்னலும் எவ்வாறு என்கோடு மற்றும் டிகோடு செய்யப்படுகிறது என்பதை பின்வரும் உதாரணம் எடுத்துக்காட்டுகிறது.

உதாரணம்:

பரஸ்பரம் ஆர்த்தோகனலாக இருக்கும் ஒரு வெக்டார்களின் தொகுப்புடன் தொடங்குவோம். (பரஸ்பர ஆர்த்தோகனாலிட்டி இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தாலும் கூட, இந்த வெக்டார்கள் எளிமையாக டிகோடு செய்யும் வகையில் தான் பொதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கும், உதாரணமாக வால்ஸ் மேட்ரிக்ஸ்களில் நெடுவரிசையிலோ அல்லது குறுக்கு வரிசையிலோ அமைக்கப்பட்டிருக்கும்). ஆர்த்தோகனல் செயல்பாடுகளுக்கான ஓர் உதாரணம் இடது பக்கம் உள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வெக்டார்கள் தனிப்பட்ட பயனர்களுக்கு ஒதுக்கப்படுகிறது, இவை தான் "குறியீடு", "சிப்பிங் குறியீடு" அல்லது "சிப் குறியீடு" என்றழைக்கப்படுகிறது. சுருக்கமாக கூறுவதற்காக, இந்த உதாரணத்தின் மீதப்பகுதிகளில், குறியீடுகள் (V) வெறும் 2 டிஜிட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நான்கு பரஸ்பர செங்கோண டிஜிட்டல் சிக்னலிற்கான ஓர் எடுத்துக்காட்டு

ஒவ்வொரு பயனரும் ஒரு வெவ்வேறு குறியீட்டைக் கொண்டிருப்பார், இதை v என்று வைத்து கொள்வோம். அனுப்பப்பட வேண்டிய டேட்டா, ஒரு டிஜிட்டல் பூஜ்ஜியம் என்றால், உண்மையில் அனுப்பப்படும் பிட்கள் -v ஆக இருக்கும். அனுப்பப்பட வேண்டிய டேட்டா டிஜிட்டல் ஒன்று என்றால், உண்மையில் அனுப்பப்பட்ட பிட்கள் v ஆக இருக்கும். உதாரணமாக, v =(1,-1) என்று கொண்டு, பயனர் அனுப்ப விரும்பும் டேட்டா (1, 0, 1, 1) என்றால், இது (v , –v , v , v ) என்பதைக் குறிக்கிறது, அது பைனரியில் ((1,–1),(–1,1),(1,–1),(1,–1)) என்று கட்டமைக்கப்படுகிறது. இந்த கட்டுரைக்காக, நாம் கட்டமைக்கப்பட்ட வெக்டாரை டிரான்ஸ்மிட் செய்யப்பட்ட வெக்டார் என்று வைத்து கொள்வோம்.

ஒவ்வொரு அனுப்புனரும் வெவ்வேறு, பிரத்யேக வெக்டார் v ஐ கொண்டிருப்பார், இது செட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும், ஆனால் அனுப்பப்பட்ட வெக்டாரின் கட்டமைப்பு முறை (construction method) ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

இப்போது, குறுக்கீடுகளின் பிசிக்கல் பண்புகளால், இரண்டு சிக்னல்கள் ஒரு புள்ளியில் ஒரே ஃபேஸில் (phase) இருந்தால், அவை ஒவ்வொரு சிக்னலின் ஆம்ப்ளிட்யூடையும் இரட்டிப்பாக்கி அளிக்கும், ஆனால் அவை ஒரே ஃபேஸில் இல்லாவிட்டால், அவை ஒன்றிலிருந்து ஒன்றை "கழித்து" விட்டு, ஆம்ப்ளிட்யூடுகளின் வித்தியாசமாக இருக்கும் ஒரு சிக்னலைக் கொடுக்கும். டிஜிட்டல் முறையில், இந்த நடவடிக்கை ஒவ்வொரு காம்போனண்டாக, டிரான்ஸ்மிஷன் வெக்டார்களைக் கூட்டுவதன் மூலம், வடிவமைக்கப்படும்.

