சின்னக் கொக்கு

சின்னக் கொக்கு
எ. கா. நைகிரிபசு மகராட்டிராவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எக்ரெட்டா
இனம்:
எ. கார்செட்டா
இருசொற் பெயரீடு
எக்ரெட்டா கார்செட்டா
(லின்னேயஸ், 1766)
துணையினம்

எ. கா. கார்செட்டா
எ. கா. இம்மாகுலேட்டா
எ. கா. நைகிரிபசு

Range of E. garzetta      இனப்பெருக்கம்     ஆண்டு முழுவதும்     குளிர்காலத்தில்

சின்னக் கொக்கு அல்லது சிறு வெண் கொக்கு (little egret; Egretta garzetta) என்பது கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும், இது ஒரு நீர்ப்பறவையாகும்.

சிறு வெண் கொக்கு

விளக்கம்

இது வெண் கொக்கைவிட சற்று சிறியது. இதன் அலகு எப்போதும் கருப்பாக இருக்கும். விழிபடலம் மஞ்சளாக இருக்கும். வளர்ந்த சிறு வெண் கொக்கு 55–65 செ.மீ (22–26 அங்குலம்) நீளமுடையதாகவும், சிறகு விரிந்த நிலையில் 88–106 செ.மீ (35–42 அங்குலம்) அகலமுடையது. இதன் எடை 350–550 கிராம் ஆகும். இதன் இறகுகள் வெள்ளை நிறமுடையவை. இதன் கால்கள் நீண்டு கறுப்பாவும், விரல்கள் மஞ்சள் தோய்ந்த கருப்பு நிறத்திலும் காணப்படும். உடல் முழுவதும் தூய வெண்மை நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்க காலத்தில் உச்சந்த தலையில் கம்பிபோன்ற இரண்டு தூவிகள் சுமார் எட்டு செ.மீ. நீளம் வளர்ந்து பின் நோக்கி தொங்கும். மார்பிலும் முதுகிலும் சிறு வெண்தூவிகள் வளரும்.

நடத்தை

மாலை அந்திவேளையில் தங்கள் இருப்பிடத்தை நோக்கி கூட்டமாக 'க்வா' 'க்வா' என ஒலி எழுப்பியபடி v வடிவில் பறந்து வரும். பறக்கும்போது தன் கால்களை இணைத்து பின்னால் நீட்டி ஒரே சீராக இறக்கை அடித்துப் பறக்கும். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்களில் குச்சிகளால் கூடுகட்டி இலைதழைகளால் மெத்தென ஆக்கி முட்டை இடுகின்றன. கூட்டமாகவும், தனித்தும் கூடுகட்டும். 4 முதல் 6 முட்டைகள் வரை இடும். முட்டைகள் நீலங் கலந்த பச்சை நிறத்தில் இருக்கம். முட்டைகளை ஆண், பெண் என இரு கொக்குகளும் அடைகாக்கம். 21 முதல் 25 நாட்களில் குஞ்சிகள் வெளிவரும். குஞ்சுகள் வெள்ளை இறகுகளால் மூடப்பட்டிருக்கும், பெற்றோர்கள் இருவராலும் பராமரிக்கப்பட்டு 40 முதல் 45 நாட்களுக்குப் பிறகு அவை பறந்து செல்கின்றன.[2]

மேற்கோள்