அனுப்புனர்0, (1,-1) என்ற குறியீட்டையும், (1,0,1,1) என்ற தரவையும் கொண்டிருக்கிறார் என்றும், அனுப்புனர்1, (1,1) என்ற குறியீட்டையும், (0,0,1,1) என்ற தரவையும் கொண்டிருக்கிறார் என்றால், இரண்டு அனுப்புனர்களும் ஒரேநேரத்தில் டிரான்ஸ்மிட் செய்தால், பின்வரும் அட்டவணை குறியீட்டு படிகளை விளக்குகிறது:

படிநிலை என்கோடு அனுப்புனர்0 என்கோடு அனுப்புனர்1
0 வெக்டார்0=(1,–1), டேட்டா0=(1,0,1,1)=(v,–v,v,v) வெக்டார்1=(1,1),

டேட்டா1=(0,0,1,1)=(–v,–v,v,v)

1 என்கோடு0=வெக்டார்0.டேட்டா0 என்கோடு1=வெக்டார்1.டேட்டா1
2 என்கோடு0=(1,–1).(1,–1,1,1) என்கோடு1=(1,1).(–1,–1,1,1)
3. என்கோடு0=((1,–1),(–1,1),(1,–1),(1,–1)) என்கோடு1=((–1,–1),(–1,–1),(1,1),(1,1))
4 சிக்னல்0=(1,–1,–1,1,1,–1,1,–1) சிக்னல்1=(–1,–1,–1,–1,1,1,1,1)

ஏனென்றால் சிக்னல்0 மற்றும் சிக்னல்1 இரண்டுமே ஒரேநேரத்தில் காற்றில் டிரான்ஸ்மிட் செய்கிறது, அவை மூல சிக்னலை (raw signal) உருவாக்க ஒன்று சேர்க்கப்படுகின்றன:
(1,–1,–1,1,1,–1,1,–1) + (–1,–1,–1,–1,1,1,1,1) = (0,–2,–2,0,2,0,2,0)

இந்த மூல சிக்னல் (raw signal) ஒரு குறுக்கீடு வடிவம் (interference pattern) என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ரிசீவரானது, ஏதாவதொரு தெரிந்த அனுப்புனரிடம் இருந்து, அனுப்புனரின் குறியீட்டை, குறுக்கீடு வடிவத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஓர் உபயோகமான சிக்னலைப் பிரித்தெடுக்கிறது, பிறகு ரிசீவர் அனுப்புனரின் குறியீடுகளுடன் ஒருங்கிணைக்கிறது. இதை கீழுள்ள அட்டவணை விளக்குகிறது, மேலும் சிக்னல்கள் ஒன்றை ஒன்று குறிக்கிடாமல் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதையும் இது விளக்குகிறது:

படிநிலை டிகோடு அனுப்புனர்0 டிகோடு அனுப்புனர்1
0 வெக்டார்0=(1,–1), பேட்டர்ன்=(0,–2,–2,0,2,0,2,0) வெக்டார்1=(1,1), பேட்டர்ன்=(0,–2,–2,0,2,0,2,0)
1 டிகோடு0=பேட்டர்ன்.வெக்டார்0 டிகோடு1=பேட்டர்ன்.வெக்டார்1
2 டிகோடு0=((0,–2),(–2,0),(2,0),(2,0)).(1,–1) டிகோடு1=((0,–2),(–2,0),(2,0),(2,0)).(1,1)
3. டிகோடு0=((0+2),(–2+0),(2+0),(2+0)) டிகோடு1=((0–2),(–2+0),(2+0),(2+0))
4 டேட்டா0=(2,–2,2,2)=(1,0,1,1) டேட்டா1=(–2,–2,2,2)=(0,0,1,1)

அதன்பிறகு, டிகோடிங் செய்த பின்னர், 0வை விட அதிகமாக இருக்கும் எல்லா மதிப்புகளும் 1ஆகவும், பூஜ்ஜியத்தை விட குறைவான எல்லா மதிப்புகளும் 0மாகவும் மாற்றப்படுகின்றன. உதாரணமாக, டிகோடிங்கிற்கு பிறகு, டேட்டா0 என்பது (2,–2,2,2)ஆக இருக்கும், ஆனால் ரிசீவர் இதை (1,0,1,1) என்று புரிந்து கொள்கிறது.

பயனர் எந்த தகவலும் அனுப்பாத போது, ரிசீவர் ஒரு சிக்னலை டிகோட் செய்ய முயன்றால் என்ன நடக்கும் என்பதையும் நாம் பார்ப்போம். சிக்னல்0=(1,-1,-1,1,1,-1,1,-1) என்பது மட்டும் தனியாக டிரான்ஸ்மிட் செய்யப்பட்டது என்று வைத்துகொள்வோம். கீழுள்ள அட்டவணை ரீசிவரின் டிகோட் செய்யப்பட்டிருப்பதைக் காட்டுகிறது:

படிநிலை டிகோடு அனுப்புனர்0 டிகோடு அனுப்புனர்1
0 வெக்டார்0=(1,–1), பேட்டர்ன்=(1,-1,-1,1,1,-1,1,-1) வெக்டார்1=(1,1), பேட்டர்ன்=(1,-1,-1,1,1,-1,1,-1)
1 டிகோடு0=பேட்டர்ன்.வெக்டார்0 டிகோடு1=பேட்டர்ன்.வெக்டார்1
2 டிகோடு0=((1,–1),(–1,1),(1,-1),(1,-1)).(1,–1) டிகோடு1=((1,–1),(–1,1),(1,-1),(1,-1)).(1,1)
3. டிகோடு0=((1+1),(–1-1),(1+1),(1+1)) டிகோடு1=((1–1),(–1+1),(1-1),(1-1))
4 டேட்டா0=(2,–2,2,2)=(1,0,1,1) டேட்டா1=(0,0,0,0)

அனுப்புனர்1ன் குறியீட்டைப் பயன்படுத்தி ரிசீவர் டிகோட் செய்ய முயற்சிக்கும் போது, டேட்டா எல்லாமே பூஜ்ஜியங்களாக இருக்கும், ஆகவே கிராஸ்-கோரிலேஷன் என்பது பூஜ்ஜியமாக இருக்கும், ஆகவே அனுப்புனர்1 எந்த டேட்டாவையும் டிரான்ஸ்மிட் செய்யவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிந்துவிடும்.

அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ

ஆர்த்தோகனல் வால்ஸ் சீகுவன்சின் முந்தைய உதாரணம், பொதுவாக கோட் டிவிஷன் மல்டிபிளக்சிங் (CDM) என்று குறிப்பிடப்படும் ஒரு சின்க்ரோனியஸ் சிஸ்டத்தில் எவ்வாறு 2 பயனர்கள் ஒன்றாக மல்டிபிளக்ஸ் செய்யப்படுகிறார்கள் என்பதை விவரித்தது. படத்தில் காட்டப்பட்டுள்ள 4 வால்ஸ் சீகுவன்ஸ்களின் ஒரு தொகுப்பு, 4 பயனர்களைக் கொண்டிருக்கும், பொதுவாக, NxN வால்ஸ் மேட்ரிக்ஸானது, பல (N) பயனர்களை மல்டிபிளக்ஸ் செய்ய உதவுகிறது. ஒவ்வொரு பயனரும் ஒரே நேரத்தில் ரிசீவரை வந்தடைய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பயனரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீகுவன்ஸ் v ஐ (அல்லது காம்ப்ளிமெண்ட், -v ஐ) டிரான்ஸ்மிட் செய்யும் வகையில், எல்லா பயனர்களும் ஒருங்கிணைக்கப்படுவது மல்டிபிளக்சிங்கிற்கு அவசியமாகிறது. இவ்வாறு, இந்த நுட்பம் பேஸ் ஸ்டேசனில் இருந்து மொபைல் லிங்கில் பயன்படுகிறது, இங்கு எல்லா டிரான்ஸ்மிஷன்களும் ஒரே டிரான்மிட்டரில் இருந்து தொடங்குகிறது என்பதோடு இங்கு அவற்றை துல்லியமாக ஒருங்கிணைக்க முடிகிறது.

மற்றொருபுறம், மொபைலில் இருந்து பேஸ் ஸ்டேஷன் லிங்குகளைத் துல்லியமாக ஒருங்கிணைக்க முடியாது, குறிப்பாக மொபைல் போன்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் என்பதால் அவற்றை ஒருங்கிணைப்பது கடினம், ஆகவே இதற்கு சற்றே வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. முறையற்று ரேண்டம் தொடக்க புள்ளிகளுடன் (arbitrarily random starting points) ஆர்த்தோகனலாக இருக்கும் சிக்னச்சர் சீகுவன்ஸ்களை உருவாக்க கணிதவியல் முறையில் சாத்தியமில்லை என்பதால், அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ சிஸ்டம்களில் "சூடோ-ரேண்டம்" அல்லது "சூடோ-நாய்ஸ்" (PN) சீகுவன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிஎன் குறியீடு என்பது ஒரு பைனரி சீகுவன்ஸ் ஆகும், இது எவ்வித முறைக்குட்பட்டும் தோன்றுவதில்லை, ஆனால் குறிப்பிட்ட ரிசீவர்களால் இவற்றை ஒரு குறிப்பிட்ட வகையில் மீண்டும் உருவாக்கி கொள்ள முடியும். சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ன் ஆர்த்தோகனல் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டது (மேலே உள்ள உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளது) போலவே, அதே முறையில் அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ல் பயனர்களின் சிக்னலை என்கோடு மற்றும் டிகோடு செய்ய இந்த பிஎன் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிஎன் சீகுவன்ஸ்கள் கணிப்பியலின் அடிப்படையில் கோரிலேட் ஆகியிருக்காது, மேலும் பல பிஎன் சீகுவன்ஸ்களின் கூட்டு எண்ணிக்கையானது, மல்டிபிள் ஆக்சஸ் குறுக்கீட்டை (Multiple Access Interference - MAI)உண்டாக்கும், அது காசியன் நாய்ஸ் செயல்முறையால் தோராயமாக கணிக்கப்படுகிறது (புள்ளிவிபரவியலில் இருக்கும் "சென்ட்ரல் லிமிட் தத்துவத்தைப்" பயன்படுத்துகிறது). எல்லா பயனர்களின் சிக்னல்களும் ஒரே பவர் அளவில் பெறப்பட்டால், பின்னர் MAI -ன் மாற்றங்கள் (உதாரணமாக, நாய்ஸ் பவர்) பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேர்விகிதத்தில் அதிகரிக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ போலில்லாமல், தேவையான ஒரு பயனரின் சிக்னலுக்கு பிற பயனர்களின் சிக்னல்கள் தேவையற்ற நாய்ஸாக அமைந்து விடுகின்றன, மேலும் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான சிக்னலுடன் இவை நேர்விகிதத்தில் லேசாக குறுக்கீடுகளை (interfere) உருவாக்குகின்றன.

தேவையற்ற சிக்னல்களை ரிசீவர்கள் பகுதியாக பிரித்தெடுக்க அனுமதிக்கும் வகையில், எல்லா வகையான சிடிஎம்ஏ -க்களும் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் புரோசஸ் கெயினை பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட பிஎன் சீகுவன்ஸ் (குறியீடு) உடன் என்கோடு செய்யப்பட்ட சிக்னல்கள் பெறப்படுகின்றன, இருப்பினும் குறைந்த புரோசஸ் கெயினினால் வெவ்வேறு குறியீடுகளுடனான சிக்னல்கள் (அல்லது ஒரேமாதிரியான குறியீடு, ஆனால் வெவ்வேறு டைமிங் ஆப்செட்டுடன்) பரவலான இரைச்சலாக உருவாகி விடுகின்றன.

ஒவ்வொரு பயனரும் MAI -ஐ தோற்றுவிப்பதால், சிடிஎம்ஏ டிரான்ஸ்மிட்டர்களில் சிக்னல் வலிமையைக் கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய பிரச்சனையாகி விடுகிறது. ஒரு சிடிஎம் (சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ), டிடீஎம்ஏ அல்லது எப்டிஎம்ஏ ரிசீவர், இந்த நுட்பங்களில் உள்ள ஆர்த்தோகனாலிட்டியின் காரணமாக வெவ்வேறு குறியீடுகளையோ, டைம் ஸ்லாட்டுகளையோ அல்லது ப்ரீகுவன்சி சேனல்களையோ பயன்படுத்தி, கோட்பாட்டளவில், வலிமையான தேவையற்ற சிக்னல்களை முற்றிலுமாக நிராகரித்து விடுகின்றன. ஆனால் இது அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ முறையில் சாத்தியமில்லை; தேவையற்ற சிக்னல்களை இதில் பகுதியாக தான் ஒதுக்க முடியும். ஏதாவதொரு அல்லது அனைத்து தேவையற்ற சிக்னல்களுமே, தேவையான சிக்னலை விட வலிமையாக இருந்தால், அவை தேவையான சிக்னலை மூழ்கடித்துவிடும். இதனால் பல்வேறு சிக்னல் பவர் அளவுகளை, ரிசீவரில் உள்ள பவர் அளவோடு தோராயமாகவாவது பொருந்தி இருக்கும்படி வைப்பது அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ நுட்பத்தில் ஒரு பொதுவான தேவையாக அமைந்துவிடுகிறது. ஆகவே, ஒவ்வொரு மொபைல்களின் டிரான்மிட் பவரையும் இறுக்கமாக கட்டுப்படுத்த, பாஸ்ட் குளோஸ்டு-லூப் பவர் கண்ட்ரோல் (fast closed-loop power control) என்ற முறை சிடிஎம்ஏ செல்லுலர் பேஸ் ஸ்டேஷன்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிரச்சனை குறித்து மேலும் விபரங்களை அறிவதற்கு நியர்-பார் பிராப்ளம் (Near-far problem) என்ற பகுதியையும் பாருங்கள்.

பிற நுட்பங்களோடு ஒப்பிடும் போது, அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ல் உள்ள பயன்கள்:

1. பிக்சட் ப்ரீகுவன்சி ஸ்பெக்ட்ரமின் முழுமையான நடைமுறை பயன்பாடு

சிடிஎம் (சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ), டீடிஎம்ஏ மற்றும் எப்டிஎம்ஏ ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ல் இருக்கும் முக்கிய ஆதாயம் என்னவென்றால், இது மொபைல் தொலைதொடர்பு பயன்பாடுகளில் ஸ்பெக்ட்ரமை முழுமையாக பயன்படுத்துகிறது. (கோட்பாட்டளவில், சிடிஎம்ஏ, டிடீஎம்ஏ மற்றும் எப்டிஎம்ஏ ஆகிய அனைத்தும் ஒரேமாதிரியான ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு திறனைப் பெற்றிருந்தாலும் கூட, நடைமுறையில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த குறைபாடுகளையும் கொண்டிருக்கின்றன - உதாரணமாக, சிடிஎம்ஏ நுட்பத்தைப் பொறுத்த வரை பவர் கண்ட்ரோல் சவாலாக இருக்கும், டிடீஎம்ஏ நுட்பத்தைப் பொறுத்த வரையில் டைமிங் சவாலாக இருக்கும், எப்டிஎம்ஏ -வைப் பொறுத்த வரையில் ப்ரீகுவன்சி உருவாக்கம் மற்றும் ஃபில்ட்ரிங் (filtering) சவாலாக இருக்கும்). டீடிஎம்ஏ நுட்பத்தில், அனைத்து பயனர்களின் டிரான்ஸ்மிஷன் டைம் ஸ்லாட்களும் அதே சரியான டைம் ஸ்லாட்டில் பெறப்படப்பட வேண்டும் என்பதையும், குறுக்கீடுகளை ஏற்படுத்த கூடாது என்பதையும் உறுதிப்படுத்த மிகவும் கவனமாக சின்க்ரோனைஸ் செய்யப்பட வேண்டும். ஒரு மொபைல் அமைப்புமுறையில் இது மிக துல்லியமாக கடைபிடிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு டைம் ஸ்லாட்டும் ஒரு கார்டு-டைமை கொண்டிருக்கும், இது பயனர்களுக்கு குறுக்கீடு இருக்காது என்பதற்கான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது, ஆனால் ஸ்பெக்ரமை மிகவும் சிறப்பாக முழுமையாக பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதேபோல எப்டிஎம்ஏ நுட்பங்களில், பயனர்களின் மொபைல் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்ந்து கொண்டிருப்பதால், சிக்னல் ஸ்பெக்ட்ரமில் ஏற்படும் எதிர்பாரா டாப்லர் ஷிப்டின் (doppler shift ) காரணமாக, அடுத்தடுத்த சேனல்களுக்கு இடையில் ஒரு கார்டு-பேண்டை (guard-band) பயன்படுத்த வேண்டியதிருக்கிறது. இந்த கார்டு-பேண்டுகளால், அடுத்தடுத்த சேனல்களால் குறுக்கீடுகள் இருக்காது என்ற நம்பகத்தன்மை அதிகரிக்கிறது, ஆனால் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு குறைந்து போகிறது.

2. ஆதாரங்களை வசதிக்கேற்ப பிரித்தளித்தல்

ஆதாரங்களை வசதிக்கேற்ப பிரித்தளிக்கும் ஒரு முக்கிய பயனை அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ வழங்குகிறது, அதாவது இதில் ஆக்டிவாக இருக்கும் பயனர்களுக்கு மட்டும் பிஎன் குறியீடுகளை ஒதுக்கி அளிக்க முடியும். சிடிஎம், டீடிஎம்ஏ மற்றும் எப்டிஎம்ஏ ஆகியவற்றை பொறுத்த வரையில் முறையே ஒரேநேரத்தில் அளிக்கப்படும் ஆர்த்தோகனல் குறியீடுகள், டைம் ஸ்லாட்டுகள் மற்றும் ப்ரீகுவன்சி ஸ்லாட்டுகள் மாற்ற முடியாதனவாய் அமைந்துவிடுகின்றன, இதன் காரணமாக ஒரேநேரத்தில் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. சிடிஎம், டீடிஎம்ஏ மற்றும் எப்டிஎம்ஏ நுட்பங்களில் முறையே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆர்த்தோகனல் குறியீடுகள், டைம் ஸ்லாட்டுகள் மற்றும் ப்ரீகுவன்சி பேண்டுகள் ஒதுக்கப்பட்டு விடுவதால், அதன் தொலைதொடர்பு இயல்பின் காரணமாகவும், பேக்கெட் டேட்டா டிரான்ஸ்மிஷன் காரணமாகவும் அந்த ஆதாரவளங்களைக் குறைவாக பயன்படுத்த வேண்டியதாகிவிடுகிறது. அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ நுட்பத்தில் இத்தனை பயனர்கள் தான் இருக்க வேண்டும் என்ற இறுக்கமான கட்டுப்பாடு கிடையாது, ஆனால் பயனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிக்னலுக்கும் குறுக்கீடுகளுக்கும் இடையிலான விகிதம் (SIR - Signal to Interference Ratio) தலைகீழாக மாறும் என்பதால், தேவையான பிட் எர்ரர் (bit error) நம்பகமின்மையால் ஏற்படும் நடைமுறை குறைபாடுகள் மட்டும் இருக்கும். திடீர் டிராபிக் ஏற்படும் சூழ்நிலைகளைக் கொண்ட மொபைல் தொலைதொடர்பில், அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ -ன் ஆதாயம் என்னவென்றால், பயனர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பயன்பாட்டு சதவீதத்தால் ஒரு சராசரி மதிப்பை வரையறுப்பதன் மூலம் அதன் திறனை (பிட் எர்ரர் ரேட்) மாறி மாறி மாற்றிக் கொள்ள அனுமதிக்கலாம். ஒருவேளை அதில் 2N பயனர்கள் மட்டும் இருக்கிறார்கள், அவர்கள் மட்டும் தான் பாதி நேரம் பேசுகிறார்கள் என்றால், N பயனர்கள் எப்போதும் பேசும் அதே சராசரி பிட் எர்ரர் சாத்தியக்கூறைப் இந்த 2N பயனர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதிலிருக்கும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், N பயனர்கள் பேசும் நேரத்தின் பிட் எர்ரர் சாத்தியக்கூறு நிலையாக இருக்கும், ஆனால் அதுவே அடுத்ததில் மாறி மாறி இருக்கும். அதாவது, 2N பயனர்கள் பாதி நேரம் பேசும் போது அதன் அளவு (அதே அடிப்படையில்) மாறி மாறி இருக்கும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல டிரான்ஸ்மிட்டர்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட இடைவெளியில், சிறியளவு டிராபிக்கை உருவாக்கும் மொபைல் வலையமைப்பிற்கு அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ மிகவும் பொருத்தமான தொழில்நுட்பமாகும். சிடிஎம் (சின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ), டீடிஎம்ஏ மற்றும் எப்டிஎம்ஏ ஆகியவற்றில் முறையே ஆர்த்தோகனல் குறியீடுகள், டைம் ஸ்லாட்டுகள் அல்லது ப்ரீகுவன்சி சேனல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டு விடுவதால் திடீரென ஏற்படும் டிராபிக்கின் போது குறைவாக பயன்படுத்தப்படும் ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாமல் போகிறது. உதாரணமாக, ஒரு டீடிஎம்ஏ நுட்பத்தில் N டைம் ஸ்லாட்டுகள் இருக்கிறது என்றும், அதில் பாதி நேரம் 2N பயனர்கள் பேசுகிறார்கள் என்றும் வைத்து கொள்வோம், அப்படியிருந்தால் பாதி நேரம் N பயனர்களை விட அதிகமானவர்களுக்கு, N டைம் ஸ்லாட்டுகளை விட அதிகமான டைம் ஸ்லாட்டுகள் தேவைப்படுகின்றன. மேலும், அவற்றில் ஆர்த்தோகனல் குறியீட்டை, டைம் ஸ்லாட்டை அல்லது ப்ரீகுவன்சி சேனல் ஆதாரங்களை ஒதுக்கி கொடுப்பது, எடுப்பது போன்ற முக்கியமான மேற்படி கண்காணிப்பைத் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஒப்பிட்டு பார்ப்போமேயானால், அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ டிரான்ஸ்மிட்டர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமானால், சிஸ்டத்தோடு இணைப்பு பெறாத வரைக்கும் ஒரே பிஎன் சிக்னச்சர் சீகுவன்ஸ்களை வைத்து கொண்டு, தேவைப்பட்டால் மட்டும் எளிமையாக செய்திகளை அனுப்பிவிடும், தேவையில்லை என்றால் அனுப்பாமல் இருந்துவிடும்.

3. பிஎன் சீகுவன்சின் குறுக்கீடு எதிர்ப்பு திறன்களின் காரணமாக ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிடிஎம்ஏ நுட்பத்தில் உள்ள பிரத்யேக பாதுகாப்பு

=== சிடிஎம்ஏ நுட்பத்தின் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் பண்புகள்

===

பேண்ட்விட்த் என்பது குறைவான ஆதாரம் என்பதால் பெரும்பாலான மாடுலேஷன் நுட்பங்கள் சிக்னலின் பேண்ட்விட்தைக் குறைக்கவே முயற்சிக்கும். இருப்பினும், ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் நுட்பங்கள், குறைந்தபட்ச சிக்னல் பேண்ட்விட்த்தைவிட பல மடங்கு அதிகமான மேங்கிட்யூட்டைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு செய்வதற்கான தொடக்க காரணங்களில் ஒன்று என்னவென்றால், வழிகாட்டுதல் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் உட்பட பலவற்றில் இது இராணுவ பயன்பாடாக இருந்தது. அதன் பாதுகாப்பு காரணங்களாலும், நெரிசலைத் தவிர்க்கும் பண்புகளாலும் இந்த அமைப்புமுறைகள் ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிக்னலானது, சூடோ-ரேண்டம் குறியீட்டைப் பயன்படுத்தி பரப்பி விடப்படுவதால், அசின்க்ரோனியஸ் சிடிஎம்ஏ சில மட்டத்திலான பிரத்யேக பாதுகாப்பைக் கொண்டிருக்கிறது; இந்த குறியீடு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னலை மாறி மாறி தோன்ற செய்கிறது, அத்துடன் இரைச்சல் போன்ற பண்புகளையும் கொண்டிருக்கிறது. ஒரு டேட்டாவை என்கோடு செய்ய, பயன்படுத்தப்பட்டுள்ள இந்த சூடோ-ரேண்டம் சீகுவன்ஸை அறிந்திராமல், டிரான்ஸ்மிஷனில் அனுப்பப்பட்ட தரவுகளை ஒரு ரிசீவரால் டிமாடுலேட் செய்ய முடியாது. மேலும் நெரிசலையும் (Jamming) சிடிஎம்ஏ தடுத்துவிடுகிறது. ஒரு நெரிசல் அளிக்கும் சிக்னலானது (Jamming Signal), சிக்னலில் நெரிசலைக் கொண்டு வரும் அளவிற்கு சக்தியைக் கொண்டிருக்காது. இந்த நெரிசல் அளிக்கும் சிக்னலானது, ஒட்டுமொத்த பேண்ட்விட்த் முழுவதும் அதன் சக்தியைப் பரப்பும் அல்லது ஒட்டுமொத்த சிக்னலின் ஒரு பாகத்தில் மட்டும் அதன் சக்தியைப் பரப்பும்.[4]

மேலும் நேரோபேண்ட் குறுக்கீடுகளையும் (narrowband interference) சிடிஎம்ஏ மிக துல்லியமாக நிராகரித்துவிடுகிறது. நேரோபேண்ட் குறுக்கீடு ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னலின் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பாதிக்கிறது என்றாலும் கூட, நோட்ச் ஃபில்டரிங் முறையில் (notch filtering) மிக சுலபமாக பெருமளவு தகவல்களை இழக்காமல் அவற்றை நீக்க முடியும். இதில் இழக்கப்படும் தரவுகளையும் மீட்டெடுப்பதில் உதவ, கன்வோலூஷன் என்கோடிங் (Convolution encoding) மற்றும் இன்டர்லீவிங் (interleaving) நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிடிஎம்ஏ சிக்னல்கள் பல்வழி பேடிங்கையும் (multipath fading) தடுக்கின்றன. ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம் சிக்னல் பேண்ட்விட்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுவதால், ஒரு சிறிய பகுதி மட்டும் தான், ஏதாவதொரு நேரத்தில் ஏற்படும் பல்வழி குறுக்கீட்டால் பேட்டிங்கிற்கு உள்ளாகிறது. நேரோபேண்ட் குறுக்கீட்டைப் போலவே, இது சிறியளவிலான ஒரு டேட்டா இழப்பை ஏற்படுத்துகிறது, அதுவும் மீட்டெடுக்க கூடியதே.

டிரான்ஸ்மிட் செய்யப்படும் சூடோ-ரேண்டம் குறியீடுகளில் டிலே இருப்பதால், உண்மையான சூடோரேண்டம் குறியீட்டுடன் அவை மிக குறைவாகவே பொருந்தி வரும் என்பதாலும், அது வேறொரு பயனரைப் போல காட்டும் (இது ரிசீவரில் நிராகரிக்கப்படும்) என்பதாலும், பல்வழி குறுக்கீட்டிற்கு சிடிஎம்ஏ தடையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல்வழி சேனல் குறைந்தபட்சம் ஒரு சிப் டிலேவை உருவாக்கும் வரை, பெறவேண்டிய முக்கிய சிக்னலுடன் குறைந்தபட்சம் ஒரு சிப்பால் டைம்களில் பொருத்தமில்லாத வகையில் பல்வழி சிக்னல்கள் ரிசீவரை வந்தடையும். லேசான டிலே இருப்பதால் பல்வழி சிக்னல் பெற வேண்டிய நிஜமான சிக்னலுடன் பொருந்தாமல் போய்விடும் வகையில் சூடோரேண்டம் குறியீடுகளின் கோரிலேஷன் பண்புகள் அமைந்திருக்கும், அது இதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுவிடும்.

சில சிடிஎம்ஏ சாதனங்கள் ஒரு ரேக் ரிசீவரைப் பயன்படுத்துகின்றன, இவை சிஸ்டத்தின் திறனை மேம்படுத்த பல்வழி டிலே காம்பணன்டுகளை நீக்கிவிடுகின்றன. ஒரு ரேக் ரிசீவர், ஒவ்வொன்றும் வெவ்வேறு பாத் டிலேவிற்கு அமைக்கப்பட்டிருக்கும் பல கோரிலேட்டர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுகின்றன, இதனால் வலிமையான சிக்னலுக்காக ஒரேயொரு கோரிலேட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் பாத் டிலே உடன் இருக்கும் ஒரு சாதாரண ரிசீவரிடம் இருந்து பெறும் சிக்னலை விட ரேக் ரிசீவர் ஒரு வலுவான சிக்னலை உருவாக்குகிறது. [5]

ஒரு செல்லுலர் சிஸ்டத்திற்குள் ஒரே ரேடியோ சேனல் ப்ரீகுவன்சியை பிற செல் சைட்டுகளுக்கும் உபயோகப்படுத்தும் திறன் தான் ப்ரீகுவன்சி ரீயூஸ் எனப்படும். எப்டிஎம்ஏ மற்றும் டீடிஎம்ஏ நுட்பங்களில் ப்ரீகுவன்சி திட்டமிடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வெவ்வேறு செல் சைட்டுகளில் இருந்து வரும் சிக்னல்கள் ஒன்றுக்கு ஒன்று குறுக்கிடக்கூடாது என்பதற்காக, வெவ்வேறு செல்களில் பயன்படுத்தப்படும் ப்ரீகுவன்சிகளைத் திட்டமிட்டு கவனமாக கையாள வேண்டும். சிடிஎம்ஏ நுட்பத்தில், சூடோரேண்டம் குறியீடுகள் மூலமாக சேனல் பகுப்பு நடைபெறுவதால், ஒரே ப்ரீகுவன்சியையே ஒவ்வொரு செல்லிலும் பயன்படுத்தலாம். ஆகவே ஒவ்வொரு செல்லிலும் ஒரே ப்ரீகுவன்சி பயன்படுத்தலாம் என்பதால், சிடிஎம்ஏ சிஸ்டத்தில் ப்ரீகுவன்சி திட்டமிடல் அவசியப்படுவதில்லை; இருந்தாலும், ஒரு செல்லில் இருந்து பெறப்பட்ட சிக்னல், பக்கத்தில் இருக்கும் செல்லில் இருந்து பெறும் சிக்னலோடு கோரிலேட் ஆகிவிட கூடாது என்பதால், வெவ்வேறு சூடோரேண்டம் சீகுவன்ஸ்களைத் திட்டமிட வேண்டியுள்ளது.[6]

அருகருகில் உள்ள செல்கள் ஒரே ப்ரீகுவன்சியைப் பயன்படுத்துகின்றன என்பதால், சிடிஎம்ஏ சிஸ்டங்களில் சாப்ட் ஹேண்ட்ஆப்கள் நிகழ்வதற்கான திறனும் இருக்கிறது. அதாவது, மொபைல் போன் ஒரேநேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்களுடன் தொடர்பில் இருக்க இந்த சாப்ட் ஹேண்ட்ஆப் அனுமதிக்கிறது. ஹேண்ட்ஆப் முடியும் வரை, வலுவான சிக்னல் தரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். பிற செல்லுலர் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹார்டு ஹேண்ட்ஆப்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஹார்டு ஹேண்ட்ஆப் ஏற்பட வேண்டிய சூழ்நிலைகளில், அதாவது மொபைல் போன் ஒரு ஹேண்ட்ஆப்பிற்கு நெருங்கும் போது, சிக்னலின் வலிமை தாறுமாறாக வேறுபடக்கூடும். ஒப்பீட்டு வகையில், சிடிஎம்ஏ சாப்ட்ஹேண்ட்ஆப் முறையைப் பயன்படுத்துகின்றன, இது மிகவும் நுண்மையாகவும் இருப்பதுடன், நல்ல நம்பகத்தன்மையையும், வலிமையான சிக்னல் தரத்தையும் அளிக்கிறது.[6]

கூடுதல் பார்வைக்கு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
CDMA
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  • நியர்-ஃபார் பிரச்சனை
  • சிடிஎம்ஏஒன்
  • சிடிஎம்ஏ 2000
  • ஆர்தோகனல் வேரியபிள் ஸ்ப்ரெடிங் பேக்டர் (OVSF), சிடிஎம்ஏ நிறுவுதல்
  • சூடோ-ரேண்டம் நாய்ஸ்
  • ஸ்ப்ரெட் ஸ்பெக்ட்ரம்

குறிப்புதவிகள்

குறிப்புகள்

  1. Ipatov, Valeri (2005). Spread Spectrum and CDMA. John Wiley & Sons, Ltd.
  2. Dubendorf, Vern A. (2003). Wireless Data Technologies. John Wiley & Sons, Ltd.
  3. "CDMA Spectrum". Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
  4. Sklar, Bernard (2001). Digital Communications: Fundamentals and Applications (Second ed.). Prentice-Hall PTR.
  5. Rappaport, Theodore S. (2002). Wireless Communications, Principles and Practice. Prentice-Hall, Inc.
  6. 6.0 6.1 Harte, Levine, Kikta, Lawrence, Richard, Roman (2002). 3G Wireless Demystified. McGraw-Hill.{cite book}: CS1 maint: multiple names: authors list (link)

பிற இணைப்புகள்

வார்ப்புரு:Cdmaவார்ப்புரு:Channel access methods